என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
    • முதல் காலிறுதி போட்டியில் உத்தரகாண்ட் அணி வெற்றி பெற்றது.

    ஜாம்ஷெட்பூர்:

    ஜாம்ஷெட்பூரில் நடந்த முதல் அரையிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆதித்யா சிங் 83 ரன்னிலும், கேப்டன் விராட் சிங் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    உத்தராண்ட் சார்பில் ஜென்மெஜாய் ஜோஷி 4 விக்கெட்டும், ஆதித்யா ராவத், மயங்க் மிஸ்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய உத்தரகாண்ட் அணி 371 ரன்கள் குவித்தது. ஜெகதீஷ் ச்சித் 70 ரன்னும், குனால் சண்டேலா 68 ரன்னும், அவ்னீஷ் சுதா 64 ரன்னும், அபய் நேகி 47 ரன்னும் எடுத்தனர்.

    136 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸ் போல் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் விராட் சிங் 55 ரன்னும், குமார் குஷாரா 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஜார்க்கண்ட் அணி 2-வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தரகாண்ட் அணி அரையிறுதிக்கும் தகௌதி பெற்றது.

    உத்தரகாண்ட் சார்பில் மயங்க் மிஸ்ரா 5 விக்கெட்டும், அபய் நேகி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்

    • டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் 19 பந்தில் 44 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 19.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    இலங்கை சார்பில் ஹசரங்கா, தீக்ஷனா தலா 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மார்க் அடேர் மற்றும் பாரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
    • ஸ்பின்னர் ஜார்ஜ் டோக்ரெல் சிக்கனமாகப் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

    2026-ம் ஆண்டு ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில், அயர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இன்னிங்ஸின் நடுப்பகுதியில் அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு இலங்கை அணியைக் கட்டுப்படுத்தினர் (ஒரு கட்டத்தில் 87/4).

    இருப்பினும், கடைசி ஓவர்களில் கமிந்து மெண்டிஸின் அதிரடி மற்றும் குசல் மெண்டிஸின் அரைசதம் காரணமாக இலங்கை அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது.

    தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா மற்றும் கமில் மிஷாரா நிதானமான தொடக்கத்தைத் தந்தனர்.

    கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 44 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) குவித்து அணியின் ஸ்காரை உயர்த்தினார்.

    மார்க் அடேர் மற்றும் பாரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்பின்னர் ஜார்ஜ் டோக்ரெல் சிக்கனமாகப் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

    இந்நிலையில், 164 வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.

    • சிராஜ் முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.
    • மாட்ரிட் புறப்பட இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    முதலில் டி20 உலகக்கோப்பையில் சிராஜ் இடம்பெறவில்லை. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார். கடைசி நேரத்தில் அணியில் இடம்பிடித்த முகமது சிராஜ் முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

    இதுகுறித்து நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய முகமது சிராஜ், கடைசி நிமிடத்தில் தான் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னை தொடர்பு கொண்டு உடனே கிளம்பி வரச் சொன்னதாக தெரிவித்தார். இந்த நிலையில், முகமது சிராஜ் அடுத்த வாரம் மாட்ரிட் புறப்பட இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

    மாட்ரிட் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் லாலிகா போட்டியை நேரில் காண முகமது சிராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடித்த ஹர்ஷித் ராணா காயமடைந்தார், அணியில் உள்ள பும்ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கடைசி கட்டத்தில் முகமது சிராஜூக்கு அணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

    கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட முகமது சிராஜ் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் எடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ரியல் மாட்ரிட் போட்டியை பார்க்க திட்டமிட்ட ஒருவர், சொந்த ஊரில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது கடவுளின் திட்டம் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

    • இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • நேபாளம் அணியின் தீபிந்திர சிங் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இணைந்து நடத்தும் தொடரின் 5வது போட்டியில் நேபாளம் மற்றும் இங்கிலாந்து அணிகள் களம்கண்டன. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி நேபாளம் அணியின் அபாரமான பந்துவச்சில் சற்றே தடுமாறியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 1 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ஜேக்கப் பெத்தெல் 55 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஹாரி ப்ரூக் அபாரமாக ஆடி 53 ரன்களையும் (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) வில் ஜாக்ஸ் 18 பந்துகளில் 39 ரன்களை (1 பவுண்டரி, 4 சிக்சர்கள்) எடுத்தார்.

    இதன் காரணமாக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபிந்திர சிங், நந்தன் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷெர் மல்லா, சந்தீப் லமிஷேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    185 ரன்களை துரத்திய நேபாளம் அணிக்கு ஆசிஃப் ஷேக் (7), குஷல் 29 ரன்கள் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்), கேப்டன் ரோகித் பௌடெல் 39 ரன்கள் (2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) , தீபிந்திர சிங் 44 (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) ரன்களை அடித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் நேபாளம் அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது.

    நேபாளம் சார்பில் லோகேஷ் பாம் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நேபாளம் அணி 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் உருவானது. கடைசி ஓவர்களில் லோகேஷ் மற்றும் கரண் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் லேகேஷ் பாம் 1 ரன் எடுக்க நேபாளம் அணி போராடி தோல்வியை தழுவியது. இதனால் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

    • இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தல் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார்.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இணைந்து நடத்தும் தொடரின் 5வது போட்டியில் நேபாாளம் மற்றும் இங்கிலாந்து அணிகள் களம்கண்டன. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி நேபாளம் அணியின் அபாரமான பந்துவச்சில் சற்றே தடுமாறியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 1 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (26), டாம் பேன்டன் (2), சாம் கர்ரன் (2) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ஜேக்கப் பெத்தெல் 55 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் அபாரமாக ஆடி 53 ரன்களை (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) சேர்த்தார். கடைசியில் வில் ஜாக்ஸ் தன் பங்கிற்கு 18 பந்துகளில் 39 ரன்களை (1 பவுண்டரி, 4 சிக்சர்கள்) எடுத்தார்.

    20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்துள்ளது. நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபிந்திர சிங், நந்தன் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷெர் மல்லா, சந்தீப் லமிஷேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
    • மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

    சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் "விசில்" எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ தரப்பில் விசிலுக்கு தடை குறித்த அதிகாரப்பூர்வ விதிமுறை எதுவும் இல்லை. எனினும், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், காவல் துறை மற்றும் மைதான நிர்வாகம் தரர்பில் இப்படி தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • நியூசிலாந்து அணிக்கு க்ளென் பிலிப்ஸ் 42 ரன்கள் எடுத்தார்.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இணைந்து நடத்தும் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் களம்கண்டன. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி ஆரம்பத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணி ரன்குவிப்பில் தீவிரம் காட்டியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குர்பாஸ் (22 பந்துகளில் 27 ரன்கள்) மற்றும் இப்ராகிம் சத்ரான் (12 பந்துகளில் 10 ரன்கள்) எடுத்தனர். அடுத்து வந்த குலாப்தின் நயிப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    மொத்தம் 35 பந்துகளை எதிர்காண்ட நயிப் 63 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். அடுத்து வந்த வீரர்கள் கணிசமாக ரன் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட், லாக்கி ஃபெர்குசன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 183 எனும் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலென் 1 ரன்னுக்கும், அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா டக் அவுட் ஆகியும் வெளியேறினர். துவக்கத்திலேயே விக்கெட் இழந்த போதிலும் டிம் செய்ஃபர்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 42 பந்துகளில் 65 ரன்கள் (7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.

    இவருடன் ஆடிய க்ளென் பிலிப்ஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் (7 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன் (28), டேரில் மிட்செல் (25), மிட்செல் சான்ட்னர் (17) ரன்களை அடிக்க நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் நயிப் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார்.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இணைந்து நடத்தும் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் களம்கண்டன. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி ஆரம்பத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணி ரன்குவிப்பில் தீவிரம் காட்டியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குர்பாஸ் (22 பந்துகளில் 27 ரன்கள்) மற்றும் இப்ராகிம் சத்ரான் (12 பந்துகளில் 10 ரன்கள்) எடுத்தனர். அடுத்து வந்த குலாப்தின் நயிப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    மொத்தம் 35 பந்துகளை எதிர்காண்ட நயிப் 63 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். அடுத்து வந்த வீரர்கள் கணிசமாக ரன் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்துள்ளது.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட், லாக்கி ஃபெர்குசன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 183 எனும் இலக்கை துரத்துகிறது.

    • இந்திய அணி அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
    • ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவை முந்தி இந்திய அணி புதிய சாதனை

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இதன் மூலம் உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. 2024-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது அமெரிக்காவை தோற்கடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 9-வது வெற்றியை பெற்றது.

    இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன. இந்திய அணி அவைகளை முந்தி சாதனை புரிந்தது.

    ஆஸ்திரேலியா 2022-2024-ம் ஆண்டு உலக கோப்பைகளில் தொடர்ச்சியாக 8 வெற்றியையும், தென் ஆப்பிரிக்கா 2024-ல் 8 வெற்றியையும் பெற்று இருந்தன.

    இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றி மேலும் தொடரலாம் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ச்சியான வெற்றி அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

    • T20 உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • இந்தியாவில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் விளையாடுவது என் கனவு.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கஅணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். முதலில் டி20 உலகக்கோப்பையில் சிராஜ் இடம்பெறவில்லை. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார்.

    போட்டிக்கு பிறகு பேசிய சிராஜ், "சூர்யா எனக்கு கால் செய்து உடனே அணியில் சேருங்கள் என்றார்.. விளையாடாதீர்கள் என்றேன். அவர் கிண்டல் செய்கிறார் என நினைத்தேன். இந்தியாவில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் விளையாடுவது என் கனவு. அது எழுதப்பட்டிருந்தது. அதனால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், RCB கிரிக்கெட் அணியை வாங்குவதற்கு, உலகப்புகழ் பெற்ற Manchester United கால்பந்து கிளப்பின் உரிமையாளரான கிளேசர் குடும்பம் ரூ.16,300 கோடி ($1.8 பில்லியன்) ஆஃபர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் IPL மற்றும் WPL என இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்ற RCBயின் மதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், தற்போதைய உரிமையாளரான Diageo-விடம் கிளேசர் குடும்பம் பிரமாண்ட தொகையை முன்மொழிந்துள்ளது.

    ×