என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sexual accusation"

    • கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாக பெண் குற்றம் சாட்டினார்.
    • இதனையடுத்து யாஷ் தயாள் மீது உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

    அலகாபாத்:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். மேலும் இதுகுறித்து, அம்மாநில முதல்-அமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்தார்.

    அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அத்துடன் தன்னிடம் யாஷ் தயாளுடனான சேட்கள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இது குறித்து உத்தரபிரதேச காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து யாஷ் தயாள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69 இன் கீழ் (திருமணம் குறித்த தவறான வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்படும் பாலியல் செயல்களைப் பற்றியது) உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை இன்று நடைபெற்றது.

    இதில், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணையின் போது, நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் நீதிபதி அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஒருவரை ஐந்து வருடங்களுக்கு ஏமாற்ற முடியாது" என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டது.

    "உங்களை ஒரு நாள், 2 நாள், 3 நாள் ஏமாற்றியிருக்கலாம்... ஆனால் 5 வருடங்கள்... நீங்கள் 5 வருடங்களாக ஒரு உறவில் நுழைகிறீர்கள்... 5 வருடங்களாக ஒருவரை ஏமாற்ற முடியாது என கூறி கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • திருச்சியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் ஆங்கிலத்துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
    • இதனால் கல்லூரியில் இறுக்கமான சூழல் நிலவுகிறது.

    திருச்சி :

    திருச்சியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் ஆங்கிலத்துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தி, மாணவியின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.

    இருப்பினும் பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே முதல்வர், பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக பேராசிரியர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இந்த சூழலில் மாணவிக்கு ஆதரவாக ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பும், பேராசிரியருக்கு ஆதரவாக எஸ்.சி., எஸ்.டி பேராசிரியர்கள் சங்கமும் களம் இறங்கியுள்ளன. இதனால் கல்லூரியில் இறுக்கமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் ஆங்கிலத் துறைப் பேராசிரிய பேராசிரியைகள் அனைவரும் (17 பேர்) கல்லூரி முதல்வரைச் சந்தித்து துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் துறைத் தலைவராக இருப்பதை விரும்பவில்லை என்றும் புகார் மனு அளித்தனர். இதனால் மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ×