என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உத்தரகாண்டில் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணிக்கு 393 பேர் தேர்வு
    X

    உத்தரகாண்டில் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணிக்கு 393 பேர் தேர்வு

    • 43 விளையாட்டுகளில் போட்டி நடக்கிறது.
    • 37 மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்டில் நாளை மறுநாள் (28-ந்தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 14-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    இதில் 37 மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 43 விளையாட்டுகளில் போட்டி நடக்கிறது.

    உத்தரகாண்டில் நடைபெறும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 393 பேர் தமிழக அணி பங்கேற்கிறது. 31 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக அணியை வழியனுப்பும் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் (கிட்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடை பெற்றது.

    தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சீருடைகள், உபகரணங்களை வழங்கினார்கள். தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கைப்பற்றி பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வாழ்த்தினார்கள். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொருளாளர் செந்தில் தியாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சுஜாதா உள் ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×