என் மலர்
விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கென பிரத்யேகமாக தனது மாயாஜால பந்து வீச்சில் கூடுதலாக ஒரு முறையை உருவாக்கியுள்ளேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். டி20 கிரிக்கெட்டில் முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார். இவர் கூக்ளி பந்து வீசுவதில் வல்லவர். 6 பந்துகளையும் 6 விதமாக வீசக்கூடியவர். இதனால் அவர் மர்மமான பந்து வீச்சு முறையை கொண்டவர் என அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் தனது பந்து வீச்சில் டெஸ்ட் போட்டிக்கென கூடுதலாக ஒரு பந்து வீச்சை முறையை மேம்படுத்தியுள்ளேன் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘வலைப்பயிற்சியில் என்னுடைய சிறந்த பந்து வீச்சை கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அதை கொண்டு வர மாட்டேன். அந்த மாதிரி பந்து வீச்சை டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்துவேன்.
டெஸ்ட் போட்டி எனக்கு கூடுதல் வாய்ப்பை கொடுக்கும். ஏனென்றால் டெஸ்டில் அதிகமான ஓவர்கள் வீச முடியும். மேலும் அதிகப்படியான நெருக்கடி கிடையாது. ஒரு மோசமான பந்தை வீசினால், அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் டி20 போட்டியில் அந்த பந்து முடிவை மாற்றிவிடும்’’ என்றார்.

பார்முலா-1 கார் பந்தயத்தில் ஷாங்காய் நகரில் நடைபெற இருந்த சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பல சுற்றுகளாக பார்முலா 1 கார்பந்தயம் போட்டி நடைபெறும். இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார்.
இந்த வருடத்திற்கான முதல் சுற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மார்ச் மாதம் 15-ந்தேதி நடக்கிறது. அதன்பின் பஹ்ரைனில் 22-ந்தேதியும், வியட்நாமில் ஏப்பல் ஐந்தாம் தேதியும் நடக்கிறது.
4-வது சுற்று சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஏப்ரல் 19-ந்தேதி நடப்பதாக இருந்தது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் பாதிப்பு நீண்ட நாட்களாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் சீனா கிராண்ட் பிரிக்ஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மும்பை அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான சர்பராஸ் கான் நான்கு போட்டிகளில் முச்சதம், இரட்டை சதம், சதம் என விளாசி பிரமிக்க வைத்துள்ளார்.
மும்பையை சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கான். 2016-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைபெற்ற 50 உலக கோப்பை தொடரில் பங்கேற்றவர். இவர் மும்பை அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு 16 வயதே ஆகும்.
தொடக்க காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போது நடைபெற்று வரும் 2019-2020 ரஞ்சி டிராபி தொடக்கத்தில் மும்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. நான்கு போட்டிகளுக்குப் பின் ஐந்தாவது போட்டியில் கர்நாடகாவிற்கு எதிராக களம் இறங்கினார். முதல் இன்னிங்சில் 8 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 71 ரன்களும் அடித்தார். தமிழ்நாடு அணிக்கெதிராக 36 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் உத்தர பிரதேசம் அணிக்கெதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் முச்சதம் அடித்து 301 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்த போட்டியில் இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 226 ரன்கள் விளாசினார். அதன்பின் நடைபெற்ற சவுராஷ்டிரா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 78 ரன்களும், 2-வது இன்னிங்சில் 25 ரன்களும் அடித்தார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய மத்திய பிரதேசம் அணிக்கெதிராக முதல்நாள் ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் 169 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் நான்கு போட்டிகளில் மூன்று மிகப்பெரிய இன்னிங்சை வெளிப்படுத்தியுள்ளார். நான்கு போட்டிகளில் இதுவரை 799 ரன்கள் குவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று தொடங்கிய ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மிசோரம் அணிக்கெதிராக கோவா முதல் நாளில் 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ரஞ்சி கோப்பைகைக்கான கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கியது. கொல்கத்தாவில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் கோவா- மிசோரம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மிசோரம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கோவா அணியின் அமோன்கர், கோவேகார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அமோன்கர் 32 ரன்னிலும், கோவேகார் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பட்டேல் உடன் கேப்டன் அமித் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பட்டேல் 236 ரன்கள் குவித்தும், அமித் வர்மா 148 ரன்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர்.
பட்டேல் ஆட்டமிழந்ததும் கோவா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அந்த அணி 77.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்தது. கோவா ஒரே நாளில் 450 ரன்னுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வு நன்றாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் தொடர் நடத்தக்கூடாது என்று சேத்தன் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதால் இரு நாடுகளுக்குமிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில்லை. ஆனால் சில வீரர்கள் கிரிக்கட் போட்டி நடத்த ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் இருநாட்டு கிரிக்கெட் தொடரை நடத்தக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேத்தன் சவுகான் கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடக்கக் கூடாது. இருநாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வு சிறந்ததாக இல்லை. பாகிஸ்தானில் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல. பயங்கரவாதிகள் கிரிக்கெட் மீது அக்கறை கொள்ளவில்லை. பயங்கரவாதம் பாகிஸ்தானில் உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் நடத்த முடியாது’’ என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஷுப்மான் கில்லை களம் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தனர். ரோகித் சர்மா காயத்தால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதால் ப்ரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 16 மாதங்களுக்குப்பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
21-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் உடன் களம் இறங்க ஷுப்மான் கில் மற்றும் ப்ரித்வி ஷா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘மாற்று தொடக்க வீரராக அணியில் இருந்து கொண்டும், ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் இருக்கும் ஷுப்மான் கில்லுக்கு கட்டாயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
மயங்க் அகர்வால் டெஸ்ட் பேட்ஸ்மேன் மற்றும் டாப் ஆர்டர் வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். அவர் போட்டியை பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவர் மூன்று ஒருநாள் மற்றும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி உள்ளார். இதனால் அவரை நீங்கள் நீக்கி விட முடியாது.
ஷுப்மான் கில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக விளையாடியுள்ளார். மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும்’’ என்றார்.
நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான முதல் போட்டியில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கிய ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய 2-வது போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணி நேரம் 39 நிமிடங்களில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது.
ஒரு மணி நேரம் 39 நிமிடங்களில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது.
நேபாளம் - அமெரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிர்திபூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அமெரிக்காவின் தொடக்க வீரர் மார்ஷல் மட்டும் தாக்குப்பிடித்து 16 ரன்கள் அடித்தார்.
மற்ற வீரர்கள் ஒற்றையிலபக்க ரன்னில் வெளியெற அமெரிக்கா 35 ரன்னில் சுருண்டது. நேபாளம் அணி சார்பில் லாமிச்சேன் 6 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். பின்னர் 36 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் 5.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது.
9.30 மணிக்கு தொடங்கிய போட்டி 11.09 மணிக்கு முடிந்து விட்டது. 50 ஓவர் போட்டி ஒரு மணி நேரம் 39 நிமிடத்திற்குள் முடிந்தது இதுவே முதல் முறையாகும்.

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்த பும்ரா தரவரிசையில் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்தத் தொடர் பும்ராவுக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. மூன்று போட்டிகளிலும் 30 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு ஓவரை மட்டுமே மெய்டனாக வீசினார். 167 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.
பும்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இந்தத் தொடருக்கு முன்பு வரை குறைந்தது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தாமல் இருந்தது கிடையாது. முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தத் தொடரில் பும்ரா மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தார்.
இந்த ஏமாற்றம் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 719 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். முஜீப் உர் ரஹ்மான் 3-வது இடத்தையும், ரபடா 4-வது இடத்தையும், பேட் கம்மின்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முழங்கை காயத்திற்கு ஆபரேசன் செய்ய இருப்பதால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இதற்கான ஆஸ்திரேலியா அணியில் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் இடம் பிடித்திருந்தார். அவர் முழங்கை காயம் சரியாக ஆபரேசன் செய்து கொள்ள இருக்கிறார். இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக டி'ஆர்கி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணிகளுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெத் மூனி ஆட்டமிழக்காமல் 71 (54 பந்துகள்) ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆனார். அதன் பின்னர் ஸ்மிர்தி மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் பொறுமையாக ஆடினர். சிறப்பாக விளையாடிய ஸ்மிர்தி மந்தனா அரைசதம் கடந்தார். அவர் 37 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன் பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெமியா ரொட்ரிகஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அருந்ததி ரெட்டி போன்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 144 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டி ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் ‘டை’யில் முடிந்ததால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஐசிசி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஆகவே தற்போது விதிமுறைகளை மாற்றியுள்ளது. டி20-க்கும் மாற்றியுள்ளது. டி20-க்கான புதிய விதிமுறை தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
1. போட்டி ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவர் விளையாடப்படும். சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.
2. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்
3. ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவியூ’ வாய்ப்பு வழங்கப்படும்.
4. சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.
5. போட்டியில் 2-வது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும்.
6. முதலில் பீல்டிங் செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். 2-வது பீல்டிங் செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
7. பீல்டர்கள் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும்.
8. சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 16 இன்னிங்சில் 9 அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ள ஷ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இன்று முடிவடைந்த கடைசி போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார். முதல் போட்டியில் சதமும், 2-வது போட்டியிலும் அரைசதமும் அடித்திருந்தார்.
ஷ்ரேயாஸ் அய்யர் இதுவரை ஒருநாள் போட்டியில் 16 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9 அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன்மூலம் இந்த குறைந்த இன்னிங்சில் அதிக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் சேப்டன் 8 அரைசதங்கள் அடித்தது சாதனையாக இருந்தது. தற்போது அதை ஷ்ரேயாஸ் அய்யர் முறியடித்துள்ளார்.