என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களை உத்வேகம் படுத்தும் வகையில் மைக் ஹசி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்கள்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தலைசிறந்த முன்னாள் வீரர்களை அணியுடன் அனுப்பி வைப்பார்கள். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின்போது ஸ்டீவ் அணியுடன் சென்றார். அவர் அணிக்கு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.

    ஆஸ்திரேலியா அணி தென்அப்பிரிக்கா சென்று 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அப்போது மைக் ஹசி அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் என்றும், மார்ச் மாதம் நியூசிலாந்து சென்று டி20 தொடரில் விளையாடுகிறது. அப்போது மைக் ஹசி ஆலோசகராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் தொடரை 0-3 என இழக்க மோசமான பீல்டிங் முக்கிய காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 0-3 என இழந்தது. முதல் போட்டியில் 347 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை. 2-வது போட்டியில் 273 ரன்னை சேஸிங் செய்ய முடியவில்லை. இன்று 296 ரன்கள் அடித்தும் பயனில்லை.

    மோசமான பீல்டிங்கே ஒயிட்வாஷ் ஆனதற்கு முக்கிய காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளும் மிகவும் மோசமானது என்று சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்கள் கடினமான சூழ்நிலையில் இருந்து ஃபார்முக்கு திரும்பியது எங்களுக்கு நேர்மறையாக அமைந்தது. ஆனால் நாங்கள் செய்த பீல்டிங் மற்றும் பந்து வீச்சில், வெற்றி பெறுவதற்கான போதுமான கம்போசர் இல்லை.

    இந்தத் தொடரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணி கிடையாது. நாங்கள் மிகவும் மோசமாக விளையாடவில்லை. வாய்ப்புகளை எங்களால் அறுவடை செய்ய முடியாமல் போனது. இந்தத் தொடரில் விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவம். அவர்கள் காலூன்றுவதற்கான வழிகளை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

    எங்களை விட நியூசிலாந்து மிகத் தீவிரமாக விளையாடினார்கள். எங்களை ஒயிட்வாஷ் செய்ய அவர்கள் தகுதியானவர்கள். நாங்கள் டெஸ்ட் தொடரை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தற்போது டெஸ்டில் பேலன்ஸ் அணியாக திகழ்கிறோம். டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என நினைக்கிறோம். ஆனால், சரியான மனநிலையில் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும்’’ என்றார்.
    விராட் கோலி, ஸ்மித், கேன் வில்லியம்சனை மிரட்டும் வகையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் பாபர் அசாம்.
    பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். இவர் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோலி போன்று விளையாடுகிறார் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    டி20-யில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் அசாம் வங்காளதேசம் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 800 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படும் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 814 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஜோ ரூட் 764 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

    மார்னஸ் லபுஸ்சேன் 827 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி, ஸ்மித்தை நெருங்க வாய்ப்பு உள்ளது.
    அடையாறில் உள்ள காந்தி நகர் மைதானத்தில் நடைபெற்ற பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.

    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப் மைதானத்தில், பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான தேசிய டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டி பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கியது.

    இதில் 18 வயதுக்கு உட்பட்ட 160 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 97 பேர் ஆவர். 63 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

    இதன் ஆண்கள் பிரிவு ஒற்றையர் இறுதிப்போட்டியில் கோவை வீரர் பூபதி சக்திவேலுவும், பெங்களூர் வீரர் எரிக் நிகிலனும் மோதினார்கள். இதில் எரிக் நிகிலன் 6-1, 4-6, 6-4 என்ற செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    இரா.கண்ணன்ஆதித்தன் பரிசு வழங்கினார். 

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் மராட்டியத்தைச் சேர்ந்த அகன்ஷா நிதுரோ மற்றும் வைஷ்ணவி அதுகல் ஆகியோர் மோதினார்கள். இதில் அகன்ஷா நிதுரோ 6-3, 4-6, 6-4 என்ற செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    வெற்றி பெற்றவர்களுக்கு மாலை முரசு நாளிதழ் மற்றும் மாலை முரசு தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    நியூசிலாந்துக்கு எதிராக 30 ஒவர்கள் வீசிய பும்ராவால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத மோசமான சம்பவமாக இந்தத் தொடர் அமைந்துள்ளது.
    இந்தியா மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி தொடரை 5-0 என கைப்பற்றியது. நியூசிலாந்து சொந்த நாட்டிலேயே ஒயிட்வாஷ் ஆனது.

    அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்தத் தொடரில் நியூசிலாந்து 3-0 என வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்தத் தொடர் பும்ராவுக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. மூன்று போட்டிகளிலும் 30 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு ஓவரை மட்டுமே மெய்டனாக வீசினார். 167 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.

    பும்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இந்தத் தொடருக்கு முன்பு வரை குறைந்தது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தாமல் இருந்தது கிடையாது. முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தத் தொடரில் பும்ரா மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    அதேபோல் விராட் கோலிக்கும் இந்தத் தொடர் மோசமானதாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 25 ஆகும். முதல் போட்டியில் 51 ரன்கள் அடித்த விராட் கோலி 2-வது போட்டியில் 15 ரன்களும், இன்றைய 3-வது போட்டியில் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

    2015-க்குப் பிறகு விராட் கோலியின் மிகக் குறைந்த சராசரி இதுதான். இந்த இரண்டு பேரின் மோசமான செயல்பாடுதான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
    நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 3-0 எனக்கைப்பற்றியது.

    ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. இதன்மூலம் 1989-ம் ஆண்டுக்குப்பிறகு முதன்முறையாக மூன்று போட்டிகளுக்கு மேல் கொண்ட தொடரில் ஒயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

    இதற்கு முன் 1989-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா ஒயிட்வாஷ் ஆகியிருந்தது. அதன்பின் தற்போது ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
    3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை எளிதாக வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் ஒயிட்வாஷ் ஆனதற்கு பழிக்குப்பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது.  கேஎல் ராகுல் 112 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களும், மணிஷ் பாண்டே 42 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட கப்தில் அதிரடியாக விளையாடி 46 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 66 ரன்கள் விளாசினார்.

    அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 22 ரன்னிலும், ராஸ் டெய்லர் 12 ரன்னிலும் வெளியேறியனர். மறுமுனையில் நிக்கோல்ஸ் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 32.5 ஓவரில் 189 ரன்கள் எடுத்திருந்தது.

    103 பந்தில் 108 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் டாம் லாம் உடன் நீசம் ஜோடி சேர்ந்தார். நீசம் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிராண்ட்ஹோம் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் என விரட்டினார். டாம் லாதம் அவருக்கு துணையாக பந்துக்கு பந்து ரன்கள் சேர்த்தார். கிராண்ட் ஹோம் அரைசதம் அடிக்க நியூசிலாந்து 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் விளாசி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியிருந்தது. தற்போது அதற்கு பழிப்பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து.

    கிராண்ட்ஹோம் 28 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்களும், டாம் லாதம் 34 பந்தில் 3 பவுண்டரியுடன் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் காரணமாக ஆலன் பார்டர் விருதை வென்றார் டேவிட் வார்னர்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும். 2019-ல் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.

    சிறந்த டெஸ்ட் வீரர் விருதை மிடில் ஆர்டன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் வென்றார். ஆலன் பார்டர் விருதை  டேவிட் வார்னர் வென்றார். இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 647 ரன்கள் குவித்தார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் குவித்தார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி பெலிண்டா கிளார்க் விருதை வென்றார். சர்வதேச கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் மீடியாக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
    20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங். 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடித்து முத்திரை பதித்தார்.

    மேலும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 12 பந்தில் அரை சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார்.

    இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் சாத்தியமில்லை என்று என்னால் சொல்ல முடியும்.

    தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும் போது முடியாதது எதுவுமில்லை. ஆகவே காத்திருப்போம்.. சிறந்ததை எதிர்பார்ப்போம். கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

    கெய்ல், ரோகித்சர்மா, டிவில்லியர்ஸ்

    இந்த இருவராலும் 20 ஓவர் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க இயலும். அதோடு 3-வது நபராக ரோகித் சர்மாவாலும் இரட்டை சதம் அடிக்க முடியும். இந்த 3 வீரர்களால் இது சாத்தியமானது.

    இவ்வாறு யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

    20 ஓவர் சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மா 4 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் ஆரோன்பிஞ்ச். 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அவர் 172 ரன் குவித்து இருந்தார்.

    20 ஓவர் போட்டியில் கிறிஸ்கெய்ல் அதிக பட்சமாக 179 ரன் குவித்து இருந்தார். ஐ.பி.எல். போட்டியில் இந்த ரன்னை எடுத்தார்.
    தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் கிழக்கு லண்டனில் நாளை நடக்கிறது.
    கிழக்கு லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதேபோல 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் கிழக்கு லண்டனில் நாளை நடக்கிறது.

    இந்த போட்டியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டேயின் அணிக்கு திரும்பி உள்ளார்.
    19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக 5 வீரர்களை ஐசிசி எச்சரித்து உள்ளது.
    துபாய்:

    19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் வங்காளதேசம் சாம்பியன் பட்டம் பெற்று முதல்முறையாக உலககோப்பையை கைப்பற்றியது. அந்த அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

    வெற்றி கொண்டாட்டத்தின் போது வங்காளதேச வீரர்கள் மைதானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதால் இந்திய கேப்டன் பிரியம் கார்க் குற்றம் சாட்டினார். வெற்றி கொண்டாட்டத்தில் வங்காள தேசம்-இந்திய வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இறுதிப்போட்டியில் நடந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 5 வீரர்களை எச்சரித்து உள்ளது. வங்காளதேசத்தை சேர்ந்த முகமது தவ்கீத், ‌ஷமிம் உசேன், ரகிபுல் அசன் ஆகியோர் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தியாவை சேர்ந்த ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங் ஆகியோரையும் ஐ.சி.சி. எச்சரித்துள்ளது.
    நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 297 ரன்களை அந்த அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 3வது ஆட்டம் மவுண்ட் மாங்கானுவில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி இந்திய அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பவுண்டரிகளாக அடித்து அதிரடி காட்டிய ஷா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 9 ரன்னில் நடையை கட்டினார். ஷ்ரேயஸ் அய்யர் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  நீஷம் பந்தில் அவுட் ஆனார். 

    ஹமிஷ் பென்னட்

    அதன் பின்னர் வந்த கே.எல் ராகுலும், மனீஷ் பாண்டேவும் நிதானாமாக ஆடினர். சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் தனது 4-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 9 போர்கள் மற்றும் 2 சிக்சர்கள் உள்பட 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடித்து ஆட முயன்ற மனீஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.  

    இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹமிஷ் பென்னட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து  நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது. 
    ×