என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி பெலாரஸ் வீரர் இகோர் ஜெராசிமோவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
    புனே:

    3-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7-6 (7-2), 5-7, 6-3 என்ற செட் கணக்கில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். 26 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவரது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.

    தரவரிசையில் 107-வது இடம் வகிக்கும் 26 வயதான வெஸ்லிக்கு இது 2-வது சர்வதேச பட்டமாகும். அவருக்கு ரூ.65 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
    இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக முன்னேறிய வங்காளதேசம், இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.
    13-வது ஜூனியர்  (19 வயதுக்கு உட்பட்டோர்)  உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது.  இதில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 47.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து சுருண்டது. தொடக்க பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 121 பந்தில் 88 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணியின் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டும், ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் சாகிப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. பர்வேஸ் ஹொசைன் எமோன், தன்சித் ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் வங்காளதேசம் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    அந்த அணி 8.5 ஓவரில் 50 ரன்கள் எடுத்திருக்கும்போது தன்சித் ஹசன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹசன் ஜாய் (8), தவ்ஹித் ஹிரிடோய் (0), ஷகாதத் ஹொசைன் (1) ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வீழ்த்தினார். 85 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. அத்துடன் சிறப்பாக விளையாடிய எமோன் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

    இதனால் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. அந்த நிலையில்தான் வங்காளதேசம் அணியின் கேப்டன் அக்பர் அலி இறங்கினார். அவர் நிலைத்து நின்று விளையாடினார். வங்காளதேசம் 102 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு மீண்டும் அக்பர் அலியுடன் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறிய எமோன் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. அந்த வேளையில் எமோன் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது வங்காளதேசம் 143 ரன்கள் எடுத்திருந்தது.

    7-வது விக்கெட்டுக்கு அக்பர் அலி- எமோன் ஜோடி 41 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணிக்கு இது முக்கியமாக அமைந்தது. அத்துடன் போட்டி மீண்டும் வங்காளதேசம் கைக்கு மாறியது.

    8-வது விக்கெட்டுக்கு அக்பர் அலியுடன் ரகிபுல் ஹசன் ஜோடி சேர்ந்தார். ரபிபுல் ஹசனை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு அக்பர் அலி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    வங்காளதேசம் அணிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கீட்டது. அப்போது வங்காளதேசம் 41 ஓவரில் 163 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது வங்காளதேசம் அணிக்கு  வெற்றிக்கு 46 ஓவரில் 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் மீண்டும் விளையாடியது.

    ஆட்டம் தொடங்கியதும் 7 பந்தில் 7 ரன்கள் எடுத்து வங்காளதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அக்பர் அலி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.
    ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தென்ஆப்பிரிக்காவும், வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்தும் களம் இறங்கின.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்காவின் டி காக், ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரீசா ஹென்றிக்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெம்பா பவுமா 29 ரன்னிலும், வான் டெர் துஸ்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆனால் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய டி காக் 69 ரன்னில் வெளியேறினார். டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 53 பந்தில் 69 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 6.2 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தது.

    மறுமுனையில விளையாடிய ஜேசன் ராய் 21 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடிப்பார் என்று எதிபார்த்த ஜோ ரூட் 52 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அரைசதம் ஜோ டென்லி  66 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் பான்டன் 32 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். மொயீன் அலி நிலைத்து நின்று விளையாட இங்கிலாந்து 43.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1-1 என சமன் செய்தது. மொயீன் அலீ 16 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம் முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணிகளுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

    அதன்படி முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக்கில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 132 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை பெத் மூனே 50 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. சீரான இடைவெளியில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா வெற்றியால் மூன்று அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தன. ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதல் இடமும், இந்தியா 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    12-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.
    பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காளதேசம் 233 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் 445 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இன்றைய 3-வது நாளில் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    41-வது ஓவரை நசீம் ஷா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 38 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்த பந்தில் தைஜுல் இஸ்லாமையும் எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். கடைசி பந்தில் மெஹ்முதுல்லாவை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 16 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஹாட்ரிக் உடன் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வங்காளதேசம் இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
    நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த ஷுப்மான் கில், 2-வது டெஸ்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    நியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள்  கொண்ட 2-வது டெஸ்ட் லிங்கோனில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து ‘ஏ’ டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்திருந்தது. க்ளெவர் 46 ரன்களுடனும், மிட்செல் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்றைய 2-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. க்ளெவர் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் மிட்செல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து ‘ஏ’ 9 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மிட்செல் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சிராஜ், சந்தீப் வாரியர், அஸ்வின், ஆவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 111 ரன்னாக இருக்கும்போது விஹாரி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஷுப்மான் கில் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷுப்மான் கில் 148 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் புஜாரா 88 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இந்தியா ஏ 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்துள்ளது. ஷுப்மான் கில் 107 ரன்னுடனும், விஹாரி 59 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    ஷுப்மான் கில் முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்திருந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் இறங்க வாய்ப்புள்ளது.
    U19 உலக கோப்பை இறுதி போட்டியில் வங்காளதேச அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 177 ரன்னில் சுருண்டது.
    13-வது ஜூனியர்  (19 வயதுக்கு உட்பட்டோர்)  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெற்று வருகிறது.  இதில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வங்காளதேச அணியின் தொடக்க பந்து வீச்சாளர்களான ஷொரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப் ஆகியோர் துல்லியமாக ‘குட் லெந்த்’ பகுதியில் சீராக பந்தை பிட்ச் செய்தனர்.

    ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் ரன்கள் குவிக்க திணறினர். இந்தியாவின் ஸ்கோர் மிகவும் மந்தமான நிலையில் உயர்ந்தது. முதல் ஐந்து ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 7-வது ஓவரை அவிஷேக் தாஸ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சக்சேனா ஆட்டமிழந்தார். அவர் 17 பந்திலவ் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது. 15 ஓவரில் 44 ரன்கள் எடுத்தது. இந்தியா 16.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

    ஓவர் செல்லசெல்ல ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 25 ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 250 ரன்கள் எட்டும் நிலை இருந்தது.

    ஜெய்ஸ்வால் 89 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 29 ஓவரில் 103 ரன்னாக இருக்கும்போது திலக் வர்மா ஆட்டம் இழந்தார். அவர் 65 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் பிரிமர் கார்க் 7 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.  இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் த்ருவ் ஜுரேல் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். 40-வது ஓவரை ஷொரிபுல் இஸ்லாம் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெய்ஸ்வால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 121 பந்தில் 88 ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்தில் வீர் ரன்ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

    அத்துடன் இந்தியாவின் ஸ்கோர் சீர்குலைய ஆரம்பித்தது. ஜுரேல் 22 ரன்னில் ரன்அவுட் ஆனார். ஆன்கோலெகர் 3 ரன்னிலும், பிஷ்னோய் 2 ரன்னிலும் வெளியெறினர். இதனால் இந்தியா 200 ரன்னை எட்டுவதே சந்தேகமாக இருந்தது.

    கடைசி விக்கெட்டாக மிஷ்ரா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இந்தியா 47.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. வங்காளதேச அணியின் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டும், ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் சாகிப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    புஷ்பையர் கிரிக்கெட் பாஷ் காட்சி போட்டியில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி கில்கிறிஸ்ட் லெவன் அணியை ஒரு ரன்னில் வீழ்த்தியது.
    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமான இழப்பு ஏற்பட்டது. அதற்கு நிவாரணம் திரட்ட காட்சி கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டன. இதற்கு புஷ்பையர் கிரிக்கெட் பாஷ் என பெயரிடப்பட்டது. இதற்கு பாண்டிங் லெவன் - கில்கிறிஸ்ட் லெவன் அணிகள் தயாராகின.

    இந்த போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் லெவன் அணி பநது வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாண்டிங் லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜஸ்டின் லாங்கர், மேத்யூ ஹெஸ்டன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    லாங்கர் 6 ரன்னிலும், ஹெய்டன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரிக்கி பாண்டிங் 14 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார். லாரா 11 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். இறுதியில் ஹோட்ஜ் 4 பந்தில் 11 ரன்கள் அடிக்க 10 ஓவரில் ரிக்கி பாண்டிங் லெவன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் கில்கிறிஸ்ட் லெவன் அணி 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. கில்கிறிஸ்ட் 11 பந்தில் 17 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷேன் வாட்சன் 9 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஹோட்ஜ் (0), யுவராஜ் சிங் (20, விலானி (6) சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆண்ட்ரூ சிம்மன்ஸ் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். கில்கிறிஸ்ட் அணிக்கு ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 15 ரன்களே எடுத்தது. இதனால் ரிக்கி பாண்டிங் லெவன் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில்கிறிஸ்ட் லெவன் அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது.
    பெட் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் லாத்வியா வீராங்கனைக்கு எதிராக தோல்வியை சந்தித்தார்.
    பேட் கோப்பை டென்னிஸில் அமெரிக்கா - லாத்வியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் அமெரிக்கா சார்பில் செரீனா வில்லியம்ஸ் - லாத்வியா சார்பில் செவாஸ்டோவா ஆகியோர் விளையாடினர்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 6(5)-7(7), 6-3, 6(4)-7(7) என தோல்வியடைந்தார். பெட் கோப்பை டென்னிஸில் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் இதற்கு முன் தோல்வியடைந்ததே கிடையாது. தற்போது முதல் தோல்வியை சந்தித்துள்ளார்.
    பாபர் அசாம், ஷான் மசூத் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க வங்காளதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.
    பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேசம் அணி 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் சிறப்பான தொடக்கம் அளித்தார். அவருக்கு பாபர் அசாம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். ஷான் மசூத் 100 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நேற்றைய 2-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 143 ரன்னுடனும், ஆசாத் ஷபிக் 60 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் ஆசம் நேற்றைய 143 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் மேலும் ஐந்து ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அதன்பின் வந்த ஹாரிஸ் சோஹைல் 75 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 122.5 ஓவரில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்காளம்தேசம் அணி சார்பில் அபு ஜெயத், ருபெல் ஹொசைன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையை கணக்கில் கொண்டு இங்கிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டி20 அணியில் டேல் ஸ்டெயின் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடர் முடிந்த உடன் டி20 தொடர் நடக்கிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டு பிளிசிஸ், ரபாடா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    அனுபவ வீரரான டேல் ஸ்டெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மீண்டும் டி20 போட்டிக்கு திரும்புவேன் எனத் தெரிவித்துள்ள ஏபி டி வில்லியர்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் நேரடியாக டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறலாம்.

    ஸ்டெயின் உலக கோப்பை தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் தென்ஆப்பிரிக்கா அணி சமீப காலமாக திணறி வருகிறது. இதனால் ஸ்டெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1.  டி காக்  (கேப்டன்), 2. ரீசா ஹென்றிக்ஸ், 3. டெம்பா பவுமா, 4. வான் டெர் துஸ்சன், 5. டேவிட் மில்லர், 6. பைட் வான் பில்ஜோன், 7. வெய்ன் பிரிட்டோரியஸ், 8. பெலுக்வாயோ, 9. ஜோன்-ஜோ ஸ்மட்ஸ், 10. பியூரன் ஹென்றிக்ஸ், 11. தப்ரைஸ் ஷம்சி, 12. லுங்கி நிகிடி, 13. சிசாண்டா மகாலா, 14. ஜோர்ன் போர்ச்சுன், 15. டேல் ஸ்டெயின், 16. ஹென்ரிச் கிளாசன்.
    ராவல்பிண்டியில் நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷான் மசூத், பாபர் அசாம் சதமடித்து அசத்த, இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்துள்ளது.
    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வங்காளதேசம் அணி 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ், ஹாரிஸ் சோஹைல் ஆகியோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் சிறப்பான தொடக்கம் அளித்தார்.
    அவருக்கு பாபர் அசாம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். ஷான் மசூத் 100 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் 143 ரன்னுடனும், ஆசாத் ஷபிக் 60 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  
    ×