என் மலர்
விளையாட்டு
விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் டெஸ்டில் டிரென்ட் போல்ட் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மதிய உணவு இடைவேளைக்கு முன் நியூசிலாந்து வேகபந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமான வெறியேறினார்.
உணவு இடைவேளைக்குப்பின் களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் டிரென்ட் போல்ட் போட்டி முடியும் வரை களம் இறங்கவில்லை.
காயத்தின் தன்மையை துல்லியமாக கண்டறிய நாளை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின் காயம் குறித்த முழுத்தகவல் தெரிய வரும்.
இதனால் ஹாமில்டனில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.
முதல் இன்னிங்சில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய போல்ட், 2-வது இன்னிங்சில் 6 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குலி காலத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியது என்று விராட் கோலி கூறியதற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
வங்காளதேச அணிக்கெதிரான தொடரை 2-0 என வென்றதன் மூலம் இந்தியா சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 12 தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல் வெளிநாட்டு மண்ணிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் வெற்றிகளை பெற்று வருகிறது. முதல்முதலாக ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று சாதனைப் படைத்தது.
இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர். நேற்றைய பிங்க்-பால் போட்டி முடிந்து கோப்பையை வாங்கும் நிகழ்ச்சியில் விராட் கோலி பேசினார். அப்போது ‘‘இந்திய அணியின் தொடர் வெற்றிகள் உடனடியாக வந்தது இல்லை. 2000-த்தில் தாதாவின் கேப்டன் பதவியில் இருந்து தொடங்கப்பட்டது. அதை முன்னோக்கி எடுத்துச் சொல்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
இதற்கு சுனில் கவாஸ்கர் பதில் அளிக்கையில் ‘‘இது சூப்பர் வெற்றிதான். ஆனால் நான் சில விஷயங்களை சொல்ல வேண்டும். இந்திய அணி கேப்டன் விராட் கோலி இது 2000-த்தில் கங்குலி தலைமையிலான அணியில் இருந்து தொடங்கியதாக தெரிவித்துள்ளார். தாதா பிசிசிஐ-யின் தலைவராக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, கங்குலியை பற்றி சில நல்ல விஷயங்களை சொல்வதற்கு விராட் கோலி விரும்பியிருக்கலாம். ஆனால் இந்தியா ஏற்கனவே 1970 மற்றும் 80-களில் வெற்றி பெற்றிருக்கிறது. அப்போது விராட் கோலி பிறக்கவில்லை.
ஏராளமானோர் 2000-த்தில் இருந்து கிரிக்கெட் தொடங்கியதாக நினைக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 1970-ல் வெற்றி பெற்றிருக்கிறது. 1986-ல் இந்திய அணி வெளிநாட்டில் வெற்றி பெற்றுள்ளது. வெளிநாட்டு தொடர்களை டிரா செய்துள்ளோம். மற்ற அணிகளை போன்று அவர்களும் தோற்றுள்ளனர்’’ என்றார்.
கங்குலி கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில்தான் இந்தியா வெளிநாட்டு மண்ணில் அதிக அளவில் வெற்றி பெற தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவை தொடர்ந்து இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.
- இந்தியா விளையாடிய முதல் பிங்க்-பால் டெஸ்ட் ஈடன் கார்டனில் நடைபெற்றது.
- முதல் நான்கு நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்தன.
- இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
போட்டி நடைபெற்ற நாட்களில் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை ரசித்தனர். இந்நிலையில் பிங்க் பால் டெஸ்ட் கொல்கத்தாவில் மட்டும் நடத்திக் கொண்டிருக்க முடியாது. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டியில், ‘‘கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அதிக அளவில் வந்தது நிம்மதி அளிக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியை பிரபலப்படுத்த நாங்கள் நிறைய பணிகளை செய்தோம். டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டன. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கின்றனர்.
- இந்த ஆண்டு 95 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர், சராசரி 15.16, ஸ்டிரைக் ரேட் 31.06
- விராட் கோலி தலைமையில் 53 டெஸ்டில் 453 விக்கெட்டுக்கள்
- ஷமி 137, இஷாந்த் சர்மா 102, உமேஷ் யாதவ் 91, பும்ரா 62
இதில் இஷாந்த் சர்மாவுக்கு 9 விக்கெட்டும், உமேஷ் யாதவுக்கு 8 விக்கெட்டும், முகமது ஷமிக்கு 2 விக்கெட்டும் கிடைத்தன. சொந்த மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட் கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் வேகப்பந்து வீரர்கள் 17 விக்கெட் வீழ்த்தி இருந்தார்கள்.
இந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீரர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்திய மண்ணில் இப்படி நடைபெறுவது முதல் நிகழ்வாகும்.
இந்த ஆண்டில் இந்திய வேகப்பந்து வீரர்கள் 95 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். சராசரி 15.16 ஆகும். ஸ்டிரைக் ரேட் 31.06 ஆகும். வேறு எந்த அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த ஆண்டில் இவ்வளவு அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை.

விராட் கோலி கேப்டனாக பொறுப்பு ஏற்ற பிறகு இந்திய அணி 53 டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் வேகப்பந்து வீரர்கள் மட்டும் 453 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர். இதில் 170 விக்கெட்டுகள் சொந்த மண்ணில் எடுக்கப்பட்டவை ஆகும்.
முகமது ஷமி அதிகப்பட்சமாக 37 டெஸ்ட்டில் 137 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இஷாந்த் சர்மா 102 விக்கெட்டும் (35), உமேஷ் யாதவ் 91 விக்கெட்டும் (32), பும்ரா 62 விக்கெட்டும் (12) எடுத்துள்ளனர்.
ஸ்காட்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய இளம் வீரரான லக்ஷயா சென் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்று அசத்தினார்.
எடின்பர்க்:
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் உள்ள எமிரேட் விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஸ்காட்லாந்து ஒபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் பிரேசில் நாட்டின் யாகோர் கோயல்ஹோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரரான லக்ஷயா சென் (வயது 18) நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாகோர் கோயல்ஹோவுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் ரவுண்டில் 18-21 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென் பின்தங்கினார். ஆனால் அதன் பின்னர் மற்ற இரண்டு ரவுண்டுகளில் ஆக்ரோஷமாக விளையாடிய அவர், 21-18, 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் லக்ஷயா சென் வென்ற 4வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு சார்லார்லக்ஸ் ஒபன், டச்சு ஒபன் மற்றும் பெல்ஜியம் சரவ்தேச போட்டி ஆகிய போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
மவுன்ட்மாங்கானு:
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25ம் தேதி வரை மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் வரிசை ஆட்டக்காரர்கள் அதிக அளவில் ரன் ஏதும் எடுக்கவில்லை. கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் 51 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் வாட்லிங் மற்றும் காலின் டி க்ரோம் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். காலின் டி க்ரோம் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மிட்செல் சாண்ட்னெர் வாட்லிங்குடன் கைகோர்த்தார்.
தடுப்பாட்டத்தில் ஈடுபட்டாலும் இருவரும் ரன் குவிப்பத்திலும் கவனம் செலுத்தினர். சிறப்பாக விளையாடிய வாட்லிங் இரட்டைச்சதம் விளாசி அசத்தினார். சாண்ட்னெரும் தனது பங்கிற்கு சதம் விளாசினார். இவர்களின் உதவியால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. வாட்லிங் 206 ரன்களும், சாண்ட்னெர் 126 ரன்களும் குவித்து அவுட் ஆகினர். இதையடுத்து 9 விக்கெட் இழப்பிற்கு 615 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் கேன் வில்லியம்சன் அறிவித்தார்.
அதன் பின்னர் 262 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த நிலையில் 197 ரன்களில் அந்த அணி ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ டென்லி 35 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் நெய்ல் வாக்னர் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இரட்டைச்சதம் அடித்த விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி. அணியை சந்திக்கிறது.
சென்னை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி. அணியை (இரவு 7.30 மணி) சந்திக்கிறது. 4-வது ஆட்டத்தில் ஆடும் சென்னை அணி ஒரு டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. சென்னை அணி முதல் வெற்றியை ருசிக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
புனேயில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் கோலை நோக்கி அடித்த 3 வாய்ப்புகளும் வீணானது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 7 போட்டிகளில் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அந்நாட்டில் இந்தியா முதலில் விளையாடியது. அதன்பின் இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும், தற்போது வங்காளதேச அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஒரு தொடர் சொந்த மைதானத்திலும், மற்றொரு தொடர் வெளிநாட்டு மண்ணிலும் நடத்த வேண்டும். அப்போதுதான் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இன்னும் பேலன்ஸ் ஆக இருக்கும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது குற்சாட்டு சுமத்தியுள்ள அம்பதி ராயுடு விரக்தியான கிரிக்கெட்டர் என முகமது அசாருதீன் பதில் அளித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகையிலான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, பின்னர் தனது முடிவில் இருந்து பின்வாங்கி ஐதராபாத் அணிக்காக விளையாட தயார் என்று அந்த கிரிக்கெட் சங்கத்துக்கு தகவல் அனுப்பினார்.
சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களை அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த வருடம் நடைபெற உள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன். நான் எதிர்பார்த்தபடி எதுவும் அமையவில்லை. அணியில் அதிக அளவில் அரசியல் உள்ளது. நல்ல கிரிக்கெட்டை விளையாடக்கூடிய சூழ்நிலை அணியில் இல்லை.
இந்த நிலைமை எனக்கு அசாதாரணமானதாக இருக்கிறது. எனவே வரும் ரஞ்சி சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடமாட்டேன். புதிய தலைவர் அசாருதீனிடம் இந்த பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தேன். தன்னாலான முயற்சிகளை எடுப்பதாக கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஐதராபாத் கிரிக்கெட் சங்க தேர்தல் வாக்குறுதியால் அணியின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. திறமை இல்லாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கிளப் நிர்வாகிகளின் சிபாரிசு அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதி படைத்தவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியமானதாகும். யாராவது ஒருவர் இதைப்பற்றி பேச வேண்டும் என்பதால் நான் பேசுகிறேன். ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட அர்ஜூன் யாதவ் அதற்கு தகுதியானவர் கிடையாது. செல்வாக்கின் காரணமாக அவர் இந்த பதவியை பெற்றுள்ளார்.
இவ்வாறு அம்பதி ராயுடு கூறினார்.
அம்பதி ராயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் அசாருதீன் பதில் அளிக்கையைில் ‘‘அவர் ஒரு விரக்தியான கிரிக்கெட்டர்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் விளையாட விராட் கோலியிடம் அனுமதி கேட்பேன் என ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கோடைக்காலம் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முக்கியமான அணிகளை வரவழைத்து டெஸ்ட் உள்பட முக்கிய போட்டிகளில் விளையாடும்.
முதல் போட்டியை பிரிஸ்பேனில் உள்ள கப்பா (Gabba) மைதானத்தில் நடத்தும். இங்குள்ள ஆடுகளம் தொடக்கத்தில் ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதன்பின் ஆடுகளத்தில் சற்று அதிகமான பவுன்ஸ் இருக்கும்.
ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இங்குள்ள சூழ்நிலையை நன்றாக அறிந்திருப்பதால் சுலபமாக ரன்கள் குவித்து விடுவார்கள். அதேபோல் சுழற்பந்து வீச்சில் பவுன்ஸ் இருப்பதால் எதிரணி பேட்ஸ்மேன்களை வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு மூலம் திணறடித்து விடுவார்கள்.
1988-ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலியா கப்பாவில் தோல்வியடைந்தது கிடையாது. தொடரின் தொடக்கத்திலேயே எதிரணியை மனதளவில் தோற்கடித்து விடுவார்கள். இந்தியா பிரிஸ்பேனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியில் டிரா கண்டுள்ளது.
ஆனால் கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. ஆனால் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறவில்லை. மாறாக அடிலெய்டில் நடைபெற்றது. இந்தியா அதில் வெற்றி பெற்றது.
அடுத்த கோடைக்காலத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா வரும்போது, பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் அனுமதி கேட்பேன் என்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பின் டிம் பெய்ன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது முதல் போட்டியை கப்பாவில் நடத்த விரும்புவீர்களா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு டிம் பெய் பதில் அளிக்கையில் ‘‘நிச்சயமாக. உறுதியாக நாங்கள் முயற்சி செய்வோம். இதை நாங்கள் விராட் கோலியால் செயல்படுத்த முடியும். குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் அவரிடம் இருந்து பதிலை பெறுவோம். அது உறுதி.
கடந்த கோடைக்கால தொடரை தவிர்த்து நீண்ட காலமாக நாங்கள் பிரிஸ்பேனில் இருந்துதான் தொடரை தொடங்கியுள்ளோம். ஆகவே, நாங்கள் அவரிடம் கேட்போம்.
விராட் கோலி நல்ல மனநிலையில் (good mood) இருந்தால், பிங்க்-பால் டெஸ்டிற்குக் கூட அனுமதியை பெறலாம்’’ என்றார்.

சையத் முஷ்டாக் அலி டிராபியில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் விளாச கர்நாடகா எளிதில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
சையத் முஷ்டாக் அலி டிராபி சூப்பர் லீக்கில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள கர்நாடகா - பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் ஷுப்மான் கில், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 5 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் மந்தீப் சிங் 50 பந்தில் 76 ரன்கள் குவித்தார். குர்கீரத் சிங் 44 ரன்கள் அடிக்க பஞ்சாப் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணியின் கேஎல் ராகுல், படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். படிக்கல் 2 ரன்னிலும், அடுத்து வந்த கடம் 23 ரன்னிலும், கேப்டன் மணிஷ் பாண்டே 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மறுபக்கம் விளையாடிய கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 48 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் விளாச கர்நாடகா 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் கர்நாடகா மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் கடைசி நாளில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 207 ரன்கள் உள்ள நிலையில், கைவசம் 7 விக்கெட்டை வைத்துள்ளது இங்கிலாந்து.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 394 ரன்கள் சேர்த்திருந்தது. வாட்லிங் 119 ரன்களுடனும், சான்ட்னெர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாட்லிங் - சான்ட்னெர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தது. வாட்லிங் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 205 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் சதத்தை பதிவு செய்த சான்ட்னெர் 126 ரன்களில் வெளியேறினார்.
201 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 615 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 262 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

தற்போது வரை நியூசிலாந்து 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளைய கடைசி நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினால் மட்டுமே இங்கிலாந்து டெஸ்டை டிரா செய்ய முடியும். ஒருவேளை 200 ரன்களுக்கு மேல் அடித்து ஆட்டமிழந்தால், நியூசிலாந்து அதிரடியாக விளையாடி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இதனால் இந்த டெஸ்ட் போட்டி நியூசிலாந்து கையில்தான் உள்ளது.

பின் 262 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ பேர்ன்ஸ், சிப்லே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும்வரை விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடினர்.

அணியின் ஸ்கோர் 21.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது சான்ட்னெர் பந்தில் சிப்லே ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ பேர்ன்ஸ் (31 ரன்கள்), லீச் (டக்அவுட்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 27.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.