search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷ்ரேயாஸ் அய்யர்
    X
    ஷ்ரேயாஸ் அய்யர்

    ஒருநாள் கிரிக்கெட்டில் இயன் சேப்பலை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனைப் படைத்தார் ஷ்ரேயாஸ் அய்யர்

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 16 இன்னிங்சில் 9 அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ள ஷ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இன்று முடிவடைந்த கடைசி போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார். முதல் போட்டியில் சதமும், 2-வது போட்டியிலும் அரைசதமும் அடித்திருந்தார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் இதுவரை ஒருநாள் போட்டியில் 16 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9 அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன்மூலம் இந்த குறைந்த இன்னிங்சில் அதிக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் சேப்டன் 8 அரைசதங்கள் அடித்தது சாதனையாக இருந்தது. தற்போது அதை ஷ்ரேயாஸ் அய்யர் முறியடித்துள்ளார்.
    Next Story
    ×