என் மலர்
விளையாட்டு
- இரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கியது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும், லார்ட்சில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்றன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் கருண் நாயர், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சாய் சுதர்சன், அனில் கம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்குர் இடம்பிடித்துள்ளனர்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொமோகா மியாசகி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-15 என பி.வி.சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-8 என 2வது செட்டை வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-17 என பி.வி.சிந்து வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் ஜூலை 21 முதல் 27 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் பெய்டன் மெக்கென்சி மோதினார்.
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் ஜூலை 21 முதல் 27 வரை அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வில்லியம் எச்.ஜி. ஃபிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான வில்லியம்ஸ் (அமெரிக்கா) மற்றும் சக நாட்டவரான பெய்டன் மெக்கென்சி ஸ்டெர்ன்ஸ் (அமெரிக்கா) உடன் மோதினார்.
இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். 45 வயதில் வெற்றி பெற்றதன் மூலம் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு WTA ஒற்றையர் போட்டியில் வென்ற மிக வயதான வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
- முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது.
- இந்தியா 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 111 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் நுழைந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என முழக்கமிட்டனர். இதனை கேட்டதும் டிவில்லியர்ஸ் சிரித்தபடி கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது.
- இங்கிலாந்தில் முரளிதரன் சாதனையை சமன் செய்வார்.
மான்செஸ்டர்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக் கிறது. இதனால் இந்த டெஸ் டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் ஆகி யோர் காயம் அடைந்ததால் இந்திய அணியோடு இணைந்துள்ள 24 வயது வேகப்பந்து வீரர் அன் சுதல் கம்போஜ் டெஸ்டில் அறிமுகம் ஆகிறார்.
முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. இந்த தொடரில் அவர் 5 டெஸ்டில் 3 போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர் முதல் டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் விளையாடினார். 2-வது டெஸ்டில் இடம் பெறவில்லை. அவர் 2 டெஸ்டில் 12 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் பும்ரா பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. 5 விக்கெட் கைப்பற்றினால் புதிய வரலாறு படைப்பார். ஒரு விக்கெட் எடுத்தால் இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் 50 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
5 விக்கெட் வீழ்த்தினால் இங்கிலாந்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஆசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். அவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாசிம் அக்ரமை (53 விக்கெட்) முந்துவார்.
பும்ரா மேலும் ஒருமுறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தால் சேனா நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா , இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக முறை (12 தடவை) 5 விக்கெட் எடுத்த முதல் ஆசிய பவுலர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும் இங்கிலாந்தில் முரளிதரன் சாதனையை சமன் செய்வார்.
- முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது.
- இந்தியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 30 பந்தில் 63 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் யூசப் பதான், சால்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் 55 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா, 111 ரன்னில் 9 விக்கெட்டுகளை இழந்தது. யுவராஜ் சிங் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பின்னி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆரோன் ஃபாங்கிசோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- காயம் காரணமாக நிதிஷ் குமார், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விலகி உள்ளனர்.
- கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவரை முடிவு செய்வோம் என்றும் கில் குறிப்பிட்டார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடரில் இருந்து நிதிஷ் குமாரும், 4-வது போட்டியில் இருந்து ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விலகி உள்ளனர்.
நிதிஷ் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரும், ஆகாஷ் தீப்புக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஜூல் கம்போஜ் இடம் பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. இருப்பினும் 'டாஸ்' போடுவதற்கு முன்பே கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவரை முடிவு செய்வோம் என்றும் கில் குறிப்பிட்டார்.

மேலும் 8 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய கருண் நாயரின் ஆட்டம் மெச்சும்படி இல்லை. 6 இன்னிங்சில் ஆடி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சனை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் தீவிர பரீசிலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா:
ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், கருண் நாயர் அல்லது சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், அன்ஜூல் கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா.
- இங்கிலாந்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகின்றன.
ஜெனீவா:
14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின.
போட்டியின் 33-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்காக பார்பரா போனான்சியா கோல் அடித்தார். ஆட்டம் முடியும் தருவாயில் அதாவது 96-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை மிச்செல் அகேமாங் பதில் கோல் அடித்து சமன் செய்தார்.
1-1 என்ற சமநிலை ஏற்பட்டதால் கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கோல் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. 119-வது நிமிடத்தில் அந்த அணி சோலி கெல்லி கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரை இத்தாலி அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
- டி20 தொடரை இந்தியா ஏற்கனவே 3-2 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்து இருந்தது.
- இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்தார். அவரது 7-வது (149-வது போட்டி) செஞ்சூரியாகும். அவர் 84 பந்தில் 102 ரன்னும் (14 பவுண்டரி), ஜெமீமா ரோட்ரிக்ஸ் 45 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி), ஸ்மிருதி மந் தனா, ஹர்லீன் தியோல் தலா 45 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 305 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் நேட் ஸ்கிவர்-பிரண்ட் 98 ரன்னும் (11 பவுண்டரி), எம்மா லேம்ப் 68 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். கிராந்தி கவுட் மிகவும் அபாரமாக பந்து வீசி 52 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றிய 4-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். தீப்தி சர்மா (2 முறை), மம்தா மாபென், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் வரிசையில் அவர் இணைந்தார். ஸ்ரீ சரணிக்கு 2 விக்கெட்டும், தீப்தி சர்மாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா ஏற்கனவே 3-2 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார்.
- ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர்.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2 ஆவது போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 15.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஸ் 78 ரன்களும் க்ரீன் 56 ரன்களும் அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார். தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெறுகிறார்.
- இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அந்த்ரே ரஸல். 37 வயதான இவர், ரஸல் 2019ஆம் ஆண்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் அடித்துள்ளார். 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ரஸல் அவருடைய சொந்த ஊரான ஜமைக்காவில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், ரஸல் ஓய்வு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாதிப்ப ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஸல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1034 ரன்கள் அடித்துள்ளார். 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அடுத்த தலைமுறை கரீபியன் கிரிக்கெட்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் வகையில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை உயரிய நிலையில் முடிக்க விரும்புகிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், வீராங்கனைகளில் பி.வி.சிந்து, அனுபமா உபாத்யாயா, உன்னதி ஹூடா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களம் கான்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லீ சியாங் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 23-21 என அனுபமா உபாத்யாயா கைப்பற்றினார். இதில் சுதாரித்து ஆடிய தைவான் வீராங்கனை அடுத்த இரு செட்களை 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதனால் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.






