என் மலர்
கிரிக்கெட் (Cricket)

களத்திற்கு தயாராகும் புயல்வேக பந்து வீச்சாளர்கள்: அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக தகவல்..!
- மோஹ்சின் கான், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வந்தனர்.
- தற்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய அதிவேக பந்து வீச்சாளராக உருவாகி வந்தவர்கள் மோஹ்சின் கான், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான். இந்த மூன்று பேரும் தொடர்ச்சியாக 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள். இந்திய அணியில் இடம் பிடித்து, சர்வதேச கிரிக்கெட் பேட்டர்களுக்கு மிகப்பெரிய அளவில அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டவர்கள்.
ஆனால் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அடிக்கடி காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். மூன்று பேருக்கும் அறுவை சிகிச்சை செய்யக் கூடிய அளவிற்கான காயம் ஏற்பட்டது. இந்த நிலைவர்கள் அவரவருக்குரிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரை ஓய்வு எடுக்கும்படி பிசிசிஐ மருத்துவக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.
இங்கிலாந்து எதிரான தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி ஆகியோர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






