search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோபி டிவைன்
    X
    சோபி டிவைன்

    டி20-யில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ரன்னுக்கு மேல்: நியூசிலாந்து வீராங்கனை சாதனை

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 65 பந்தில் 105 ரன்கள் விளாசிய நியூசிலாந்து அணி கேப்டன் சோபி டிவைன் உலக சாதனைப் படைத்துள்ளார்.
    நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 4-வது போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டனும், தொடக்க வீராங்கனையுமான சோபி டிவைன் 65 பந்தில் 105 ரன்கள் விளாசினார்.

    இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 102 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

    இந்த போட்டியில் சதம் அடித்த சோபி டிவைன், டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய வீராங்கனை மிதலி ராஜ், நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் நான்கு முறை தொடர்ச்சியாக ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். அதை தற்போது சோபி டிவைன் முறியடித்துள்ளார்.
    Next Story
    ×