என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ENGvsIND 4th test வரலாற்றை மீறிய பென் ஸ்டோக்ஸ்: மான்செஸ்டர் மைதானமும் டாஸும் சொல்லும் கதை..!
    X

    ENGvsIND 4th test வரலாற்றை மீறிய பென் ஸ்டோக்ஸ்: மான்செஸ்டர் மைதானமும் டாஸும் சொல்லும் கதை..!

    • மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைதான் தேர்வு செய்யும்.
    • பந்து வீச்சுக்கு சாதகமான சீதோஷ்ணநிலை நிலவி வருவதால், பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில உள்ள ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இங்கு நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அணி கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங் தேர்வு செய்யுமாம். அதையும் மீறி பீல்டிங் கேட்டால், ஒருபோதும் அந்த அணி வெற்றி பெற்றது கிடையாதாம்.

    இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என இரு அணி ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இது கிரிக்கெட் வல்லுனர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பென் ஸ்டோன்ஸ் "பழைய கதையின் பின்னால் நான் செல்ல விரும்பவில்லை. இன்றைய சீதோஷ்ண நிலையை பார்த்தால் முதலில் பந்து வீசினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தேன்" என்றார். இங்கிலாந்தில் மழை வருவது போன்ற சீதோஷ்ண நிலையில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இதை கருத்தில் கொண்டுதான் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சீதோஷ்ண நிலையை தாண்டி, மைதானத்தின் வரலாறு இந்தியாவுக்கு கைக்கொடுக்குமா? என்று பார்ப்போம். இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ச்சியாக 4 போட்டியில் டாஸ் தோற்றுள்ளார்.

    இன்றைய போட்டியில் நிதிஷ் ரெட்டி, கருண் நாயர், ஆகாஷ் தீப் ஆகியோர் நீக்கப்பட்டு சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். அன்ஷுல் கம்போஜுக்கு இது அறிமுக போட்டியாகும்.

    Next Story
    ×