search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரை சதமடித்த டீன் எல்கர்
    X
    அரை சதமடித்த டீன் எல்கர்

    டீன் எல்கர், வான் டெர் டுசென் அரை சதம் - இரண்டாம் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 215/8

    கேப்டவுனில் நடைபெறும் 2-வது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் டீன் எல்கர், வான் டெர் டுசென் ஆகியோர் அரை சதமடிக்க தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.
    கேப்டவுன்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பென் ஸ்டோஸ் 47 ரன்னும், ஜோ டென்லி 38 ரன்னும், ஜோ ரூட் 35 ரன்னும், சிப்லே 34 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஆலி போப் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார்.

    இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. ஆலி போப் 61 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். 

    தென்ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட், பிளெண்டர், நோர்ஜே, பிரிடோரியச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 88 ரன்னில் வெளியேறினார். அவருக்கு வான் டெர் டுசென் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்து 68 ரன்களில் அவுட்டானார்.

    மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட், சாம் கர்ரன் , ச்உவர்ட் பிராடு தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×