என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 318 ரன்கள் குவித்தது.

    லண்டன்:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 26 ரன்னில் அவுட்டானார். 45 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா வெளியேறினார்.

    ஹர்லின் தியோல் உடன் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணைந்தார். நிதானமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்லின் தியோல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து அதிரடியை வெளிப்படுத்தினார். ஜெமிமா 45 பந்தில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சதமடித்து அசத்தினார். அவர் 82 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் சீபர்ட் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் கான்வே 19 ரன்னிலும் ரச்சின் ரவீந்திரா 3, மார்க் சேப்மன் 10 என்ற அவுட் ஆகினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் சீபர்ட் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் நியூசிலாந்து அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜகர் அலி 55 ரன்கள் குவித்து ஆட்டழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல், அப்பாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
    • இதில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் கான்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-8 என ஜப்பான் வீரர் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் அடுத்த இரு செட்களை 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு நட்சத்திர வீரரான இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
    • இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சார்பில் பெண்கள் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிரடியாக 10 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    33வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா தற்போது 23வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடம் பிடித்துள்ளார்.

    தீப்தி சர்மா பந்துவீச்சு தரவரிசையிலும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.

    • பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர்.
    • ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    வாஷிங்டன்

    கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்) பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி (அர்ஜென்டினா) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    நேற்று முன்தினம் நடைபெற்ற இன்டர்மியாமி மற்றும் என்.ஒய் ரெட் புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இன்டர்மியாமி அணிக்காகவும், ரொனால்டோ அல் நசர் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். 

    • இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்டுக்கு 3-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது.

    மான்செஸ்டர்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 1-2 என்றகணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்டுக்கு 3-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் மட்டுமே செய்தார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் அவர் விக்கெட் கீப்பர் பேட்டராக செயல்படுவாரா அல்லது பேட்டராக மட்டும் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் அவர் விக்கெட் கீப்பர் பேட்டராக களமிறங்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.

    இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், வீராங்கனைகளில் பி.வி.சிந்து, அனுபமா உபாத்யயா, உன்னதி ஹூடா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களம் கான்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின்லீ ஷீபெங் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-14 என லக்ஷயா சென் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சீன வீரர் அடுத்த இரு செட்களை 24-22, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதனால் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்த டெஸ்டிலும் இந்தியா தோற்றால் தொடரை இழந்து விடும்.
    • இதுவரை நடந்த 139 டெஸ்டில் இந்தியா 36-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி டிரா ஆனது.

    மான்செஸ்டர்:

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 1-2 என்றகணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட் சில் நடந்த 3-வது போட்டியில் 22 ரன்னிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமல் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.

    லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்கு அருகே வந்து தோற்றது ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டெஸ்டிலும் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. ஓல்ட் டிராபோர்டில் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இதனால் கடுமையான சவால் காத்திருக்கிறது.

    வீரர்களின் காயத்தால் இந்திய அணி தத்தளிக்கிறது. முழங்கால் காயம் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி எஞ்சிய 2 போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதுவரை வாய்ப்பு கிடைக்காத அர்ஷ்தீப் சிங்கும் நாளைய டெஸ்டில் ஆடவில்லை. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஆகாஷ் தீப்பும் ஆடுவது சந்தேகமே.

    இதனால் 24 வயதான அன்ஜுல் கம்போஜ் அணியோடு இணைந்துள்ளார். அவர் டெஸ்டில் அறிமுகமாகும் நிலை உள்ளது.

    முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் வாய்ப்பில் இருக்கிறார்கள்.

    தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் முதல் டெஸ்டில் மொத்தம் 34 ரன்களே எடுத்தார்.

    முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பதால் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வாரா? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது.

    மிகவும் முக்கியமான இந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். மிகப்பெரிய ஸ்கோரை குவித்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு சவால் கொடுக்க முடியும்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது.

    11 பேர் கொண்ட அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு பதிலாக லியம் டாசன் இடம்பெற்று உள்ளார். அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் விளையாடுகிறார்.

    இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 140-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 139 டெஸ்டில் இந்தியா 36-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி டிரா ஆனது.

    மான்செஸ்டரில் 9 டெஸ்டில் ஆடி இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. 4-ல் தோற்றது. 5 டெஸ்ட் டிரா ஆனது. 

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து நம்பர் 2 வீரரான அல்காரஸ் விலகி உள்ளார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

    இந்நிலையில், நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    ஏற்கனவே காயம் காரணமாக நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.
    • 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.

    நாட் சிவெர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சோபியா டங்லி, விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், எக்லெஸ்டோன், டாமி பீமோன்ட் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். மொத்தத்தில், அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×