என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டெஸ்டில் கிரிக்கெட்டில் அசத்தி வரும் லாபஸ்சாக்னேவை அடுத்த ஆஸ்திரேலிய அணி கேப்டனாக பார்க்கிறேன் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    டேவிட் வார்னர், ஸ்மித் தடையின்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மிகப்பெரிய அளவில் தடுமாறியது. அவர்கள் வந்தபின் ஆஷஸ் தொடரில் இருந்து அந்த அணி வேகம் எடுத்துள்ளது.

    ஆஷஸ் தொடரின்போது ஸ்மித்திற்கு மாற்றாக வந்த மார்னஸ் லாபஸ்சாக்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கோடைக்கால சீசனில் ரன்மேல் ரன் குவித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த லாபஸ்சாக்னே, நியூசிலாந்துக்கு எதிரான பெர்த் டெஸ்டிலும் சதம் அடித்தார்.

    மெல்போர்ன் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தாலும், இன்று தொடங்கிய சிட்னி டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கு சதம் விளாசியுள்ளார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லாபஸ்சாக்னேவை அடுத்த கேப்டனாக பார்க்கிறேன் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    மார்னஸ் லாபஸ்சாக்னே எதிர்காலம் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘டிம் பெய்ன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை எட்டவில்லை. கடந்த வாரம் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது டிராவிஸ் ஹெட் துணைக் கேப்டனாக உள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் மார்னஸ் லாபஸ்சாக்னேவும் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்ற பேச்சு மெல்ல மெல்ல தொடங்கும் அளவிற்கு அணியில் அவரை நிலைநிறுத்திக் கொள்வார். தற்போதைய கேப்டன் அணியில் இருந்து விலகும்போது அவர் சரியான நபராக இருப்பார்.

    டிம் பெய்ன் இன்னும் ஒரு வருடம் கேப்டனாக இருக்க நான் ஆதரவு கொடுப்பேன். அவருக்கு 35 வயதாகிறது. ஆனால் கிரிக்கெட் வரைமுறையின்படி அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். டிம் பெய்னின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். சிறந்த கீப்பர் பற்றி எல்லோருக்கும் தெரியும், அவர் தொடர்ந்து ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பாக இருந்தால், குறைந்த ஒரு வருடம் அணியில் நீடிப்பார்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளதால், உலக கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சு குழுவை வழி நடத்த ஸ்டெயின் ஆர்வமாக உள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு தயாரானபோது காயத்தால் வெளியேறினார். அந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்கா மோசமான தோல்வியை தழுவியது.

    காயத்தில் இருந்து மீண்ட ஸ்டெயின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார்.

    ஆனால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம் பெறவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் முதன்முறையாக கலந்து கொண்டு விளையாடினார்.

    இந்நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான தென்ஆப்பிரிக்காவின் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் கடைசியில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்கா அணியின் இடம் பிடித்து வேகப்பந்து வீச்சு குழுவை வழி நடத்தும் ஆர்வத்தில் உள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘என்னுடன் கடைசியாக அவர்கள்  நடத்திய கலந்துரையாடலை வைத்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நான் இடம் பெறுவேன் என்பது தெரிய வந்தது.

    எனக்கு இருண்டு வாரங்கள் சிறப்பான ஓய்வு கிடைத்துள்ளது. அதன்பின் அணிக்கு நேராக திரும்புவேன். ஒருநாள் போட்டியிலும் வளம் வருவேன். ஆனால் எத்தனை போட்டிகளில் விளையாடுவேன் என்று தெரியாது. ஆனால் உறுதியான டி20 கிரிக்கெட்டில் இருப்பேன்.

    வீரர்கள் அறையில் என்னை போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது முக்கியமானது. ரபாடா (வயது 24) அணியின் பந்து வீச்சு குழுவை மிகவும் இளம் வயதில் வழி நடத்திச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து வரும் வீரர்கள் அவரை விட இளமையாக இருக்கிறார்கள். இதனால் அனுபவம் மிக்க பந்து வீச்சாளர் ஒருவர் தேவை. அப்போது அவர் தனிநபராக மட்டும்தான் அங்கு இருக்கவில்லை என்பது அவருக்கும் தெரியும்.

    டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பது இலக்கு. தற்போது என்னுடைய கிரிக்கெட்டை மிகவும் மகிழ்ச்சியாக தொடங்கி இருக்கிறேன். டெஸ்ட்  போட்டியை விட டி20-யில் நான்கு ஓவர்கள் வீசுவது மிகவும் எளிதானது.

    அதனால் உலக கோப்பையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். வீரர்கள் தேர்வு எப்படி செல்கிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன்.

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 4-ந்தேதி தொடங்குகிறது. டி20 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 12-ந்தேதி தொடங்குகிறது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 4-வது சுற்று போட்டியில் மும்பை உள்பட முன்னணி அணிகள் முதல் நாளிலேயே ஆல்-அவுட் ஆகி ஏமாற்றம் அடைந்துள்ளன.
    ரஞ்சி டிராபி 2019-2020 தொடரின் 4-வது சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. மகாராஷ்டிரா - சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மகாராஷ்டிரா 44 ரன்னில் சுருண்டது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய சர்வீசஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்துள்ளது.

    உத்தரகாண்ட் அணிக்கெதிராக அசாம் 5 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது. ரியான் பராக் சதம் (104) அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பீகாருக்கு எதிராக மிசோரம் 2 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பிராடிக் தேசாய் 192 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

    கோவாவுக்கு எதிராக மணிப்பூர் 106 ரன்னில் சுருண்டது. பின்னர் கோவா 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர் சுமிரன் அமோன்கர் (115) சதம் அடித்தார்.

    ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக ஜார்கண்ட் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடித்துள்ளது.

    ஐதராபாத் அணிக்கெதிராக கேரளா 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்துள்ளது.

    டெல்லி அணிக்கெதிராக பஞ்சாப் 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் அடித்துள்ளது.

    ஆந்திர பிரதேசம் அணிக்கெதிராக ராஜஸ்தான் 151 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆந்திர பிரதேசம் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் அடித்துள்ளது.

    மத்திய பிரதேசம் அணிக்கெதிராக இமாச்சல பிரதேசம் 175 ரன்னில் சுருண்டது. மத்திய பிரதேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்துள்ளது.

    கர்நாடக அணிக்கெதிராக மும்பை 194 ரன்னில் சுருண்டது. பின்னர் கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 79  ரன்கள் அடித்துள்ளது.

    ரெயில்வேஸ் அணிக்கெதிராக பரோடா 201 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ரெயில்வேஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

    திரிபுரா - ஒடிசா, மேகாலயா - புதுச்சேரி, நாகலாந்து - சண்டிகர், சிக்கிம் - அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் -ஹரியானா, பெங்கால் - குஜராத், உத்தர பிரதேசம் - தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தொடங்கவில்லை.
    பிக் பாஷ் டி20 லீக்கில் கிறிஸ் லின் 55 பந்தில் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் விளாச பிரிஸ்பேன் ஹீட் 212 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
    பிக் பாஷ் டி20 லீக்கில் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

    ஹோபர்ட் ஹரிகேன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் ஹீட் முதலில் பேட்டிங் செய்தது. டாம் பாண்டன், பிரியன்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    பாண்டன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரியன்ட் உடன் கேப்டன் கிறிஸ் லின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரியன்ட் 36 பந்தில் 65 ரன்கள் விளாசினார்.

    அடுத்து வந்த ரென்ஷா 17 பந்தில் 30 ரன்களும், பென் கட்டிங் 8 பந்தில் 18 ரன்களும் சேர்த்தனர். கிறிஸ் லின் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 88 ரன்கள் விளாச பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

    பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் டி'ஆர்கி ஷார்ட், ஜுவெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷார்ட் 25 ரன்னிலும், ஜுவெல் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    மெக்டெர்மோட் 23 ரன்னிலும், மில்லர் 23 ரன்னிலும், பெய்லி 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குறைந்த பந்தில் இவர்கள் ரன்கள் குவித்தாலும் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாமல் போனது.

    ஆகவே ஹோபர்ட் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பிரிஸ்பேன் ஹீட் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புள்ளிகள் பட்டியலில் பிரிஸ்பேன் ஹீட் ஐந்து போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மூலம் நான்கு புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் 2 வெற்றிகள் மூலம் ரன்ரேட் அடிப்படையில் 7-வது இடத்தில் உள்ளது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் நான்கில் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது.
    மலிங்காவிடம் இருந்துதான் யார்க்கர் பந்து வீச்சு முறையை கற்றுக் கொண்டேன் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு என்கிறார் பும்ரா.
    கிரிக்கெட்டில் பந்தை த்ரோ செய்வது போன்ற ஆக்சனுடன் பந்து வீசக் கூடியவர் லசித் மலிங்கா. தொடக்க காலத்தில் சராசரியாக 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் வல்லமை படைத்த அவர், அதே நேரத்தில் துல்லியமான யார்க்கர் பந்து வீச்சாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடியவர்.

    ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் யார்க்கராக வீசும் திறமை அவரிடம் உண்டு. 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அவர், திடீரென 110 கி.மீட்டர் என வேகத்தையும் குறைத்தும், ஸ்லோ-ஒன் பந்தை வீசுவதிலும் வல்லவர். அவரது கை ஆக்சனை பார்த்து வேரியேசனை கண்டுபிடிக்க முடியாது. இதனால் முதன்மை பேட்ஸ்மேன்களில் இருந்து கடைசி நிலை பேட்ஸ்மேன்கள் வரை பயப்படுவார்கள்.

    அவருக்குப் பின் தற்போது பும்ரா உலகின் தலைசிறந்த யார்க்கர் பந்து வீச்சாளராக உள்ளார். மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் உச்சத்தில் இருக்கும்போது பும்ரா அந்த அணியின் புதுமுக வீரராக அறிமுகம் ஆனார்.

    இதனால் மலிங்காவிடம் இருந்துதான் பும்ரா யார்க்கர் பந்து வீச்சு முறையை கற்றுக் கொண்டார் என பெரும்பாலான ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    ஆனால், அது தவறானது என பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘நான் மலிங்காவிடம் இருந்து யார்க்கர் பந்து வீச்சு முறையை கற்றுக் கொண்டேன் என்று ஏராளமான ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல.

    அவர் போட்டியின்போது ஏதும் எனக்கு கற்றுக்தரவில்லை. அவரிடம் இருந்து மனநிலையை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். மாறுபட்ட சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும், கோபப்படாமல் இருப்பது எப்படி, பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி திட்டம் தீட்ட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.

    மலிங்கா, பும்ரா

    நான் வெளியில் சென்று விளையாடாமல் இருக்கும்போது டிவி-யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் எப்போதும் பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவது, வேகமாக பந்து வீசுவது, க்ளீன் போல்டு போன்றவற்றை விரும்புவேன். நானும் அதை போன்று வீச வேண்டும் என்று விரும்புவேன். என்னுடைய மனதில் நான் பிரெட் லீ, அவரை போன்று பந்து வீச வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அவர் போன்று பந்து வீசியிருக்கிறேன். என்னுடைய ஹீரோவிடம் இருந்து காப்பி அடித்திருக்கிறேன்’’ என்றார்.
    2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களில் சிறந்த நபரை கொண்டு ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார் ராபின் உத்தப்பா.
    கடந்த 10 ஆண்டுகளில் (2010 முதல் 2019 வரை) விளையாடிய வீரர்களில் தலைசிறந்த வீரர்களை கொண்டு கிரிக்கெட் விமர்சகர்கள், பத்திரிகைகள் மூலம் சிறந்த அணிகள் வெளியிடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கிய பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை வெளியிட்டுள்ளார்.

    எம்எஸ் டோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்துள்ளார். ராபின் உத்தப்பாவின் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் கெய்ல், 3. விராட் கோலி, 4. ஸ்டீவ் ஸ்மித், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. யுவராஜ் சிங், 7. எம்எஸ் டோனி, 8. பென் ஸ்டோக்ஸ், 9. டேனியல் வெட்டோரி, 10. ஜாகீர் கான், 11. லசித் மலிங்கா
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத், மிகச் சிறந்த பேக்-அப் வீரர்களை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருப்பர் எம்எஸ்கே பிரசாத். இவரது பதவிக்காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. அவருக்குப் பதிலாக புதிய தலைவரை விரைவில் பிசிசிஐ நியமிக்க இருக்கிறது.

    இந்நிலையில் எங்களது பதவிக்காலத்தில் தலைசிறந்த 10 பேக்-அப் வீரர்களை கண்டறிந்து பெஞ்ச் வலிமையை அதிகரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    நீங்கள் தொடக்க பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் ரோகித் சர்மா தற்போது முன்னணியில் உள்ளார். அவருடன் மயங்க் அகர்வால் களம் இறங்கி விளையாடி வருகிறார். மேலும், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், அபிமன்யு ஈஷ்வரன், பிரியங்க் பன்சால் உள்ளனர். எந்தவொரு நாட்களிலும் இதில் உள்ள வீரர்களால் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட முடியும்.

    பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் நவ்தீப் சைனி, அவேஷ் கான், பாசில் தம்பி, சந்தீப் வாரியர், இஷாந்த் பொரேல், முகமது சிராஜ் ஆகியோரை தயார் படுத்து வைத்துள்ளோம். ஒவ்வொரு இடத்திற்கும் மாற்று வீரர்கள் இருக்கிறார்கள்.

    இந்த பெஞ்ச் வலிமை இந்திய அணியை மூன்று வகை கிரிக்கெட்டிலும் வலிமை படுத்தும் என நம்புகிறேன் என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
    கோவாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாவில் தங்கம் வென்ற வேலம்மாள் பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
    கோவாவில் கடந்த 29-ந்தேதி ஆசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. 10 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் முகப்பேர் வேலம்மாள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவன் சாய் ஸ்ரீகார்த்திக் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.

    அதேபோல் எட்டு வயத்திற்கு உட்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசந்தான் பாலன் தங்கம் வென்றார்.

    இருவரும் தமிழக பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையனை பார்த்து தங்கப்பதகத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இருவருக்கும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

    சாதனைப் படைத்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ரத்ன சபாபதி மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கு ஷாக் கொடுத்த சர்வீசஸ், மகாராஷ்டிரா அணியை 44 ரன்களில் சுருட்டியது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று எராளமான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மகாராஷ்டிரா - சர்வீசஸ் அணிகள் விளையாடுகின்றன.

    மகாராஷ்டிரா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி காததிருந்தது. முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    அதன்பின் வந்த சத்யஜீத் பச்சாவ் 11 ரன்களும், சிராக் குராணா 14 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 30.2 ஓவர்களே தாக்குப்பிடித்த மகாராஷ்டிரா 44 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள்.

    சர்வீசஸ் அணி சார்பில் பூனம் பூனியா 10.2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். சச்சிதானந்த் பாண்டே 3 விக்கெட்டும், திவேஷ் பதானியா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முந்தைய போட்டியில் மும்பை அணியை இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ரன்னில் சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணி அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தத்கது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோரி பேர்ன்ஸ், காயத்தால் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

    2-வது டெஸ்ட் இன்று கேப் டவுனில் தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து வீரர்கள் வார்ம்-அப்பில் ஈடுபட்டனர். ஒரு பகுதியாக கால்பந்து விளையாடினார்கள். அப்போது எதிர்பாராத விதமாக தொடக்க பேட்ஸ்மேன் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் கேப் டவுன் டெஸ்டுடன் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதியை ஆலோசகராக நியமித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2018 மற்றும் 2019 சீசனில் விளையாடியவர் இஷ் சோதி. 2020 சீசனுக்கான ஏலத்திற்கு முன் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்தது. ஏலத்தில் எந்த அணியில் இவரை எடுக்கவில்லை.

    இந்நிலையில் இஷ் சோதியை சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது. இவர் பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே உடன் இணைந்து செயல்படுவார். இஷ் சோதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வெல்லும் என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பிரையன் லாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விராட் கோலி தலைமையில் தற்போதுள்ள இந்திய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வெல்லும் திறன் படைத்தது. எந்த போட்டி தொடரிலும் கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி போன்ற முந்திய ஆட்டங்களில் இந்தியாவை எதிர்த்து விளையாட வேண்டியதிருக்கும் என்று ஒவ்வொரு அணியும் உணர்ந்துள்ளன. 2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. ஆனால் தற்போதைய அணி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    டெஸ்டில் எனது 400 ரன் சாதனையை முறியத்து டேவிட் வார்னர், ரோகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளது. விராட் கோலி முன்னதாகவே களம் இறங்கினால் 400 ரன் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    4-வது இடத்தில் களம் இறங்கும் ஸ்டீபன் ஸ்மித் எனது சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். அவர் சிறந்த வீரர் என்றாலும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரால் ஆதிக்கம் செலுத்தி விளையாட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×