என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லார்ட்ஸ் டெஸ்டில் அதிக முறை போல்டாக்கி இந்தியா சாதனை
    X

    லார்ட்ஸ் டெஸ்டில் அதிக முறை போல்டாக்கி இந்தியா சாதனை

    • இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய பவுலர்கள் எதிரணி வீரர்களை 12 முறை கிளீன் போல்டாக்கி (முதல் இன்னிங்சில் 5, இரண்டாவது இன்னிங்சில் 7) மிரள வைத்திருக்கிறார்கள்.

    ஒரு டெஸ்டில் இந்திய பவுலர்கள் அதிக முறை போல்டு முறையில் விக்கெட் வீழ்த்திய டெஸ்டாக இது மாறியிருக்கிறது.

    இதற்கு முன் அதிகபட்சமாக 10 முறை ஸ்டம்பை தகர்த்து இருந்தனர். இதேபோல், 1955-ம் ஆண்டுக்கு பிறகு அதிகம் பேரை போல்டாக்கிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    Next Story
    ×