என் மலர்
விளையாட்டு
ஜூனியர் உலக கோப்பையை வென்ற வங்காளதேச அணியினருக்கு அரசு சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாக்கா:
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. கோப்பையை வென்ற வங்காளதேச அணியினருக்கு அரசு சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வங்காளதேச அணி நாடு திரும்பியதும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான தேதி முடிவு செய்யப்படும்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த வரவேற்பு அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள புகழ்பெற்ற மைதானத்தில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் உலக கோப்பை வெற்றியை அநாகரீகமாக கொண்டாடியதாக வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு இந்திய கேப்டன் பிரியம் கார்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போட்செப்ஸ்ட்ரூம்:
தென்ஆப்பிரிக்காவில் நடந்த 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர்) போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் அக்பர் அலி தலைமையிலான வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தங்களது வெற்றியை வங்காளதேச வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள். அவர்களது செயல்பாடுகள் எதிரணியினரை எரிச்சல் அடைய செய்யும் வகையில் இருந்தது. அத்துடன் அவர்கள் இந்திய வீரர்களுடன் தள்ளு-முள்ளுவிலும் ஈடுபட்டனர். முன்னதாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் இந்திய பேட்ஸ்மேன்களை வெறுப்பூட்டும் வகையில் கேலி செய்தார்.
வங்காளதேச அணியின் எல்லை மீறிய வெற்றி கொண்டாட்டத்துக்கு இந்திய அணியின் கேப்டன் பிரியம் கார்க் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘போட்டியில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வியை நாங்கள் எளிதாக தான் எடுத்து கொண்டோம். ஆனால் வங்காளதேச அணியினர் வெற்றி பெற்றதும் உணர்ச்சியை வெளிப்படுத்திய விதம் அநாகரீகமானது. இதுபோல் அவர்கள் நடந்து கொண்டிருக்கக்கூடாது’ என்றார்.
வங்காளதேச அணி வீரர்களின் செயலுக்கு அந்த அணியின் கேப்டன் அக்பர் அலி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இதுபோல் நடந்து இருக்கக்கூடாது. என்ன நடந்தது என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதால் ஆர்வத்தின் காரணமாக வீரர்கள் இப்படி உணர்ச்சியை அதிகமாக வெளிப்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இளம் வீரர்கள் என்பதால் அதிக ஆக்ரோஷம் காட்டிவிட்டார்கள். எந்த நிலையிலும் எதிரணிக்கு மதிப்பு அளிக்க வேண்டும். கண்டிப்பாக ஆட்டத்தை மதிக்க வேண்டும். கிரிக்கெட் ஜென்டில்மேன் ஆட்டமாகும். எங்களது வீரர்கள் நடந்து கொண்ட விதத்திற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

ஐபிஎல் 2020 சீசன் நெருங்கி வரும் நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பீல்டிங் கோச்சராக நியமித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் பாஸ்டர். இவர் இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் கோச்சராக நியமித்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுபாதீப் கோஷ் இதற்கு முன் கேகேஆர் அணியின் கோச்சராக இருந்தார். இந்நிலையில் தற்போது பாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராகவும், கைல் மில்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராகவம் உள்ளனர்.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலியை ஒன்பது முறை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. பந்து வீச்சுக்கு சற்று சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். டிம் சவுத்தி இந்திய அணி கேப்டன் விராட் கோலியை க்ளீன் போல்டாக்கினார்.
ஒரு ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார். தொடர்ந்து ஐந்து பந்துகளில் நெருக்கடி கொடுத்து 6-வது பந்தில் விக்கெட் வீழ்த்தினார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலியை டிம் சவுத்தி இந்த போட்டியுடன் 9 முறை வீழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ‘‘விராட் கோலி உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்த சிறந்த வீரர். அவரிடம் அதிக அளவிலான பலவீனத்தை பார்க்க முடியாது. புது பந்தின்போது ஆடுகளம் சற்று கூடுதலாக பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தது. நீங்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தால், பந்து அங்கு சில காரியங்களை செய்யும். பிட்ச் சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துழைப்பு கொடுப்பது பொறுத்துதான் எல்லாம் அமையும்.
என்னுடைய வேலை விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதுதான். விராட் கோலி சிறந்த வீரர். சிறந்த ஃபார்மில் உள்ளார். குறிப்பாக சேஸிங்கில் அவர் அபாயகரமானவர். ஆகவே, அவருக்கு எதிராக விக்கெட் வீழ்த்துவதை சிறப்பானதாக கருதுகிறேன்’’ என்றார்.

உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலியை வீழ்த்த ஆடுகளத்தின் ஓத்துழைப்புதான் முக்கிய காரணம் என டிம் சவுத்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ‘‘விராட் கோலி உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்த சிறந்த வீரர். அவரிடம் அதிக அளவிலான பலவீனத்தை பார்க்க முடியாது. புது பந்தின்போது ஆடுகளம் சற்று கூடுதலாக பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தது. நீங்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தால், பந்து அங்கு சில காரியங்களை செய்யும். பிட்ச் சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துழைப்பு கொடுப்பது பொறுத்துதான் எல்லாம் அமையும்.
என்னுடைய வேலை விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதுதான். விராட் கோலி சிறந்த வீரர். சிறந்த ஃபார்மில் உள்ளார். குறிப்பாக சேஸிங்கில் அவர் அபாயகரமானவர். ஆகவே, அவருக்கு எதிராக விக்கெட் வீழ்த்துவதை சிறப்பானதாக கருதுகிறேன்’’ என்றார்.
டி20 தொடரின்போது காயம் அடைந்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் உடற்தகுதி பெற்றுள்ளதால் நாளைய போட்டியில் விளையாட இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. 3-வது போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. டாம் லாதம் தலைமையில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
நாளை கடைசி ஒருநாள் போட்டி நடக்கிறது. இதற்கிடையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள கேன் வில்லியம்சன் உடற்தகுதியை நிரூபித்துள்ளார். இன்று அவர் முழு உத்வேகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டடார். இதனால் நாளைய போட்டியில் அவர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இளையோர் உலக கோப்பையில் 400 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் முதல் இடம் பிடித்தார். பிஷ்னோய் 17 விக்கெட் வீழ்த்தினார்.
19 வயதுக்குட்பட்ட ஜூனியர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்திடம் தோற்று 5- வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியனான இந்தியா முதலில் விளையாடி 47.2 ஓவர்களில் 177 ரன்னில் சுருண்டது.
பின்னர் ஆடிய வங்காளதேசம் 41 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி வங்காளதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி முதல் முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப் பற்றியது.
இந்த போட்டி தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய வீரர்களே சாதித்தனர். ஜெய்ஸ்வால் 6 ஆட்டத்தில் 400 ரன் குவித்து முதல் இடத்தை பிடித்தார். சராசரி 133.33 ஆகும். அவர் ஒரு சதமும், 4 அரை சதமும் அடித்திருந்தார். இதனால் தொடர் நாயகன் விருது கிடைத்தது. ரசந்தா (இலங்கை) 284 ரன்னும், பார்சன் (தென் ஆப்பிரிக்கா) 265 ரன்னும் எடுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய வீரர் ரவி பிஷ்னோய் 17 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். 5 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஆப்கானிஸ்தான் வீரர் ஹபாரி, கனடாவை சேர்ந்த அகில்குமார் தலா 16 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி மற்றும் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 3-வது போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, பிளைர் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். டிக்னர் நாளைய போட்டியில் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. இஷ் சோதி முதல் ஆட்டத்தில் விளையாடினார். இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக விளையாட 2-வது போட்டியின்போது விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் 3-வது போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள ஸ்காட் குகலின் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். டிம் சவுத்தி மற்றும் மிட்செல் சான்ட்னர் வயிறு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் வழங்கப்படும் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை மார்னஸ் லபுஸ்சேன் தட்டிச் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும். 2019-ம் ஆண்டுக்கான விருது பட்டியலை அறிவித்து வருகிறது. சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை பெறுவதில் ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மினஸ், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி மார்னஸ் லபுஸ்சேன் தேர்வு செய்யப்பட்டார். லபுஸ்சேனுக்கு 25 வாக்குகளும், ஸ்டீவ் ஸ்மித்திற்கு 22 வாக்குகளும், பேட் கம்மின்ஸ்க்கு 19 வாக்குகளும் கிடைத்தன.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 65 பந்தில் 105 ரன்கள் விளாசிய நியூசிலாந்து அணி கேப்டன் சோபி டிவைன் உலக சாதனைப் படைத்துள்ளார்.
நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 4-வது போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டனும், தொடக்க வீராங்கனையுமான சோபி டிவைன் 65 பந்தில் 105 ரன்கள் விளாசினார்.
இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 102 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டியில் சதம் அடித்த சோபி டிவைன், டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய வீராங்கனை மிதலி ராஜ், நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் நான்கு முறை தொடர்ச்சியாக ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். அதை தற்போது சோபி டிவைன் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஷுப்மான் கில்லை தொடர்ந்து ரகானேவும் சதம் அடித்தார்.
நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் லிங்கோனில் நடைபெற்றது.
கடந்த 7-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து ‘ஏ’ டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மிட்செல் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சிராஜ், சந்தீப் வாரியர், அஸ்வின், ஆவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 111 ரன்னாக இருக்கும்போது விஹாரி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷுப்மான் கில் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷுப்மான் கில் 148 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் புஜாரா 88 பந்தில் அரைசதம் அடித்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ 1 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்திருந்தது. ஷுப்மான் கில் 107 ரன்னுடனும், புஜாரா 52 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. புஜாரா 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 136 ரன்கள் சேர்தார்.
அதன்பின் வந்த ரகானே, விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விஜய் சங்கர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். ரகானே சதம் அடித்தார். இந்தியா 109 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 467 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது. ரகானே 101 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஏற்கனவே முதல் போட்டியும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ராவல்பிண்டி டெஸ்டில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 168 ரன்னில் ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேசம் அணி 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் (100), நட்சத்திர வீரர் பாபர் அசாம் (143) ஆகியோர் சதம் அடிக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 122.5 ஓவரில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்காளம்தேசம் அணி சார்பில் அபு ஜயத், ருபெல் ஹொசைன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த வங்காளதேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 37 ரன்னுடனும், லிட்டோன் தாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் மொமினுல் ஹக் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோஸ் தாஸ் 29 ரன்கள் சேர்க்க மற்ற இருவரும் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் 168 ரன்னில் சுருண்டது. ஆகவே, பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நசீம் ஷா மற்றும் யாசீர் ஷா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மவுண்ட் மவ்கானுவில் நாளை நடக்கிறது.
மவுண்ட் மவ்கானு:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப் பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.
ஆனால் முதல் 2 ஆட்டத்தில் தோற்று ஒரு நாள் தொடரை இழந்தது. ஹேமில்டனில் நடந்த முதல் ஆட்டதில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 22 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மவுண்ட் மவ்கானுவில் நாளை (11-ந் தேதி) நடக்கிறது.
இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
முதல் போட்டியில் 348 ரன் குவித்தும் வெற்றியை பெற முடியவில்லை. இந்த தோல்விக்கு பந்து வீச்சாளர்களே காரணம். 2 -வது ஆட்டத்தில் 274 ரன் இலக்கை எடுக்க முடியவில்லை. இதற்கு பேடஸ்மேன்களே பொறுப்பு.
ஆறுதல் வெற்றி அவசியம் என்பதால் நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.
கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் மாற்றம் செய்யப்பட்டது. முகமது ஷமி, குல்தீப் யாதவுக்கு பதிலாக நவ்தீப் சைனி, சாஹல் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது பேட்டிங்கில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே ஆகியோருக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரோகித் சர்மா இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரேயாஸ் அய்யர் இந்த தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 155 ரன் எடுத்துள்ளார். கேப்டன் விராட்கோலி, ஜடேஜா, ராகுல் ஆகியோரும் நிலையாக விளையாடி வருகிறார்கள்.
பந்து வீச்சாளர்களில் பும்ராவின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்தியாவின் முதல் நிலை வேகப்பந்து வீரரான அவர் 20 ஓவர் வீசி 117 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை.
நாளைய ஆட்டத்திலாவது அவர் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு வேளை அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் முகமது ஷமி இடம் பெறலாம். இதேபோல ஷர்துல் தாக்கூரும் நேர்த்தியாக வீச வில்லை. அவர் அல்லது பும்ரா கழற்றிவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் நாளைய போட்டியிலாவது விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் ஆடாவிட்டால் டாம் லாதம் கேப்டன் பொறுப்பில் நீடிப்பார்.
முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 2 போட்டியிலும் வெற்றிக்கு அவரே காரணமாக திகழ்ந்தார். ஒரு சதம். ஒரு அரை சதத்துடன் 182 ரன் குவித்து இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.
இதேப்போல நிக்கோலஸ், குப்தில், டாம்லாதம் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக இருக்கிறார்கள். பந்து வீச்சில் சவுத்தி, பென்னட், ஜேமிசன் ஆகியோர் முத்திரை பதிக்கக்கூடியவர்கள்.
இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 109 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டை ஆனது.
இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.