என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.

    இதனால் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக முகமது சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • ஜானிக் சின்னர் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதனையடுத்து விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்களுக்கான விருந்து நிகழ்வில் நடனமாடிய ஜன்னிக் சின்னர் மற்றும் இகா ஸ்வியாடெக் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விம்பிள்டன் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

    • முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
    • 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

    ஆஸ்திரேலியா 181 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் சரிந்தன.

    • MI நியூயார்க் அணியில் அதிகபட்சமாக டீகாக் 77 ரன்கள் அடித்தார்
    • வாஷிங்டன் அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 70 ரன்கள் அடித்தார்

    MLC டி20 தொடரின் இறுதிப்போட்டியில் MI நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய MI நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டீகாக் 77 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    கடைசி ஒவரில் வாஷிங்டன் அணி வெற்றி பெற 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், MI நியூயார்க் பவுலர் ருஷி உகர்கர் அந்த ஓவரில் 1 விக்கெட் எடுத்து 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். 

    • இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
    • பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சி அணி

    FIFA கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

    நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.

    இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி பிபா க்ளப் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. 

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதனையடுத்து விம்பிள்டனின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், "விம்பிள்டன் நாயகன்' என்ற தலைப்பில் ஜானிக் சின்னர் கோப்பையுடன் மக்களிடம் செல்பி எடுப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    ஜனநாயகன் படத்தில் விஜய் மக்களிடம் செல்பி எடுப்பது போன்ற போஸ்டரை ரெபரென்ஸாக பயன்படுத்தி இந்த போஸ்டரை விம்பிள்டன் வடிவமைத்துள்ளது. இந்த போஸ்டர் தமிழ்நாட்டில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 


    • இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய பவுலர்கள் எதிரணி வீரர்களை 12 முறை கிளீன் போல்டாக்கி (முதல் இன்னிங்சில் 5, இரண்டாவது இன்னிங்சில் 7) மிரள வைத்திருக்கிறார்கள்.

    ஒரு டெஸ்டில் இந்திய பவுலர்கள் அதிக முறை போல்டு முறையில் விக்கெட் வீழ்த்திய டெஸ்டாக இது மாறியிருக்கிறது.

    இதற்கு முன் அதிகபட்சமாக 10 முறை ஸ்டம்பை தகர்த்து இருந்தனர். இதேபோல், 1955-ம் ஆண்டுக்கு பிறகு அதிகம் பேரை போல்டாக்கிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் குடராமெட்ரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் வெரோனிகா குடராமெட்ரோவா-பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டென்ஸ் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ-தைவானின் சு-வெய் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய குடராமெட்ரோவா ஜோடி 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • சாய்னா 2023-ல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார்.

    ஐதராபாத்,

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

    இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டுள்ளார். பிரிவதற்கான காரணம் குறித்து சாய்னா எதுவும் தெரிவிக்கவில்லை.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப் போட்டியில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் தலா 44 ரன்களில் வெளியேறினர்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதம் கடந்து 100 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 74 ரன்னிலும், ஜடேஜா அரை சதம் கடந்து 72 ரன்னில் வெளியேறினார். நிதிஷ்குமார் 30 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்திய அணி துல்லியமாக பந்து வீசியது. ஜோ ரூட் 40 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கருண் நாயர் 14 ரன்னும் சுப்மன் கில் 6 ரன்னும், ஆகாஷ் தீப் ஒரு ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    நான்காம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா வெற்றி பெற 135 ரன்னும், இங்கிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டும் தேவைப்படுவதால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 15.1 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.

    தம்புல்லா:

    வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 76 ரன்னில் அவுட்டானார். ஷமிம் ஹொசைன் 48 ரன்னும், தவ்ஹித் ஹிருடோய் 31 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் பினுரா பெர்னாண்டோ 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 32 ரன்னும், டாசன் ஷனகா 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இலங்கை அணி 15.2 ஓவரில் 94 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேசம் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமனிலை செய்தது.

    வங்காளதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், மொஹமது சைபுதின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது லிட்டன் தாசுக்கு அளிக்கப்பட்டது.

    ×