என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நாதன் லியான் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை கைப்பற்ற, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட்டானது.
சிட்னி:
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து 215 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலியா 150 ஓவரில் 454 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர், கிராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டும், ஆஸ்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர்.
இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. காலை முதல் ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.
தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் ஒரு ரன்னில் அரை சதத்தை தவற விட்டார். லாதம் 49 ரன்னில் வெளியேறினார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. கிளென் பிலிப்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 95.4 ஓவரில் 251 ரன்னில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஆட்ட நேர இறுதியில், ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 23 ரன்னுடனும், ஜோ பர்ன்ஸ் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவுகாத்தி:
டி 20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறிமாறி முதலிடத்தை பிடித்து வந்தனர்.
வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் கோலி விளையாடாததால் ரோகித் சர்மா அவரை முந்தினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமையவில்லை. இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். கோலி 2,563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2,562 ரன்களுடன் 2-வது இடத்திலும் இருந்தனர்.
அதன்பின், மும்பையில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா 71 ரன்னும், விராட் கோலி 70 ரன்னும் எடுத்தனர். இதனால் இருவரும் 2,633 ரன்கள் எடுத்து சமனிலையில் உள்ளனர்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிராக கவுகாத்தியில் இன்று முதல் டி 20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு ரன் எடுத்தாலே சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எப்.சி. அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது கொல்கத்தா அணி.
மும்பை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் பிரனாய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து, மற்றொரு வீரர் சூசை ராஜ் 43வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதனால் முதல் பாதி முடிவில் கொல்கத்தா அணி 2-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், மும்பை அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இறுதியில், கொல்கத்தா அணி 2-0 என்ற கணக்கில் மும்பை சிட்டி எப. சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம், கொல்கத்தா அணி தான் ஆடிய 11 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 21 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
மும்பை அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்து 16 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது.
கவுகாத்தி:
மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இதில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.
இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் போட்டி இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இந்த ஆண்டிலும் அசத்தும் என்று நம்பலாம். ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு இந்த போட்டி தொடர் ஒரு படிக்கட்டாக பார்க்கப்படுகிறது.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் இடம் இறுதி செய்யப்பட்டுவிட்டாலும், ஒரு சில இடங்களுக்கு யாரை தேர்வு செய்வது என்பதை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனவே வீரர்கள் தங்கள் இடத்தை உறுதி செய்ய இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.
இந்த போட்டி தொடரில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஷிகர் தவான் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். உள்ளூர் போட்டியில் விளையாடாமல் நேரடியாக அணிக்குள் நுழைந்துள்ள பும்ரா பந்து வீச்சில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்து நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோரும் வேகப்பந்து வீச்சை தொடுப்பார்கள். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஆல்-ரவுண்டரில் வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஒரு ரன் எடுத்தாலே சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது இந்திய வீரர்கள் விராட்கோலி (75 போட்டியில் 2,633 ரன்கள்), ரோகித் சர்மா (104 போட்டியில் 2,633 ரன்கள்) ஆகியோர் சமநிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியில் பேட்டிங்கில் குசல் பெரேரா, மேத்யூஸ், பானுகா ராஜபக்சே, ஒஷாடா பெர்னாண்டோ, குணதிலகா ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். கேப்டன் மலிங்கா வேகப்பந்து வீச்சில் எதிரணிக்கு சவால் அளிப்பதில் வல்லவர். சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா உள்ளிட்ட சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி கடைசியாக நடந்த வங்காளதேசம் (2-1), வெஸ்ட்இண்டீஸ் (2-1) அணிகளுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியது. இலங்கைக்கு எதிரான தொடரையும் வென்று தனது வெற்றிப் பயணத்தை தொடர இந்திய அணி ஆர்வம் காட்டும். இலங்கை அணி கடைசியாக ஆடிய இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.
இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 16 இருபது ஓவர் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 11 ஆட்டத்திலும், இலங்கை அணி 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரு அணிகளும் இன்று சந்திப்பது 17-வது போட்டியாகும். கவுகாத்தி பார்சாபாரா ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி அரங்கேறி இருக்கிறது. 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. அந்த போட்டி முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பஸ் மீது ரசிகர்கள் கல்வீசி தாக்கியது நினைவிருக்கலாம்.
தற்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பேனர், அட்டை, மார்க்கர் உள்ளிட்ட பொருட்களை மைதானத்துக்குள் ரசிகர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர்.
இலங்கை: மலிங்கா (கேப்டன்), குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, மேத்யூஸ், தசுன் ஷனகா, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, இசுரு உதனா, பானுகா ராஜபக்சே, ஒஷாடா பெர்னாண்டோ, வானிந்து ஹசரங்கா, லாஹிரு குமாரா, குசல் மென்டிஸ், சன்டகன், கசுன் ரஜிதா.

கேப்டவுனில் நடைபெறும் 2-வது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் டீன் எல்கர், வான் டெர் டுசென் ஆகியோர் அரை சதமடிக்க தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டவுன்:
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பென் ஸ்டோஸ் 47 ரன்னும், ஜோ டென்லி 38 ரன்னும், ஜோ ரூட் 35 ரன்னும், சிப்லே 34 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஆலி போப் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. ஆலி போப் 61 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
தென்ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட், பிளெண்டர், நோர்ஜே, பிரிடோரியச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 88 ரன்னில் வெளியேறினார். அவருக்கு வான் டெர் டுசென் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்து 68 ரன்களில் அவுட்டானார்.
மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட், சாம் கர்ரன் , ச்உவர்ட் பிராடு தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி:
மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் நடந்ததால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக ரஞ்சி கிரிக்கெட், ஐ.எஸ்.எல் கால்பந்து, 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் இப்போது அமைதி திரும்பி விட்டது.
இந்நிலையில், இந்தியா - இலங்கை போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிஏஏ விவகாரத்தில் நான் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து சொல்ல விரும்பினால், அது குறித்து சாதக, பாதகங்களை தெரிந்திருக்க வேண்டும்.
சிஏஏ என்றால் என்ன என்பது குறித்து எனக்கு முழுமையான புரிதல் வேண்டும். அப்படி புரிதல் இருந்தால் மட்டுமே என்னால் கருத்து கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய வீரர் இர்பான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளங்கியவர் இர்பான் பதான். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 29 டெஸ்ட் (100 விக்கெட்), 120 ஒருநாள் (173 விக்கெட்), 24 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாறு படைத்தவர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் ஓவரின் கடைசி மூன்று பந்தில் சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுப் என மூன்று பேரையும் அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனையை அரங்கேற்றினார். தனது அசத்தல் சுவிங் பவுலிங்கால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுடன் ஒப்பிடப்பட்டார்.
2007-ல் இந்திய அணி டி-20 உலகக்கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் இர்பான் பதான். இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இர்பான் பதான் இன்று அறிவித்துள்ளார்.
கடந்த 2012-ல் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இர்பான் பதான் கடைசியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் லாபஸ்சாக்னே இரட்டை சதம் அடித்து அசத்த, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 454 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னி:
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸ் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டேவிட் வார்னர் - லாபஸ்சாக்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
வார்னர் 45 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்தார். அவர் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பொறுப்புடன் ஆடிய லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 150 ஓவரில் 454 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லாபஸ் சாக்னே 215 ரன்னில் வெளியேறினார்.
நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர், கிராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டும், ஆஸ்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர இறுதியில், நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 26 ரன்னுடனும், டாம் பிளெண்டல் 34 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் பங்கேற்கும் இந்திய கைப்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் தமிழகத்தை சேர்ந்த உக்கரபாண்டியன், மிதுன்குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
சென்னை:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல கைப்பந்து தகுதி சுற்று போட்டி சீனாவின் ஜியாங்மெனில் வருகிற 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் சீனா, சீன தைபே, ஈரான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்கொரியா, கத்தார் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக்கில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.
ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் பங்கேற்கும் இந்திய கைப்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் தமிழகத்தை சேர்ந்த உக்கரபாண்டியன், மிதுன்குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அகின், சந்திரன் அஜித்லால், ஜெரோம் வினித், ஹான் தங்கலத்தில் ஜான் (4 பேரும் கேரளா), வினித்குமார் (கேப்டன், உத்தரகாண்ட்), அமித், ககன்குமார் (2 பேரும் அரியானா), ரஞ்சித் சிங் (பஞ்சாப்), காதிக் கம்லேஷ் (ராஜஸ்தான்), சின்ஹா திபேஷ்குமார் (சத்தீஷ்கார்), அஷ்வால் ராய், அசோக் கார்த்திக் (இருவரும் கர்நாடகம்) ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ஜி.இ.ஸ்ரீதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு எப்.சி. அணி.
பெங்களூரு:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் கோவா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனாலும், முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோவா அணியின் ஹியூகோ பவுமாஸ் 61 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.
ஆட்டம் முடிவதற்கு சிறிது நேரம் முன்னதாக, 84வது நிமிடத்தில் சுனில் சேத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பெங்களூரு அணி 2-1 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம் பெங்களூரு அணி தான் ஆடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்து 19 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
கோவா அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 21 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.
கேப்டவுனில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில், ஆலி போப்பின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டவுன்:
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிராலி 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இங்கிலாந்தின் பென் ஸ்டோஸ் 47 ரன்னும், ஜோ டென்லி 38 ரன்னும், ஜோ ரூட் 35 ரன்னும், சிப்லே 34 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஆலி போப் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார்.
முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 89 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் 56 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
தென்ஆப்பிரிக்கா சார்பில் பிளெண்டர், ரபாடா, நோர்ஜே, பிரிடோரியச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
டெஸ்டில் கிரிக்கெட்டில் அசத்தி வரும் லாபஸ்சாக்னேவை அடுத்த ஆஸ்திரேலிய அணி கேப்டனாக பார்க்கிறேன் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர், ஸ்மித் தடையின்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மிகப்பெரிய அளவில் தடுமாறியது. அவர்கள் வந்தபின் ஆஷஸ் தொடரில் இருந்து அந்த அணி வேகம் எடுத்துள்ளது.
ஆஷஸ் தொடரின்போது ஸ்மித்திற்கு மாற்றாக வந்த மார்னஸ் லாபஸ்சாக்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கோடைக்கால சீசனில் ரன்மேல் ரன் குவித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த லாபஸ்சாக்னே, நியூசிலாந்துக்கு எதிரான பெர்த் டெஸ்டிலும் சதம் அடித்தார்.
மெல்போர்ன் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தாலும், இன்று தொடங்கிய சிட்னி டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கு சதம் விளாசியுள்ளார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லாபஸ்சாக்னேவை அடுத்த கேப்டனாக பார்க்கிறேன் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மார்னஸ் லாபஸ்சாக்னே எதிர்காலம் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘டிம் பெய்ன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை எட்டவில்லை. கடந்த வாரம் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது டிராவிஸ் ஹெட் துணைக் கேப்டனாக உள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் மார்னஸ் லாபஸ்சாக்னேவும் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்ற பேச்சு மெல்ல மெல்ல தொடங்கும் அளவிற்கு அணியில் அவரை நிலைநிறுத்திக் கொள்வார். தற்போதைய கேப்டன் அணியில் இருந்து விலகும்போது அவர் சரியான நபராக இருப்பார்.
டிம் பெய்ன் இன்னும் ஒரு வருடம் கேப்டனாக இருக்க நான் ஆதரவு கொடுப்பேன். அவருக்கு 35 வயதாகிறது. ஆனால் கிரிக்கெட் வரைமுறையின்படி அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். டிம் பெய்னின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். சிறந்த கீப்பர் பற்றி எல்லோருக்கும் தெரியும், அவர் தொடர்ந்து ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பாக இருந்தால், குறைந்த ஒரு வருடம் அணியில் நீடிப்பார்’’ என்றார்.