ENGvsIND 4th Test ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் அபாரம்: உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் இந்தியா அசத்தல்..!

கே.எல். ராகுல் 40 ரன்களும், ஜெய்ஸ்வால் 36 ரன்களும் அடித்து களத்தில் உள்ளனர்.இந்தியா 26 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் அடித்துள்ளது.
ENGvsIND 4th Test ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் அபாரம்: உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் இந்தியா அசத்தல்..!
Published on

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார்.

முதல் ஒருமணி நேரம் (Drinks) வரை ஜெய்ஸ்வால் சற்று தடுமாறி விளையாடினார். ஆனால் கே.எல். ராகுல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Drinks இடைவேளைக்குப் பின் ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். அதேவேளையில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறந்த வகையில் ஸ்விங் செய்தனர். என்றபோதிலும் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால் இருவரும் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 26 ஓவரில் 78 ரன்கள் எடுத்துள்ளது.

கே.எல். ராகுல் 40 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர் தலா 8 ஓவர்கள் வீசினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com