என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இத்தாலி வீரர் முசெட்டி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் முசெட்டி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கேமரூன் நூரி அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது.
    • அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் காரணமாக ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டு அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 8 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த கருண் நாயர், 6 இன்னிங்சில் 0, 20, 31, 26, 40 மற்றும் 14 ரன்களே அடித்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கருண் நாயருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் "கருண் நாயர் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாட வில்லை என்றாலும், இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது. அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும். அணித் தலைவராக கடினமான முடிவு எடுக்கும்போது, மரியாதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

    • கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும் அவுட்டாகினர்.
    • கவாஸ்கரின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது..

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 49.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    அதாவது, வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த 2வது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்குமுன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது அவரது சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

    • மோஹ்சின் கான், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வந்தனர்.
    • தற்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

    இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய அதிவேக பந்து வீச்சாளராக உருவாகி வந்தவர்கள் மோஹ்சின் கான், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான். இந்த மூன்று பேரும் தொடர்ச்சியாக 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள். இந்திய அணியில் இடம் பிடித்து, சர்வதேச கிரிக்கெட் பேட்டர்களுக்கு மிகப்பெரிய அளவில அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டவர்கள்.

    ஆனால் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அடிக்கடி காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். மூன்று பேருக்கும் அறுவை சிகிச்சை செய்யக் கூடிய அளவிற்கான காயம் ஏற்பட்டது. இந்த நிலைவர்கள் அவரவருக்குரிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரை ஓய்வு எடுக்கும்படி பிசிசிஐ மருத்துவக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

    இங்கிலாந்து எதிரான தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி ஆகியோர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் உன்னதி ஹூடா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-11, 21-16 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் உன்னதி ஹூடா, பி.வி.சிந்துவை எதிர்கொள்கிறார்.

    • ஜெய்ஸ்வால் 96 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
    • கே.எல். ராகுல் 98 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார்.

    முதல் ஒருமணி நேரம் (Drinks) வரை ஜெய்ஸ்வால் சற்று தடுமாறி விளையாடினார். ஆனால் கே.எல். ராகுல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Drinks இடைவேளைக்குப் பின் ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். அதேவேளையில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறந்த வகையில் ஸ்விங் செய்தனர். என்றபோதிலும் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால் இருவரும் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 26 ஓவரில் 78 ரன்கள் எடுத்திருந்தது, அப்போது கே.எல். ராகுல் 40 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் வீசிய ஆட்டம் தொடங்கிய 4ஆவது ஓவரின் (இன்னிங்சின் 30ஆவது ஓவர்) கடைசி பந்தில் கே.எல். ராகுல் 46 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 94 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாட மறுமுனையில் 35ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து 96 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

    • சுப்மன் கில் தொடர்ந்து 4 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார்.
    • ஜனவரியில் இருந்து தொடர்ச்சியாக 14 போட்டிகளில் இந்தியா டாஸ் தோற்றுள்ளது.

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டபோது, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் ஹெட் கேட்டார். ஆனால் டெய்ல் விழ பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்தான் சுப்மன் கில் முதன்முறையாக கேப்டன் பதவியை ஏற்கிறார். இவருக்கும் டாஸ்க்கும் ராசியில்லாமல் உள்ளது. இந்த நான்கு போட்டிகளிலும் சுப்மன் கில் டாஸ் தோற்றுள்ளார்.

    சுப்மன் கில்லுக்கு மட்டுமல்ல. இந்திய அணிக்கும் டாஸ்க்கும் வெகுதூரமாக உள்ளது. இந்திய ஆண்கள் சர்வதேச அணி கடந்த ஜனவரில் இருந்து 14 போட்டிகளில் டாஸ் வென்றதே கிடையாது. இந்த மோசமான சாதனை அடுத்த போட்டியிலாவது முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்போம்..!

    • கே.எல். ராகுல் 40 ரன்களும், ஜெய்ஸ்வால் 36 ரன்களும் அடித்து களத்தில் உள்ளனர்.
    • இந்தியா 26 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் அடித்துள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார்.

    முதல் ஒருமணி நேரம் (Drinks) வரை ஜெய்ஸ்வால் சற்று தடுமாறி விளையாடினார். ஆனால் கே.எல். ராகுல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Drinks இடைவேளைக்குப் பின் ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். அதேவேளையில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறந்த வகையில் ஸ்விங் செய்தனர். என்றபோதிலும் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால் இருவரும் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 26 ஓவரில் 78 ரன்கள் எடுத்துள்ளது.

    கே.எல். ராகுல் 40 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர் தலா 8 ஓவர்கள் வீசினர்.

    • பரூக் இன்ஜினீயர் இந்திய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்வையிடும் கேலரியின் ஒரு பகுதிக்கு (Stand) பரூக் இன்ஜீனியர், கிளைவ் லாய்டு எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதை இருவரும் திறந்து வைத்தனர். மேலும், மணி அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

    பரூக் இன்ஜினீயர் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்கான 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம், 16 அரைசதங்களுடன் 2611 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.08 ஆகும். 121 அதிகபட்ச ஸ்கோராகும்.

    கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆவார். இவர் 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம், 39 அரைசதங்களுடன் 7515 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 46.67 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் அடித்துள்ளார்.

    87 ஒருநாள் போட்டியில் ஒரு சதம், 11 அரைசதங்களுடன் 1977 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.54 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும்.

    டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    • சச்சின், டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
    • 1000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய வீரர் கே.எல். ராகுல் ஆவார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார். 18ஓவர் வரை இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர். கே.எல். ராகுல் 59 பந்தில் 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் 1000 ரன்களை கடந்துள்ளனர். தற்போது அவர்கள் பட்டியலில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார்.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
    • இதில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா-கென்யா மிட்சுஹாஷி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-13, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைதான் தேர்வு செய்யும்.
    • பந்து வீச்சுக்கு சாதகமான சீதோஷ்ணநிலை நிலவி வருவதால், பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில உள்ள ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இங்கு நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அணி கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங் தேர்வு செய்யுமாம். அதையும் மீறி பீல்டிங் கேட்டால், ஒருபோதும் அந்த அணி வெற்றி பெற்றது கிடையாதாம்.

    இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என இரு அணி ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இது கிரிக்கெட் வல்லுனர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பென் ஸ்டோன்ஸ் "பழைய கதையின் பின்னால் நான் செல்ல விரும்பவில்லை. இன்றைய சீதோஷ்ண நிலையை பார்த்தால் முதலில் பந்து வீசினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தேன்" என்றார். இங்கிலாந்தில் மழை வருவது போன்ற சீதோஷ்ண நிலையில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இதை கருத்தில் கொண்டுதான் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சீதோஷ்ண நிலையை தாண்டி, மைதானத்தின் வரலாறு இந்தியாவுக்கு கைக்கொடுக்குமா? என்று பார்ப்போம். இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ச்சியாக 4 போட்டியில் டாஸ் தோற்றுள்ளார்.

    இன்றைய போட்டியில் நிதிஷ் ரெட்டி, கருண் நாயர், ஆகாஷ் தீப் ஆகியோர் நீக்கப்பட்டு சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். அன்ஷுல் கம்போஜுக்கு இது அறிமுக போட்டியாகும்.

    ×