search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உக்கரபாண்டியன் - மிதுன்குமார்
    X
    உக்கரபாண்டியன் - மிதுன்குமார்

    ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியில் 2 தமிழக வீரர்கள்

    ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் பங்கேற்கும் இந்திய கைப்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் தமிழகத்தை சேர்ந்த உக்கரபாண்டியன், மிதுன்குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
    சென்னை:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல கைப்பந்து தகுதி சுற்று போட்டி சீனாவின் ஜியாங்மெனில் வருகிற 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் சீனா, சீன தைபே, ஈரான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்கொரியா, கத்தார் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக்கில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

    ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் பங்கேற்கும் இந்திய கைப்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் தமிழகத்தை சேர்ந்த உக்கரபாண்டியன், மிதுன்குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அகின், சந்திரன் அஜித்லால், ஜெரோம் வினித், ஹான் தங்கலத்தில் ஜான் (4 பேரும் கேரளா), வினித்குமார் (கேப்டன், உத்தரகாண்ட்), அமித், ககன்குமார் (2 பேரும் அரியானா), ரஞ்சித் சிங் (பஞ்சாப்), காதிக் கம்லேஷ் (ராஜஸ்தான்), சின்ஹா திபேஷ்குமார் (சத்தீஷ்கார்), அஷ்வால் ராய், அசோக் கார்த்திக் (இருவரும் கர்நாடகம்) ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ஜி.இ.ஸ்ரீதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×