என் மலர்
செய்திகள்

காயத்தால் விலகிய ரோரி பேர்ன்ஸ்
கால்பந்து விளையாடியபோது காயம்: தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து ரோரி பேர்ன்ஸ் விலகல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோரி பேர்ன்ஸ், காயத்தால் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் இன்று கேப் டவுனில் தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து வீரர்கள் வார்ம்-அப்பில் ஈடுபட்டனர். ஒரு பகுதியாக கால்பந்து விளையாடினார்கள். அப்போது எதிர்பாராத விதமாக தொடக்க பேட்ஸ்மேன் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் கேப் டவுன் டெஸ்டுடன் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

Next Story