என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா?

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    எனினும், ஐ.சி.சி. இறுதிப் போட்டி என்பதால் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதை முனைப்பில் இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 2 பந்துகள் மீதிமிருந்த நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    அந்த வகையில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்றைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் நேரலையில் காணலாம்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது.
    • துபாயில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    துபாய்:

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 746 ரன்கள் அடித்துள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மேலும் 46 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

    இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், பிரான்சில் கரோலின் கார்சியா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 6-3, 6-3 என வென்று, நெதர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • இந்த போட்டி சென்னையில் இரண்டு இடங்களில் திரையிடப்பட உள்ளது.

    சென்னை:

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.

    இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் தொடரில் இந்தியா, பா கிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
    • இறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். அதில் குட் லக் டீம் இந்தியா என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் யுன்சாவ்கேட் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ செய்போத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
    • அடுத்து பேட் செய்த பெங்களூரு அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    லக்னோ:

    3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களுரு பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜார்ஜியா வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரண் நவ்கிரே 46 ரன்களும் , கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. மேகனா 12 பந்தில் 27 ரன்னும், எல்லீஸ் பெரி 28 ரன்னும், ராக்வி பிஸ்ட் 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ரிச்சா கோஷ் ஆரம்பம் முதலே சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 33 பந்தில் 69 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஸ்னே ரானா 6 பந்தில் 26 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், பெங்களூரு அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் உ.பி.வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது உ.பி.வாரியர்ஸ் பெற்ற 3வது வெற்றி ஆகும்.

    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தைவான் வீரர் லின் சுன் யீ உடன் மோதினார்.

    இதில் ஆயுஷ் ஷெட்டி 13-21, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி கேள்விக்குறியாக உள்ளது.
    • சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றால் கேப்டனாக நீடிப்பாரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு பின் கேப்டனாக தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததிலிருந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் எதிர்கால திட்டத்தை முன்வைத்து அவரை கேப்டன் பதிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்ததாக உறுதியான தகவல் வெளியாகி இருந்தன.

    தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. நாளை நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

    ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. மேலும் ஓய்வு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

    நாளைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து புதிதாக ஆலோசனை நடத்தப்படும்.

    இந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இது தொடர்பாக கூறியதாவது:-

    தற்போது வரை நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றது குறித்தும், சாம்பியன் டிராபியில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளளோபம். ரோகித் சர்மா என்னிடமோ அல்லது அணியிடமோ அவருடைய ஓய்வு குறித்து ஏதும் பேசவில்லை. ரோகித் சர்மா அப்படி ஒரு நினைப்பில் இருப்பதுபோல் எனக்குத் தோன்றவில்லை.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    கேப்டன் பதவி இல்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு ரோகித் சர்மா விளையாட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது.
    • நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள்.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 10 அணிகளில் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் முன்னணி அணிகளில் ஒன்று. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

    10 அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில் "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது. நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள். இந்திய அணியில் விளையாடுவதற்காக செல்வீர்கள்" என்றார்.

    சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணி கேப்டனாக உள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தனி தொடக்க போட்டியில் வருகிற 23-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்தார்.
    • 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மாற்று வீரரான ஒப்பந்தம் செய்திருந்தது.

    ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லிசாட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு தென்ஆப்பிரிக்கா வீரரான கார்பின் போஸ்ச்-ஐ மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.

    கார்பின் போஸ்ச் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ஒரேயொரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ஜே இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக விலகியதால் போஸ்ச் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக செயல்பட்டிருந்தார். பின்னர் 2022-ஆம் சீசனில் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் காயத்தால் விலகியபோது அந்த அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஆடும் லெவன் அணியில் விளையாடவில்லை.

    • விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது.
    • கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினாய் என்று விராட் கோலி என்னை பாராட்டியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்" என்று பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது மனம் திறந்து பேசியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அப்ரார் அகமது, "விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது. அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய பந்தில் முடிந்தால் சிக்ஸ் அடியுங்கள் என்று நான் அவரை சீண்டினேன். ஆனால் அவர் ஒருபோதும் கோவப்படவில்லை. கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம் நீ நன்றாக பந்துவீசினாய் என்று தெரிவித்தார். அவருடைய பாராட்டு என்னை மகிழ்ச்சியடைய செய்தது" என்று தெரிவித்தார்.

    ×