என் மலர்
விளையாட்டு
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி, அமெரிக்காவின் பாட்ரிக்-நெதர்லாந்தின் டேவிட் பெல் உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-2, 10-6 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது.
- மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயத்தை சந்தித்தார். இதனால் அவர் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹர்மிசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் பும்ரா. என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது. அதனால் தொடர் முழுவதும் விளையாடாவிட்டாலும் இறுதிப்போட்டி நடைபெறும் நாளின் காலையில் அவரை நான் அணியில் எடுப்பேன். ஏனெனில் அவர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகில் மிகவும் சிறந்தவர்.
இதுதான் இந்திய அணியின் பார்வையிலிருந்து என்னுடைய கருத்து. அது உங்களுடைய சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் உலகக்கோப்பைக்கு செல்வது போன்ற விஷயமாக இருக்கும்" முக்கியமான பும்ரா: "15 வருடங்களுக்கு முன்பாக ரெனால்டோவை நீங்கள் அணியில் இருந்து மாற்ற முடியாது. அதைத் தான் பும்ராவிடம் இந்தியா செய்யும் என்று நான் நினைக்கிறேன்.
அவர் இல்லாமல் 14 பேர் கொண்ட அணியாகும். குரூப் சுற்றுப்போட்டிகளை விளையாடுவதற்கு அவர்களை எனக்குப் போதும். அவரை நாம் அரையிறுதி விளையாட வைக்க முடியும். மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவர் பும்ரா என்பதால் மாற்று வீரர் இல்லை.
என்று கூறினார்.
- 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது.
- 2022-ம் ஆண்டு போட்டியில் தமிழக வீரர் சுப்ரமணி சிவா 5.31 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தடகளத்தில் நேற்று நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 19 வயது தேவ்குமார் மீனா 5.32 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தக்கவைத்தார்.
இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு போட்டியில் தமிழக வீரர் சுப்ரமணி சிவா 5.31 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
- கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் டி20 அணி இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தன.
- இந்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் உள்ளன.
கிரிக்கெட்டில் தலைசிறந்த அணிகளில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்த, கொண்டிருக்கும் அந்த அணியால் இதுவரை ஐசிசி டிராபியை வெல்ல முடியவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில் இந்த வருடம் ஐசிசி டிராபி வறட்சியை தென்ஆப்பிரிக்கா முடிவுக்கு கொண்டு வரும் என தென்ஆப்பிரிக்காவின் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமான கிரோம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரேம் ஸ்மித் கூறியதாவது:-
2027 உலகக் கோப்பைக்கு முன்னதாகவே, ஐசிசி சாம்பியன் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூலமாக ஐசிசி டிராபிக்காக காத்திருப்பதை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 2027 உலகக் கோப்பையை சொந்த மக்கள் முன் வென்றால், அது அற்புதமானதாக இருக்கும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் எங்கள் மைதானங்கள், ஆடுகளங்கள் மற்றும் கிரிக்கெட் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்ய விரும்புகிறோம். இதனால் 2027 உலகக் கோப்பையை நடத்தும் நேரத்தில், அதை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இருப்போம்.
இவ்வாறு கிரோம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. 2027 உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்கா நடத்துகிறது.
கடந்த ஆண்டு பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், இந்த வருட தொடக்கத்தில் பெண்களுக்கு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு அணிக்கு 401 ரன்கள் இலக்காக விதர்பா அணி நிர்ணயித்தது.
- 2-வது இன்னிங்சில் தமிழ்நாடு அணி 202 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
நாக்பூர்:
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் தமிழ்நாடு- விதர்பா அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 353 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து தடுமாறியது.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 7 ரன்னிலும், அடுத்து வந்த முகமது ஒரு ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 48 ரன்னிலும், சோனு யாதவ் 32 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்ந்தனர். முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விதர்பா தரப்பில் ஆதித்ய தாக்ரே 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் அடித்து 297 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. யாஷ் ரத்தோட் 55 ரன்னுடனும், ஹர்ஷ் துபே 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் சாய்கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா 272 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழகம் வெற்றி பெற 401 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 112 ரன்களும், ஹர்ஷ் துபே 64 ரன்களும் குவித்தனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 401 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தமிழக அணி 61.1 ஓவர்களில் 202 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் விதர்பா அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
- தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
- தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
கேப்டவுன்:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
இதில் இறுதிப்போட்டிக்கு எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் தகுதிப்பெற்றன. இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் இரு அணியின் உரிமையாளர்களான ஆகாஷ் அம்பானி மற்றும் காவ்யா மாறன் மைதானத்தில் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். பின்னர் இருவரும் அரவணைத்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து பிரிந்து சென்றனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது.
- ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பெற்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய ஜோமல் வாரிக்கன் 19 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் கொங்கடி திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதேபோல் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பெற்றார்.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோர்டா, பின்லாந்தின் ஓட்டோ விர்டானென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-6 (7-3) என செபாஸ்டியன் கோர்டா வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஓட்டோ விர்டானென் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 5 வீரரான செபாஸ்டியன் கோர்டா தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.
- இரு அணி வீரர்களும் அகமதாபாத்துக்கு சென்றடைந்தனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத்துக்கு சென்றடைந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் ஹோட்டலில் தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளம் ரசிகர் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் போடும் படி கேட்டுக்கொண்டார். மேலும் அந்த சிறுவனிடம் ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா சிறிது நேரம் உரையாடினர்.
பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வாலிடமும் ஆட்டோகிராப் வாங்கிங் கொண்டு அந்த சிறுவன் அங்கிருந்து கிளம்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
- தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகின்றனர்.
- முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 12 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
லாகூர்:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் லாகூரில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்டிங் செய்யும் போது தென் ஆப்பிரிக்க அணியின் பீல்டிங் பயிற்சியாளரான வாண்டில் குவாவு மாற்று பீல்டராக களமிறங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கான காரணம் என்னவெனில், தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடர் நடைபெற்றதால் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 12 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதன் காரணமாகவே இந்த ஆட்டத்தில் பீல்டிங் பயிற்சியாளரே மாற்று பீல்டராக களத்திற்குள் வந்துள்ளார்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.
- 2-வது இன்னிங்சின் போது மின்விளக்கு பழுதானதால் கிட்டதட்ட 35 நிமிடங்கள் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியின் போது கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்கு பழுதானது. இது குறித்து விரிவான விளக்கம் கேட்டு ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு ஒடிசா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2-வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்விளக்குகள் எரியாததால் 35 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் 2025 தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது.
- நிர்வாக குழு ஒப்புதல் வழங்கவில்லை.
அகமதாபாத்-ஐ சேர்ந்த டொரன்ட் குழுமம் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் பெரும்பாலான பங்குகளை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்ற குஜராத் அணியில் டொரண்ட் குழுமம் 67 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கேபிட்டல் பார்ட்னர்ஸ் வசம் உள்ள பங்குகளை டொரன்ட் குழுமம் வாங்கும் என்று தெரிகிறது. 2021-ம் ஆண்டு கேபிட்டல் பார்ட்னஸ் குழுமம் குஜராத் அணியில் பெரும்பாலான பங்குகளை விலைக்கு வாங்கியிருந்தது. இந்த நிலையில், கேபிட்டல் பார்ட்னர்ஸ் மற்றும் டொரண்ட் குழுமம் இடையே பங்குகளை பரிமாற்றம் செய்வதற்கான விலை குறித்து எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக இரு நிறுவனங்கள் இடையே மேற்கொள்ளப்பட வேண்டிய ஆவணம் சார்ந்த பணிகளை ஐ.பி.எல். மேற்கொண்டு வருகிறது. இதுதவிர ஐ.பி.எல். தொடரின் நிர்வாக குழு இதற்கு இன்னமும் இறுதி ஒப்புதலை வழங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் தொடங்கும் 2025 சீசன் முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய உரிமையாளராக டொரண்ட் குழுமம் உருவெடுக்கும். முன்னதாக குஜராத் அணியை விலைக்கு வாங்க கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 625 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.






