என் மலர்
விளையாட்டு
- 3வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் தொடங்குகிறது.
- இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் இன்று தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களான சீனாவின் லி யுஹோங், 20 வயதான ஷெங் லிஹாவ், ஸி யு உள்ளிட்ட ஜாம்பவான்கள் களம் காண்கின்றனர்.
இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் கைப்பற்றிய சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே ஆகியோரும் அடங்குவர்.
ஒலிம்பிக்கில் இரண்டு முறை கலந்துகொண்டவரான தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளவேனில் மற்றும் தேசிய சாம்பியன் அனன்யா நாயுடு (பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஆதித்யா மால்ரா, நிஷாந்த் ரவாத் (ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்) ஆகியோர் முதல் முறையாக உலக போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
பியூனஸ் அயர்சில் நடந்த முதலாவது சீசனில் இந்தியா 4 தங்கம் உள்பட 8 பதக்கமும், லிமாவில் நடந்த 2-வது சீசனில் இந்தியா 7 பதக்கமும் அறுவடை செய்தது.
ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த மனு பாக்கர் உலக போட்டியிலும் சாதிப்பாரா என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
- முதல் இரு செட்டை சின்னரும், அடுத்த இரு செட்டை அல்காரசும் கைப்பற்றினர்.
- ஐந்தாவது செட்டும் அனுமார் வால்போல் நீண்டு கொண்டே போனது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதினார்.
முதல் இரு செட்டை சின்னரும், அடுத்த இரு செட்டை அல்காரசும் கைப்பற்றினர்.
அனுமார் வால்போல் நீண்டு கொண்ட போன இந்த செட்டிலும் முடிவை அறிய டைபிரேக்கர் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இதில் சாதுர்யமாக ஆடிய அல்காரஸ் வெற்றிக்கனியை பறித்தார்.
சுமார் 5 மணி 29 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் அல்காரஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் சின்னரை தோற்கடித்து பிரெஞ்சு ஓபனை தக்க வைத்துக் கொண்டார்.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டியாக இது பதிவானது. அதாவது பிரெஞ்சு ஓபனில் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த முதல் இறுதி ஆட்டம் இது தான்.
22 வயதான அல்காரசுக்கு இது 5-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. அவருக்கு ரூ.24¾ கோடியும், 2-வது இடம் பிடித்த சின்னருக்கு ரூ.12½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
- இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
நார்த்தம்டான்:
இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டானில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவரில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங், ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக எமிலோ ஹே 71 ரன் எடுத்தார்.
இந்தியா ஏ சார்பில் கலீல் அகமது 4 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே, கம்போஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 21 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை ஆடியது. கே.எல்.ராகுல் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பொறுப்புடன் ஆடி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய ஏ அணி 184 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
- இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அபார வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் இரு செட்களை 6-4, 7-6 (7-4) என வென்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-3) என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை என 7-6 (10-2) கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.
இந்தப் போட்டி சுமார் ஐந்தரை மணி நேரம் நடைபெற்றது. கடந்த ஆண்டும் பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்கள் எடுத்தார்.
லண்டன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்னும், ஜான்சன் சார்லஸ் 47 ரன்னும், ரோவ்மன் பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் லூக் வுட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 18.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 34 ரன்னும், பென் டெக்கெட், டாம் பாண்டன் தலா 30 ரன்கள் எடுத்தனர். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. லூக் வுட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
- பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- திருப்பூர் அணியின் அசத்தல் பந்துவீச்சால் திண்டுக்கல் 93 ரன்னுக்கு சுருண்டது
- திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 65 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி சார்பில் கணேசன் பெரியசாமி 1 விக்கெட் வீழ்த்தினார்.
- சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் அஸ்வின் ஆட்டமிழந்தார்.
- அஸ்வின் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது.
இப்போட்டியில் சிறப்பான ஆடிய அஸ்வின், சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். ரீபிளேவில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏற்கனேவே 2 ரெவியூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரெவியூ எடுக்க முடியவில்லை.
இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது தொடையை அடித்தார். பின்னர் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
- திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.
திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கவுள்ளது.
- ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர்
- இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.
இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், ரிங்கு சிங், சமாஜ்வாதி எம்.பி. பிரியா சரோஜின் திருமணம் நவம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது.
இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நவம்பர் 18 அன்று திருமண தேதி குறித்துள்ளதாகவும், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் பிரியாவின் தந்தை தூஃபானி சரோஜ் தெரிவித்தார்.
ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.
25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக விளையாடிய சேலம் வீரர் ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.
சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மதுரை தரப்பில் முருகன் அஷ்வின், குர்ஜப்னீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்
- சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.
சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கவுள்ளது.






