என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
    • நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் பூரன் தான் முதலிடத்தில் இருந்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

    அதிரடி ஆட்டக்காரனான நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்தாண்டு நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார்.

    சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் IPL, CPL, MLC போன்ற FRANCHISE கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது

    • ஷ்ரேயாஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றார்.
    • 2024-ம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார்.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கேப்டனாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார். 2024-ம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் சாம்பியன் பட்டமும் பெற வைத்தார். தற்போது பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனுக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் கேப்டன்சி குறித்து Cricbuzz-யிடம் பேட்டியளித்த ஸ்ரேயாஸ், "கேப்டன்சி நிறைய முதிர்ச்சியையும் பொறுப்பையும் கொண்டு வருகிறது. அணிக்கு சிறந்த முறையில் பங்களிக்க வேண்டும் என்று உங்களை எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் ஒரு அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் எப்போதும் கேப்டனை நோக்கி தான் வருவார்கள். நான் 22 வயதிலிருந்தே கேப்டனாக இருந்து வருவதால், எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். நான் அப்படியான தருணங்களை ரசித்திருக்கிறேன். கேப்டனாக வழிநடத்துவதை விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    • பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை
    • லக்னோ அணி இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம்.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக (ரூ.27 கோடி ) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப்பண்ட் தனது மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    இந்நிலையில், ரிஷப் பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "தன்னை பொருத்த வரை ரிஷப்பை அணியில் இருந்து விடுவித்து விட்டு மினி ஏலத்தில் ரூ.14 அல்லது ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கலாம். மீதமுள்ள தொகையை வைத்து இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம். அதன்மூலம் நீங்கள் அடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியாக மாறலாம்" என்று தெரிவித்தார்.

    • 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் அருண் கார்த்திக் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

    9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (ஜூன் 9, 2025) நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

    முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கே. ஆஷிக் அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பாபா அபராஜித் 41 ரன்களும், ஸ்வப்னில் சிங் 14 பந்துகளில் அதிரடியாக 45 ரன்களும் எடுத்தனர். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சேப்பாக் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    கேப்டன் அருண் கார்த்திக் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். முகமது அட்னான் கான் 27 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இருப்பினும், இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது நெல்லை ராயல் கிங்ஸ். இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் புள்ளிப் பட்டியலில் முன்னேறி உள்ளது.  

    • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
    • சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு இந்த மரியாதையைப் பெற்ற முதல் இந்தியர்கள் ஆவர்.

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

    இந்த வருட ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் தோனி, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று (ஜூன் 9) ICC அறிவித்துள்ளது.

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

    சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு இந்த மரியாதையைப் பெற்ற முதல் இந்தியர்கள் ஆவர். இந்த அறிவிப்பு தோனியின் 44வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வந்துள்ளது மேலும் சிறப்பு பெறுகிறது.

    இதன்படி தற்போது, ICC ஹால் ஆஃப் ஃபேமில், எம்.எஸ். தோனி, நீது டேவிட், வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி, வினூ மங்கட், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கபில் தேவ், பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர் ஆகிய இந்திய வீரர்கள் இதுவரை இடம்பெற்றுள்ளனர்.

    இந்த கௌரவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தோனி, "உலகம் முழுவதிலுமிருந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் பெயர் இடம்பெற்றிருப்பது ஒரு மரியாதை.

    இதுபோன்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரையும் நினைவுகூருவது ஒரு அற்புதமான உணர்வு. இது நான் என்றென்றும் போற்றும் ஒரு கௌரவம்" என்று கூறியுள்ளார். 

    • பாபா அபராஜித் 29 பந்தில் 41 ரன்களும், கே. ஆஷிக் 38 பந்தில் 54 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
    • ஸ்வப்னில் சிங் 14 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 45 ரன்கள் விளாசினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 6ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கே. ஆஷிக், மோஹித் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரிகரன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆஷிக் உடன் கேப்டன் பாபா அபராஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    பாபா அபராஜித் 29 பந்தில் 41 ரன்களும், கே. ஆஷிக் 38 பந்தில் 54 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என். ஜெகதீசன் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    17 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்திருந்தது. 18ஆவது ஓவரை உதய் குமார் வீசினார். இந்த ஓவரில் ஸ்வப்னில் சிங் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு 25 ரன்கள் கிடைத்தது. இதனால் 181 ரன்கள் குவித்தது.

    19ஆவது ஓவரை சோனு யாதவ் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் அடித்தது. இதனால் 196 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரை வெள்ளியப்பன் யூதீஸ்வரன் வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் விளாசிய ஸ்வப்னில் சிங் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 45 ரன்கள் விளாசினார். ஆவது பந்தில் அபிஷேன் தன்வர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் அவுட் உடன் ஒரு ரன் கிடைத்தது. மொத்தமாக 16 ரன்கள் கிடைத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 212 ரன்கள் குவித்துள்ளது. விஜய் சங்கர் 24 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:-

    என். ஜெகதீசன், பாபா அபராஜித், அபிஷேக் தன்வர், எஸ் தினேஷ் ராஜ், சுனில் கிருஷண்னா, மோஹித் ஹரிகரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், எம். சிலம்பரசன், கே. ஆஷிக்.

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
    • நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 6ஆவது போட்டி கோவையில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தெர்வு செய்துள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:-

    என். ஜெகதீசன், பாபா அபராஜித், அபிஷேக் தன்வர், எஸ் தினேஷ் ராஜ், சுனில் கிருஷண்னா, மோஹித் ஹரிகரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், எம். சிலம்பரசன், கே. ஆஷிக்.

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்

    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலியாகினர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.

    ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிப்பதற்காக அங்கு மக்கள் ஏராளமானோர் கூடினர்.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் 11 பேர் பலியான சம்பவத்தில் புதிதாக கைது நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த சம்பவத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என ஆர்சிபி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ஜூன் 11-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்வரை ஆர்சிபி அணி நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சேப்பாக் அணி தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
    • நெல்லை அணி முதல் ஆட்டத்தில் திருச்சி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    கோவை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 5 ஆட்டங்கள் முடிந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் புள்ளி எதுவும் பெறவில்லை.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நெல்லையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    4 முறை சாம்பியனான அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் பாபா அபராஜித், விஜய் சங்கர், ஜெகதீசன், மோகித் ஹரிகரன், அபிஷேக் தன்வர், சுவப்னில் சிங் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட்ஸ் சோழாசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அந்த அணியும் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

    நெல்லை அணியில் கேப்டன் அருண் கார்த்திக், சந்தோஷ்குமார், ஹரீஷ், சோனு யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    • ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது
    • சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

    ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணியை தடை செய்வது ஒன்றும் புதிதல்ல. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
    • சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • முதல் பாதியில் ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 69வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.

    வலுவான ஸ்பெயின் அணி பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

    ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. மார்ட்டின் ஜூபி மெண்டி இந்த கோலை அடித்தார். போர்ச்சுகல் வீரர் நுனோ மென்டிஸ் 26-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார். 45-வது நிமிடத்தில் மைக் கேல் ஒயர்சபல் ஸ்பெயின் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கணக் கில் முன்னிலை பெற்றது.

    61-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்து சமன்செய்தார். சர்வதேச அளவில் அவரது 138-வது கோலாகும். இதன் மூலம் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை இரு அணிகளாலும் அடிக்க முடியவில்லை.

    இதை தொடர்ந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளிலும் போர்ச்சுக்கல் கோல் அடித்தது. ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்தது. இதனால் போர்ச்சுக்கல் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது முறையாக இந்த பட்டத்தை வென்றது.

    ×