என் மலர்
விளையாட்டு
- விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3வது இடம் பிடித்தார்.
- அனிசிமோவா 5 இடங்கள் முன்னேறி முதல் முறையாக டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.
விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமென்டா அனிசிமோவா 5 இடம் முன்னேறி சிறந்த தரநிலையாக 7-வது இடம் பிடித்துள்ளார்.
- பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
- இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 5 இடங்கள் பின் தங்கி 11-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனைகளுக்கான டி20 தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் 2-ம் இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 9-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேசமயம் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் பின் தங்கிய 10-ம் இடத்தையும், டேனியல் வையட் ஹாட்ஜ் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தையும், இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடங்கள் பின் தங்கி 14-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் சதியா இக்பால் முதல் இடத்தில் தொடரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஒரு இடம் முன்னேறி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 5 இடங்கள் பின் தங்கி 11-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ராதா யாதவ் 3 இடங்கள் முன்னேறி 15-ம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி அறிமுக வீராங்கனை ஸ்ரீ சாரணி 49 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.
- இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
- இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
இதேபோல இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள், இங்கிலாந்தின் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மன்னரை சந்தித்தது குறித்து பிசிசிஐ தலைவர் சுக்லா கூறியதாவது:- லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி தொடர்பாக நாங்கள் மன்னருடன் கலந்துரையாடினோம்... முகமது சிராஜ் ஆட்டமிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மன்னர் கூறினார்; இல்லையெனில், இந்தியா இந்தப் போட்டியில் வென்றிருக்கலாம்... இந்திய அணி போராளிகள் என்பதை நிரூபித்துள்ளது... நாங்கள் தொடரை வெல்வோம் என மன்னரிடம் சுக்லா கூறியுள்ளார்.
- முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய சோயிப் பஷீருக்கு மாற்றுவீரராக லியாம் டாசன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராவ்லி, லியாம் டாசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டாங், கிறிஸ் வோக்ஸ்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 27 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 80 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்களில் ஆல் அவுட்டாகி 202 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 14.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1955-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு ஆல் அவுடானதே மோசமான சாதனையக இருந்து வருகிறது.
இதற்கடுத்த மூன்று குறைந்தபட்ச ஸ்கோரை தென் ஆப்பிரிக்க அணி பதிவுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி 1896-ம் ஆண்டு இங்கிலாந்துகு எதிராக 30 ரன்களிலும், 1924-ம் ஆண்டு 30 ரன்னிலும், 1899-ம் ஆண்டு 35 ரன்களிலும் என ஒரு இன்னிங்சில் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாக பெண் குற்றம் சாட்டினார்.
- இதனையடுத்து யாஷ் தயாள் மீது உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அலகாபாத்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். மேலும் இதுகுறித்து, அம்மாநில முதல்-அமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்தார்.
அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அத்துடன் தன்னிடம் யாஷ் தயாளுடனான சேட்கள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து உத்தரபிரதேச காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து யாஷ் தயாள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69 இன் கீழ் (திருமணம் குறித்த தவறான வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்படும் பாலியல் செயல்களைப் பற்றியது) உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை இன்று நடைபெற்றது.
இதில், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணையின் போது, நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் நீதிபதி அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஒருவரை ஐந்து வருடங்களுக்கு ஏமாற்ற முடியாது" என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டது.
"உங்களை ஒரு நாள், 2 நாள், 3 நாள் ஏமாற்றியிருக்கலாம்... ஆனால் 5 வருடங்கள்... நீங்கள் 5 வருடங்களாக ஒரு உறவில் நுழைகிறீர்கள்... 5 வருடங்களாக ஒருவரை ஏமாற்ற முடியாது என கூறி கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
- 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து முன்னணி வீரரான ஷோயப் பஷீர் விலகி உள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்டின் போது பஷீரின் இடது கைவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள்.
- 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.
ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி வரை போராடியதற்காக இந்திய அணியை சச்சின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள். நன்றாக முயற்சித்தார்கள். இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்தது. அவர்கள் விரும்பிய முடிவை ஏற்படுத்திக் கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்தியாவின் தோல்வியால் முன்னாள் கேப்டன் கங்குலி ஏமாற்றம் அடைந்து உள்ளார். அவர் கூறும் போது, "என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. ஆனால் இந்திய அணி வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிக் கிறது. வெல்ல வேண்டிய வாய்ப்பை தவறவிட்டு விட்டோம். 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்" என்றார்.
- ஜடேஜாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்காவிட்டாலும் அவர் சிறப்பாக ஆடினார்.
- 5 நாட்களும் போராடியதை எண்ணி பெருமை கொள்கிறோம்
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.
ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில், "பண்ட்டின் ரன் அவுட், ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. ஜடேஜாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்காவிட்டாலும் அவர் சிறப்பாக ஆடினார்.
வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். இலக்கு பெரிய ஸ்கோர் இல்லையென்பதால், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்திற்குள் வந்துவிடுவோம் என நினைத்தோம். 5 நாட்களும் போராடியதை எண்ணி பெருமை கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
- 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருதையும் ஸ்டார்க் வென்றார்.
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 176 ரன்கள் வித்தியாசத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது. 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், தொடர் நாயகன் விருதையும் ஸ்டார்க் வென்றார்.
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஸ்டார்க் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக (15 பந்துகளில்) 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்டார்க் படைத்தார். ஸ்டார்ட் வீசிய முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளையும் 3 ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும், மிட்செல் ஸ்டார்க் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். க்ளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
- தனது 2 ஆவது ஓவரை வீசிய போலண்ட் முதல் 3 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தினார்.
- ஜஸ்டின் கிரீவ்ஸ், சமார் ஜோசப், ஓரிகன் ஆகியோரின் விக்கெட்டுகளை போலண்ட் வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 176 ரன்கள் வித்தியாசத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது.
இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலண்ட் அசத்தினார். 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்திருந்த நிலையில் தனது 2 ஆவது ஓவரை வீசிய போலண்ட் முதல் 3 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தினார். ஜஸ்டின் கிரீவ்ஸ், சமார் ஜோசப், ஓரிகன் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.
இதன்மூலம் இதன் மூலம் டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 10வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை போலண்ட் பெற்றுள்ளார்.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது.
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 176 ரன்கள் வித்தியாசத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது. 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் வென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.






