என் மலர்
விளையாட்டு
- 43 விளையாட்டுகளில் போட்டி நடக்கிறது.
- 37 மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்டில் நாளை மறுநாள் (28-ந்தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 14-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
இதில் 37 மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 43 விளையாட்டுகளில் போட்டி நடக்கிறது.
உத்தரகாண்டில் நடைபெறும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 393 பேர் தமிழக அணி பங்கேற்கிறது. 31 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக அணியை வழியனுப்பும் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் (கிட்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடை பெற்றது.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சீருடைகள், உபகரணங்களை வழங்கினார்கள். தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கைப்பற்றி பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வாழ்த்தினார்கள். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொருளாளர் செந்தில் தியாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சுஜாதா உள் ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பார்ல்:
தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகமாக ஜோ ரூட் 78 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. பிரிட்டோரியா தரப்பில் வில் ஜாக்ஸ் 56 ரன்கள் அடித்தார்.
பார்ல் தரப்பில் ரூட், பிஜோர்ன் போர்டுயின் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி சார்பில் 20 ஓவரையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓவரையும் சுழற்பந்தாக வீசிய முதல் அணி என்ற சாதனையை பார்ல் ராயல்ஸ் படைத்துள்ளது.
- இறுதிபோட்டியில் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தினார்.
- அரையிறுதிப் போட்டியில் நம்பர் 2 வீராங்கனையை வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், பெலாரசின் அரினா சபலென்கா மோதினர்.
இதில் சபலென்காவை வீழ்த்திய மேடிசன் கீஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தினார். அரையிறுதிப் போட்டியில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீராங்கனைகளை வீழ்த்திய முதல் வீராங்கனை மேடிசன் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 165 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 166 ரன்களை எடுத்து வென்றது.
சென்னை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் பட்லர் அதிரடியாக விளையாடி 45 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பிரைடன் கார்ஸ் அதிரடியாக ஆடி 17 பந்தில் 31 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 78 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் திலக் வர்மா அதிரடியாக ஆடின் அரை சதம் கடந்தார். 6வது விக்கெட்டுக்கு திலக் வர்மா-வாஷிங்டன் சுந்தர் ஜோடி 38 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்தியா 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 72 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முல்தான்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் மோட்டி (55) மட்டுமே நிலைத்து ஆடி அரைசதமடித்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியும் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் பொறுப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார். சவுத் ஷகீல் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 154 ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வாரிகன் 4 விக்கெட்டும், மோட்டி 3 விக்கெட் வீழ்த்தினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஐ.எம். விஜயன், ஹர்விந்தர் சிங் (பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்), சத்யபால் சிங் ஆகியோருக்கு விளையாட்டுத்துறை சார்பில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ்க்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.
- சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட அணியில் சேர்க்கப்படவில்லை.
- ஒரு வித்தியாசத்திற்காவது ஒரு லெக் ஸ்பின்னரையும் சேர்த்திருக்கலாம்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது சமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உண்மையிலேயே, நான் சஞ்சு சாம்சனுக்காக வருத்தப்படுகிறேன். ஏனெனில் அவர் ரன்கள் எடுக்கும் போதெல்லாம், அவர் எப்போதும் முதலில் அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை.
நீங்கள் 15 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் ஒருநாள் போட்டி வடிவம் அவரது பேட்டிங்கிற்கு ஏற்றது. மேலும் அவரிடம் 55-56 சராசரி உள்ளது. அப்படி இருக்கும் நிலையிலும் அவர் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட சேர்க்கப்படவில்லை. இப்படியான ஒருவீரரை நீங்கள் அணியில் சேர்க்க விரும்பினால், நீங்கள் அணியில் அதற்கான ஒரு இடத்தை உருவாக்கலாம்.
மேலும் நீங்கள் 4 ஸ்பின்னர்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதில் இரண்டு வீரர்கள் இடது கை ஸ்பின்னர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் ஒரு வித்தியாசத்திற்காவது ஒரு லெக் ஸ்பின்னரையும் சேர்த்திருக்கலாம். அந்தவகையில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். இந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்காத அளவிற்கு அவர் என்ன தப்பு செய்தார் என்பது எனக்கு தெரியவில்லை.
என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
- இங்கிலாந்து தரப்பில் பட்லர் 45 ரன்கள் எடுத்தார்.
- இந்திய தரப்பில் அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் - பென் டக்கெட் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே சால்ட் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் டக்கெட் 3 ரன்னில் ஆட்டழிழந்தார்.
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பவர்பிளேயில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் அதிரடியாக விளையாடினார். இதனால் இங்கிலாந்து அணி பவர்பிளேயில் 58 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி புரூக் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பட்லர் 45 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 13, ஸ்மித் 22, ஓவர்டேன் 5 என ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் இழந்த நிலையில் மறுபக்கம் பிரைடன் கார்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
- ரிங்கு சிங் 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் மற்றொரு வீரரான ரிங்கு சிங் காயம் காரணமாக 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வீரராக சிவம் துபே, மற்றும் ரமண்தீப் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3-வது போட்டியில் இருந்து இருவரும் இந்திய அணியில் சேர்வார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் இடம் பெற்றுள்ளனர்.
- ஐசிசி டி20 தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் 8-வது இடத்தில் உள்ளார்.
- கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் டி20 வீரராக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் ஐசிசி டி20 தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் (17) வீழ்த்தியவர்களில் 2-வது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் செட்டை மேடிசனும் 2-வது செட்டை சபலென்காவும் கைப்பற்றினர்.
- முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா (பெலருசியா) மேடிசன் கீஸ் (போலந்து) ஆகியோர் மோதின.
இதில் முதல் செட்டை மேடிசனும் 2-வது செட்டை சபலென்காவும் கைப்பற்றினர். யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. இதில் மேடிசன் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனால் 3-6, 6-2, 5-7 என்ற செட் கணக்கில் மேடிசன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளார்.






