என் மலர்
விளையாட்டு
ஆக்லாந்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அத்துடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
ஆக்லாந்து:
இந்தியா நியூசிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்து அணியை பேட் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர்.
நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் கப்தில் அதிரடி காட்டினார். அவர் 8 போர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் நிக்கோல்ஸ்சும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ராஸ் டெய்லரை தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை.
ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 250 ரன்களை தாண்டுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஸ் டெய்லரின் அதிரடியால் நியூசிலாந்து அணி 50 ஒவர்களில் 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகள், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் அகர்வால் ஆகியோர் சொற்ப ரன்களில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 15 ரன்களில் நடையை கட்டினார். டி20 போட்டிகளில் ஜொலித்த கே.எல் ராகுல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார். கேதார் ஜாதவும் சோப்பிக்கவில்லை.
ஆனால் அதன் பின்னர் வந்த பவுலர்களான சர்தூல் தாகூர், நவ்தீப் சைனி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சைனி 45 ரன்கள் விளாசினர். மறுமுனையில் ஜடேஜா வெற்றிக்கு போராடினார்.
ஆனால் நியூசிலாந்து அணியினரின் நேர்த்தியான பந்துவீச்சினால் விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தீ, காலின் டி கிராண்ட்ரோம், பென்னெட், ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 55 ரன்களும், ஷ்ரேயஸ் அய்யர் 52 ரன்களும் எடுத்தனர்.
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நியூசிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை தன்வசமாக்கியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.
ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 274 ரன்களை இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆக்லாந்து:
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் கப்தில் அதிரடி காட்டினார். அவர் 8 போர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் நிக்கோல்ஸ்சும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ராஸ் டெய்லரை தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழுந்தன.

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 250 ரன்களை தாண்டுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெய்லரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ராஸ் டெய்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகள், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி களமிறங்க உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லபுஸ்சேன் என்னை போன்று விளையாடுகிறார். அவரிடம் சிறப்பான திறமை இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்ட 10 ஓவர் கண்காட்சி கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் மோதுகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக இருக்கிறார்.
இதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள தெண்டுல்கரிடம் நீங்கள் விளையாடியபோது உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் ஆடியதை போல் தற்போது விளையாடும் வீரர் யார் என்று நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தெண்டுல்கர் பதில் அளித்து கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஆஷஸ் போட்டி தொடரில் லார்ட்சில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியை நான் டெலிவிஷனில் பார்த்தேன். பவுன்சர் பந்து தாக்கியதில் ஸ்டீவன் சுமித் காயம் அடைந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் கண்ட மார்னஸ் லபுஸ்சேன் 2-வது இன்னிங்சில் ஆடியதை பார்த்தேன். எனது மாமனாருடன் அமர்ந்து அந்த போட்டியை கண்டு களித்தேன்.
ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது பந்து லபுஸ்சேனை தாக்கியது. ஆனால் அதன் பிறகு அடுத்த 15 நிமிடங்கள் அவர் ஆடிய விதத்தை பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. அப்போதே, ‘அந்த வீரரிடம் வித்தியாசமான திறமை இருக்கிறது, சிறந்த வீரராக உருவெடுப்பார்’ என்று கூறினேன். அவரது கால் நகர்த்தல் துல்லியமாக உள்ளது. கால் நகர்வு என்பது வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல. அது மனரீதியானது. நீங்கள் மனதளவில் நேர்மறையான எண்ணத்துடன் இல்லையென்றால் கால் நகர்த்தல் சரியாக வராது. மனதளவில் வலுவாக இல்லை என்றால் கால் நினைத்தபடி நகராது. அவரது கால் நகர்த்தல் நம்ப முடியாத வகையில் உள்ளது. அவரது பேட்டிங் எனது ஆட்டத்தை நினைவூட்டுகிறது.
இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘விராட்கோலி, ஸ்டீவன் சுமித்தை ஒப்பிடுகையில் யாருடைய ஆட்டம் சிறந்தது என்று கேட்கிறீர்கள்?. ஒப்பிட்டு பார்ப்பதை நான் விரும்பமாட்டேன். என்னை பல வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சித்தார்கள். என்னை ஒப்பிடுவதை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்து விட்டேன். நாம் ஒப்பீடுகளுக்குள் செல்ல வேண்டாம். அவர்கள் இருவரின் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் பார்ப்போம். அவர்கள் இருவரும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள். அவர்கள் ஆடுவதை பார்ப்பது நமக்கு மகிழ்ச்சியே’ என்றார்.
25 வயதான லபுஸ்சேன் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் (1,104 ரன்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆக்லாந்து:
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதற்கான இந்திய அணி விபரம்:-
மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், சாப்மன், டாம் லாதம் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், கைல் ஜாமிசன், ஹாமிஷ் பென்னட், டிம் சவுதி.

கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா, கவுகாத்தி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
கவுகாத்தி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலடிக் மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கவுகாத்தி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். ஆனாலும், எந்த அணியாலும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், கவுகாத்தி, கேரளா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜாப்ரா ஆர்சர் விளையாடுவார் என்று ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது ஆர்சரின் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. வலி அதிகமாக இருக்க 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. தொடர்ந்து வலி இருந்ததால் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. மேலும் டி20 தொடரில் இருந்து விலகி சொந்த நாடு திரும்பினார்.
அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது முழங்கையில் முறிவு மிகப்பெரிய அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இலங்கை தொடர், ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.
மேலும், அணி டாக்டர்களுடன் இணைந்து காயம் குணமடைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகுவதற்கான பணியில் ஈடுபடுவார். ஜூன் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகுவார் என்று தெரிவித்திருந்தது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்துள்ளது. அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்று கருதப்பட்டது.
இந்நிலையில் ஜாப்ரா ஆர்சருக்கான மாற்று வீரரை உடனடியாக தேடவேண்டியதில்லை. அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்டொனால்டு கூறுகையில் ‘‘ஜாப்ரா ஆர்சர் ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்பதற்கான சரியான காரணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால், அவர் குணமடையலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவரது காயம் குறித்த முழு விவரத்தையும் பெறுவோம். அதன்பின் முடிவு செய்வோம்.
அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். தற்போது காயம் குறித்த செய்தி மோசமானதாக இருக்கலாம். ஆனால், தற்போதைய நேரம் வரை அவரை மாற்றுவதற்கான எந்த துரித நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம்’’ என்றார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டம் டிரா ஆனதால், மும்பை நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக்-அவுட் சுற்று வாய்ப்புக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் மும்பை அணி களம் இறங்கியது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சர்பராஸ் கான் (78), முலானி (78) அரைசதம் அடித்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் மும்பை அணி முதல் இன்னிங்சில் 262 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா ஜாக்சன் (85), ஜானி (84 அவுட் இல்லை) ஆகியோரின் அரைசதங்களால் 335 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் 73 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. சூர்யகுமார் யாதவ், முலானி (92 ஆகியோரின் அதிரடியால் 67 ஓவர்களில் 362 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது மும்பை.
இதனால் சவுராஷ்டிரா அணிக்கு கடைசி நாளில் 290 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சீரான இடைவெளியில் சவுராஷ்டிரா விக்கெட்டுகளை இழந்து வந்தது. அந்த அணி 34 ஓவரில் 83 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் மும்பை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மக்வானா, ஜடேஜா ஆகியோர் மும்பையின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட்டுக்களை காப்பாற்றினர். இந்த ஜோடியை பிரிக்க மும்பை பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. சவுராஷ்டிரா 74 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருக்கும்போது கடைசி நாள் ஆட்டம் நிறைவுற்று போட்டி டிராவில் முடிந்தது.
மக்வானா 116 பந்தில் 31 ரன்களும், ஜடேஜா 125 பந்தில் 33 ரன்களும் சேர்த்து மும்பையின் வெற்றியை தடுத்ததோடு, நாக்-அவுட் சுற்றுக்கான கனவையும் தகர்த்தனர்.
எலைட் பிரிவில் மும்பை 7 போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, நான்கு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று 14-வது இடத்தை பிடித்துள்ளது.

ராவல்பிண்டியில் இன்று தொடங்கிய பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 233 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணியின் தமிம் இக்பால், சாய்ஃப் ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாய்ஃப் ஹசன் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். தமிம் இக்பால் 3 ரன்னில் வெளியேறினார்.
3 ரன்கள் எடுப்பதற்குள் வங்காளதேசம் தொடக்க பேட்ஸ்மேன்களை இழந்து திண்டாடியது. அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹொசைன் ஷான்டோ உடன் கேப்டன் மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
என்றாலும் மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முகமது மிதுன் 140 பந்துகளை சந்தித்து 63 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
பகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ் மற்றும் ஹாரிஸ் சோஹைல் ஆகியோ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து விமர்சனத்திற்குள்ளான ஷிவம் டுபேவுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷிவம் டுபே இடம் பிடித்துள்ளார். இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் இடம் பிடித்து விளையாடினார்.
ஐந்தாவது போட்டியில் ஷிவம் டுபே ஓரே ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக ஷிவம் டுபேவுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘ஷிவம் டுபேவுக்கு சிறப்பான திறமை இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் அவருக்கு நாம் இன்னும் கூடுதலாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். முதுகில் ஆபரேசன் செய்தபின், வேகமாக பந்து வீசுவது கடினமானது. ஆகையால், ஹர்திக் பாண்டியா மீண்டும் பழைய நிலைக்கு எந்த வகையில் திரும்புவார் என்று எனக்குத் தெரியாது.
ஷிபம் டுபேயை பொறுத்த வகையில் நாம் அவரக்கு கூடுதலாக நேரம் கொடுத்தால், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்கால வீரராக அவரை நாம் பார்க்கலாம்’’என்றார்.

ஸ்பெயினில் நடைபெற்று வரும் கோபா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்தன.
ஸ்பெயின் நாட்டில் முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் லா லிகா. இதில் விளையாடும் முன்னணி அணிகளும், அதேபோல் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை லீக்கில் சிறப்பாக விளையாடும் அணிகளையும் சேர்த்து ஆண்டுதோறும் கோபா டெல் ரே என்ற நாக்-அவுட் முறையிலான கோபா டெல் ரே தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - அத்லெடிக் பில்போ அணிகள் மோதின. 90-வது நிமிடம் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் இன்ஜூரிக்கான நேரத்தில் (93-வது நிமிடம்) அத்லெடிக் பில்போ அணிக்கு ஓன் கோல் மூலம் கோல் கிடைத்தது. இதனால் 1-0 என பார்சிலோனாவை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் தோற்கடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - ரிய் சோசிடாட் அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்கு அச்சுறுத்தும் வகையில் விளையாடிய ரியல் சோசிடாட் அணி 22, 54 மற்றும் 56-வது நிமிடங்களில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது.

81-வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 93-வது நிமிடத்தில் நசோ ஒரு கோலும் அடித்தனர். என்றாலும் ரியல் மாட்ரிட் அணி 3-4 எனத் தோல்வியை சந்தித்தது.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி இரண்டு அணிகள் காலிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதனால் 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 59-வது நிமிடத்தில் மார்சிலோ ஒரு கோல் அடித்தார். இருந்தாலும் 69-வது நிமிடத்தில் ரியல் சோசிடாட் 69-வது கோல் அடித்து 4-1 என முன்னிலைப் பெற்றது.

81-வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 93-வது நிமிடத்தில் நசோ ஒரு கோலும் அடித்தனர். என்றாலும் ரியல் மாட்ரிட் அணி 3-4 எனத் தோல்வியை சந்தித்தது.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி இரண்டு அணிகள் காலிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
முதல் போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சை விளாசியதுதான் வெற்றிக்கு காரணம், நாளையும் அந்த யுக்தி தொடரும் என மார்ட்டின் கப்தில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து வெற்றிக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லாதம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 49-வது ஓவரிலேயே சேஸிங் செய்து சாதனைப் படைத்தது.
‘ஸ்வீப் ஷாட்ஸ்’ மூலம் இந்திய சுழற்பந்து வீச்சை விளாசினார்கள். குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா 148 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். நியூசிலாந்தின் வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணமாக என்று கூறிய மார்ட்டின் கப்தில், நாளைய போட்டியிலும் இந்திய சுழற்பந்து வீச்சை விளாசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்ட்டின் கப்தில் கூறுகையில் ‘‘ஹாமில்டனில் நாங்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட விதம், எங்களது சிறப்பானதில் ஒன்று என நினைக்கிறேன். இந்த நம்பிக்கையுடன் இந்த தொடரில் நாங்கள் முன்னோக்கி செல்ல முடியும்.
இந்திய அணியை எளிதாக வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மேட்ச் வின்னர் வீரர்களை பெற்றுள்ளனர். ஆகவே, இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்ல வேண்டும் என்றால் நாளைக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நாளைய ஆட்டத்தில் எங்களுடைய சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

ஆறு அடி எட்டு அங்குலம் உயரம் கொண்ட நியூசிலாந்தின் மிகவும் உயரமான வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் இந்தியாவுக்கு எதிராக நாளைய போட்டியில் அறிமுகம் ஆகிறார்.
- இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசினார்.
- ஆறு அடி எட்டு அங்குலம் உயரம் கொண்ட ஜேமிசனுக்கு ஆஸி. தொடரில் இடம் கிடைக்கவில்லை.
- இஷ் சோதி நியூசிலாந்து ‘ஏ’ அணிக்காக விடுவிக்கப்பட்டுள்ளதால் வாய்ப்பு.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன். இவர் ஆறு அடி எட்டு அங்குலம் (2.03) உயரம் கொண்டவர். கிரிக்கெட்டில் விளையாடுவதில் இவர்தான் உயரமான நபர். இதனால் இவரை ‘டவர்’ பந்து வீச்சாளர் என்று அழைக்கின்றனர்.
வேகப்பந்து வீச்சாளரான இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் (0-60, 2-69, 4-49) சிறப்பாக பந்து வீசினார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் கிடைத்தது.
ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இவர் களம் இறங்கவில்லை. நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த இஷ் சோதி இன்று தொடங்கிய நியூசிலாந்து ‘ஏ’- இந்தியா ‘ஏ’ இடையிலான டெஸ்ட் போட்டியில் விளையாட விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் நாளை ஆக்லாந்தில் நடைபெறும் போட்டியில் அறிமுகம் ஆவார் என்று நியூசிலாந்து பயிற்சிளார் ஷேன் ஜர்கென்சன் தெரிவித்துள்ளார்.