என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் கடைசி நாளில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 207 ரன்கள் உள்ள நிலையில், கைவசம் 7 விக்கெட்டை வைத்துள்ளது இங்கிலாந்து.
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 394 ரன்கள் சேர்த்திருந்தது. வாட்லிங் 119 ரன்களுடனும், சான்ட்னெர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாட்லிங் - சான்ட்னெர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தது. வாட்லிங் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 205 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் சதத்தை பதிவு செய்த சான்ட்னெர் 126 ரன்களில் வெளியேறினார்.

    201 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 615 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 262 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    பின்  262 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ பேர்ன்ஸ், சிப்லே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும்வரை விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடினர்.

    சான்ட்னெர், வாட்லிங்

    அணியின் ஸ்கோர் 21.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது சான்ட்னெர் பந்தில் சிப்லே ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ பேர்ன்ஸ் (31 ரன்கள்), லீச் (டக்அவுட்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 27.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.


    தற்போது வரை நியூசிலாந்து 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளைய கடைசி நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினால் மட்டுமே இங்கிலாந்து டெஸ்டை டிரா செய்ய முடியும். ஒருவேளை 200 ரன்களுக்கு மேல் அடித்து ஆட்டமிழந்தால், நியூசிலாந்து அதிரடியாக விளையாடி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இதனால் இந்த டெஸ்ட் போட்டி நியூசிலாந்து கையில்தான் உள்ளது.
    இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் 18 விக்கெட்டு வீழ்த்தி, சுழற்பந்தாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

    முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 106 ரன்னில் சுருண்டது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது ஷமி இரண்டு விக்கெட்டு வீழ்த்தினர். வங்காளசேதம் 30.3 ஓவர்களே எதிர்கொண்டது.

    சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரில் ஜடேஜா ஒரு ஓவர் மட்டுமே விசினார்.

    2-வது இன்னிங்சிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். உமேஷ் யாதவ் ஐந்து விக்கெட்டும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். மெஹ்முதுல்லா காயத்தால் வெளியேறியதால் வங்காளதேசம் 195 ரன்கள் எடுப்பதற்குள் 9-வது விக்கெட்டை இழந்த பிறகு ஆல்அட் என அறிவிக்கப்பட்டது.

    2-வது இன்னிங்சில் இந்தியா 41.1 ஓவர்கள் வீசியது. இதில் ஜடேஜா 1 ஓவரும், அஸ்வின் ஐந்து ஓவர்களும் வீசினார். ஓட்டுமொத்தமாக இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 ஓவர்களை வீசினர். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

    பொதுவாக இந்திய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்கு இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இந்த வெற்றியின் மூலம் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா பெற்ற முதல் வெற்றியாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் முதன்முறையாக சுழற்பந்து உதவி இல்லலாமல் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி கண்ட ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக நான்கு முறை இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது கிடையாது. அப்படியொரு சாதனையை இந்தியா தற்போது நிகழ்த்தி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

    வங்காளதேச அணிக்கெதிரான இரண்டு டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு இன்னிங்சிலும் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    வங்காளதேச அணிக்கெதிராக அபாரமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் இந்தூரிலும், 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகவும் நடைபெற்றது.

    இரண்டு டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அபாரமான பந்து வீசினர்.

    குறிப்பாக 2-வது டெஸ்டில் இஷாந்த் சர்மாவின் பந்த வீச்சில் அனல் பறந்தது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். முதல் டெஸ்டில் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

    கொல்கத்தா டெஸ்டில் 9 விக்கெட்டக்கள் வீழ்த்தியதால்  ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 12 விக்கெட் வீழ்த்தியதால் தொடரை நாயகன் விருது வழங்கப்பட்டது. 
    கொல்கத்தாவில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
    கொல்கத்தா: 

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. 

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் விராட் கோலியின் (136 ரன்கள்) அபார சதம் , புஜாரா (55 ரன்கள்),  ரகானே (51 ரன்கள்) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது.

    இந்திய அணி 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
    வங்காளதேசத்தை விட 246 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதைத்தொடர்ந்து, வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர்.

    இஷாந்தை பாராட்டும் சக வீரர்கள்

    வங்காளதேசம் அணியில் முஷ்பிகுர் ரஹிம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 74 ரன்னில் அவுட்டானார்.
    39 ரன்கள் எடுத்த நிலையில் மகமதுல்லா காயத்தால் வெளியேறினார்.

    இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி வங்காளதேச வீரர்களை அவுட்டாக்கினார். 
    இறுதியில், வங்காளதேசம் அணி 41.1 ஓவரில் 195 ரன்னில் ஆல் அவுட்டானது. 

    இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 2-0 தொடரை கைப்பற்றி அசத்தியது.
    பிரிஸ்பேன் டெஸ்டில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வானின் போராட்டம் வீணானது. ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சால் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வெற்றி பெற்றது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 240 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 76 ரன் எடுத்தார். கேப்டன் அசார் அலி 39 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும், ஷான் மசூத் 27 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் களம் இறங்கினர். 
    ஜோ பேர்ன்ஸ் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய வார்னர் 154 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடி சதமடித்த லாபஸ்சாக்னே 185 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேத்யூ வேட் அரை சதமடித்து 60 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 340 ரன்கள் முன்னிலை பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் யாசிஎ ஷா 4 விக்கெட்டும், ஷஹின் அப்ரிதி, ஹரிஸ் சோஹாலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சிக்கி 94 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    அப்போது களமிறங்கிய பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தனர். 

    பொறுப்புடன் ஆடி சதமடித்த பாபர் அசாம் 105 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரிஸ்வானும் 95 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆடிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 84.2 ஓவரில் 335 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிச்செல் ஸ்டார்க் 3 விக்கெட், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
    பெங்களூருவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி பெங்களூரு அணி வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது.
    பெங்களூரு:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. 

    ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதையடுத்து, ஆட்டத்தின் இறுதிவரை கேரளா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், பெங்களூரு எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
    இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் அணி 6 விக்கெட்டுக்கு 152 ரன்களை எடுத்து திணறி வருகிறது.
    கொல்கத்தா: 

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. 

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் விராட் கோலியின் (136 ரன்கள்) அபார சதம் , புஜாரா (55 ரன்கள்),  ரகானே (51 ரன்கள்) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது.

    இந்திய அணி 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
    வங்காளதேசத்தை விட 246 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதைத்தொடர்ந்து, வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி 13 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அரை சதமடித்த முஷ்பிகுர் ரஹிம்

    தொடர்ந்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் நிதானமாக விளையாடி அரை சதமடித்தார். 39 ரன்கள் எடுத்த நிலையில் மகமதுல்லா காயத்தால் வெளியேறினார்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர்ரஹிம் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்னும் 3 நாள்கள் மீதமுள்ளதால், இந்தியா எளிதில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் வங்காளதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சிறப்பாக ஆடி தனது 27-வது சதத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 70 சதங்களை எடுத்துள்ளார். 

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேப்டனாக விளையாடி 41 சதங்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் கேப்டனாக 41 சதங்கள் அடித்து, ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார்.

    ஏற்கனவே, கேப்டனாக டெஸ்ட் போட்டியில் அதிகவேகமாக 5 ஆயிரம் ரன்களை தாண்டிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் வங்காளதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    கொல்கத்தா:

    கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியா வங்காளதேச அணிகளிடையே கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேச அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்னில் சுருண்டது. 

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். அகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த புஜாராவும் கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தனர். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59 ரன்னும், ரகானே 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானேவும் கோலியும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரகானே 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் தனது 27வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். வங்காளதேச அணியை விட இந்திய அணி 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

    இதையடுத்து, வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.
    இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 12 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட் எடுத்துள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆடியது.

    இளம் சிவப்பு நிற பந்தில் (பிங்க்) இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசி சாதித்தனர். முதலில் ஆடிய வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்னில் சுருண்டது.

    வங்காளதேச அணியின் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீரர்களே கைப்பற்றினார்கள். குறிப்பாக இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 12 ஓவர் வீசி 22 ரன் கொடுத்து (4 மெய்டன்) 5 விக்கெட் வீழ்த்தினார்.

    அவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் உள்ளூர் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு தனது 37-வதுடெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூர் டெஸ்டில் 118 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    தற்போது 96-வது டெஸ்டில் 2-வது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 394 ரன்கள் குவித்துள்ளது.
    மவுன்ட்மாங்கானு:

    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நிக்கோலஸ் - வாட்லிங் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிக்கோலஸ் 41 ரன்கள் எடுத்திருந்த போது ரூட் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார்.  அடுத்து வந்த  கிராண்ட்ஹோம் அவருக்கு சிறப்பான பாட்னர்சிப் கொடுத்தார். அபாரமாக விளையாடிய வாட்லிங் 251 பந்துகளில் 12 பவுண்டரியுடன் அவர் சதம் அடித்தார்.

    64-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 8-வது சதமாகும். அவருக்கு  உறுதுணையாக இருந்து கிராண்ட்ஹோம் 65 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சாட்னர், வாட்லிங் உடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 394 ரன்கள் எடுத்திருந்தனர். சாட்னர் 103 பந்துகளில் 31 ரன்களிலும் வாட்லிங் 298 பந்துகளில் 119 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

    இங்கிலாந்து தரப்பில் சாம் குர்ரான், பென் ஸ்டோர்க்ஸ் தலா 2 விக்கெட்டும் ஜாக் லீச், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×