என் மலர்
விளையாட்டு
இந்தத் தொடர் முடிந்த உடன் டி20 தொடர் நடக்கிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டு பிளிசிஸ், ரபாடா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அனுபவ வீரரான டேல் ஸ்டெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மீண்டும் டி20 போட்டிக்கு திரும்புவேன் எனத் தெரிவித்துள்ள ஏபி டி வில்லியர்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் நேரடியாக டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறலாம்.
ஸ்டெயின் உலக கோப்பை தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் தென்ஆப்பிரிக்கா அணி சமீப காலமாக திணறி வருகிறது. இதனால் ஸ்டெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டி காக் (கேப்டன்), 2. ரீசா ஹென்றிக்ஸ், 3. டெம்பா பவுமா, 4. வான் டெர் துஸ்சன், 5. டேவிட் மில்லர், 6. பைட் வான் பில்ஜோன், 7. வெய்ன் பிரிட்டோரியஸ், 8. பெலுக்வாயோ, 9. ஜோன்-ஜோ ஸ்மட்ஸ், 10. பியூரன் ஹென்றிக்ஸ், 11. தப்ரைஸ் ஷம்சி, 12. லுங்கி நிகிடி, 13. சிசாண்டா மகாலா, 14. ஜோர்ன் போர்ச்சுன், 15. டேல் ஸ்டெயின், 16. ஹென்ரிச் கிளாசன்.
ஆக்லாந்து:
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியஅணி தோற்று தொடரை இழந்தது.
ஆக்லாந்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்தது.
குப்தில் 79 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), முன்னாள் கேப்டன் டெய்லர் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 274 ரன் இலக்குடன் இந்திய அணி பின்னர் களம் இறங்கியது.
நியூசிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 22 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
ஜடேஜா அதிகபட்சமாக 55 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்னும் (7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். பென்னட், சவுத்தி, ஜேமிசன், கிராண்ட்கோம் தலா 2 விக்கெட்டும், நீசம் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்திய அணி ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் 347 ரன்குவித்து தோற்றது. தற்போது 274 ரன் இலக்கை எடுக்க முடியாமல் மீண்டும் பரிதாப நிலை அடைந்தது. இந்த தோல்வி மூலம் தொடரை இழந்தது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த ஆண்டில் 20 ஓவர் போட்டிகள் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால், ஒரு நாள் ஆட்டங்கள் சரியாக அமையவில்லை. முதல் 2 ஆட்டமும் சிறப்பாகவே இருந்தது. ஜடேஜா, சைனி கடைசிவரை போராடினார்கள். சைனி சிறப்பாக பேட்டிங்கை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு கூடுதலாக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் டாம் லாதம் கூறியதாவது:-
இது ஒரு சிறந்த வெற்றியாகும். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். கடந்த ஆட்டத்தை விட இந்த போட்டியில் எங்களது திறமையில் முன்னேற்றம் காணப்பட்டது.
3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஓயிட் வாஷ் செய்ய விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
20 ஓவர் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் வருகிற 11-ந் தேதி மவுண்ட் மவுக்கானுவில் நடக்கிறது.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில், சஹால் 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் (52) மற்றும் ஜடேஜா (54) அரை சதம் பூர்த்தி செய்தனர். பிரித்வி ஷா (24), மயங்க் அகர்வால் (3), கேப்டன் கோலி (15), கே.எல். ராகுல் (4), கேதர் ஜாதவ் (9), ஷர்துல் தாகூர் (18), சைனி (45) மற்றும் சாஹல் (10) ரன்களில் வெளியேறினர்.
எனினும் 48.3வது ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களே எடுத்தது. பும்ரா ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் நியூசிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2-0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் மெதுவான பந்துவீச்சு விகிதத்திற்கு நியூசிலாந்து அணிக்கு 60% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஐ.சி.சி.யின் விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் பிரிவு 2.22ன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும்.
இதன்படி மேற்கொண்ட நேர அனுமதி பரிசீலனையில், அந்த அணி 3 ஓவர்கள் வரை, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலான பந்துவீச்சு விகிதம் கொண்டிருந்தது. இதனை லாத்தம் ஒப்பு கொண்ட நிலையில் முறைப்படியான விசாரணை நடைபெற அவசியம் இல்லாமல் போனது. இதற்கு முன் இந்திய அணி இதுபோன்று 3 முறை அபராத விதிப்பிற்கு உள்ளானது.








