என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி: 2 மாற்றங்களுடன் இந்தியா பந்து வீச்சு தேர்வு
- முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் இடம் பெற்றுள்ளனர்.
Next Story






