search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சான்ட்னெர்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சான்ட்னெர்

    டிராவா? தோல்வியா?: இக்கட்டான நிலையில் இங்கிலாந்து

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் கடைசி நாளில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 207 ரன்கள் உள்ள நிலையில், கைவசம் 7 விக்கெட்டை வைத்துள்ளது இங்கிலாந்து.
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 394 ரன்கள் சேர்த்திருந்தது. வாட்லிங் 119 ரன்களுடனும், சான்ட்னெர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாட்லிங் - சான்ட்னெர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தது. வாட்லிங் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 205 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் சதத்தை பதிவு செய்த சான்ட்னெர் 126 ரன்களில் வெளியேறினார்.

    201 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 615 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 262 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    பின்  262 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ பேர்ன்ஸ், சிப்லே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும்வரை விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடினர்.

    சான்ட்னெர், வாட்லிங்

    அணியின் ஸ்கோர் 21.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது சான்ட்னெர் பந்தில் சிப்லே ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ பேர்ன்ஸ் (31 ரன்கள்), லீச் (டக்அவுட்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 27.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.


    தற்போது வரை நியூசிலாந்து 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளைய கடைசி நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினால் மட்டுமே இங்கிலாந்து டெஸ்டை டிரா செய்ய முடியும். ஒருவேளை 200 ரன்களுக்கு மேல் அடித்து ஆட்டமிழந்தால், நியூசிலாந்து அதிரடியாக விளையாடி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இதனால் இந்த டெஸ்ட் போட்டி நியூசிலாந்து கையில்தான் உள்ளது.
    Next Story
    ×