என் மலர்
விளையாட்டு
நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக நியூசிலாந்து ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் சேர்த்துள்ளது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ பேட்டிங் தேர்வு.
- இந்தியா ஏ அணியில் புஜாரா, அஸ்வின், ரகானே.
- நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் அரைசதம். சிராஜ் மற்றும் அவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்
இந்தியா ‘ஏ’ - நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் லிங்கோனில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு பயிற்சியாக இருக்கும் வகையில் ரகானே, அஸ்வின், புஜாரா ஆகியோர் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து ‘ஏ’ அணியின் கேப்டன் ரூதர்போர்டு, யங் ஆகியோர் தொடக்க வீரர்களாக கம் இறங்கினர். யங் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிந்த்ரா 12 ரன்னில் வெளியேறினார். ரூதர்போர்டு 40 ரன்னில் ஆட்டமிழந்தார். பிலிப்ஸ் 65 ரன்கள் விளாசினார். செய்பெர்ட் 30 ரன்கள் சேர்த்தார்.
6-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விக்கெட் கீப்பர் கிளவர், மிட்செல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிளவர் 46 ரன்களும், மிட்செல் 36 ரன்களும் சேர்த்து முதல்நாள் ஆட்டம் முடியும் வர ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து ‘ஏ’ ஐந்து விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி சார்பில் முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். வர்மா 8 ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த ரோட்ரிக்ஸ் 23 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்களும் எடுத்து வெளியேறினர். மந்தனா 45 ரன்கள் சேர்த்தார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களே அடிக்க இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. பின்னர் 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பெண்கள் அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீராங்கனைகைள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் 4-வது வீராங்கனையாக களம் இறங்கிய நட்டாலி ருத் சீவர் 38 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கேப்டன் நைட் 18 ரன்களும், வில்சன் ஆட்டமிழக்காமல் 20 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனை கெய்க்வார்டு 3 விக்கெட் வீழ்த்தியும் பயனில்லை.
இந்தத் தொடரில் ஏற்கனவே இந்தியா முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்தியா மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவும் 2 புள்ளிகள் பெற்றுள்ளது.
நாளைய போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருாநள் போட்டியில் 78 ரன்கள் குவித்த ஹென்றி நிக்கோல்ஸ், ஒயிட்வாஷ் ஆனது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 0-5 என இழந்தது.
- ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 348 இலக்கை எட்டி வெற்றி
- தொடக்க வீரர் நிக்கோல்ஸ் 78 ரன்கள் அடித்தார். டெய்லர் 109 ரன்னும், டாம் லாதம் 69 ரன்னும் சேர்த்தனர்.
இது குறித்து நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் 28 வயதான ஹென்றி நிகோல்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 0-5 என்ற கணக்கில் முழுமையாக இழந்தோம். ஆனால் அதன் தாக்கம் ஒரு நாள் போட்டி அணியில் இல்லை. ஒரு நாள் போட்டிக்காக நாங்கள் அணியாக இங்கு கைகோர்த்த போது, முந்தைய தோல்வி குறித்து சிந்தித்து வருத்தப்படவில்லை. எனவே எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. சிறிய மைதானம், பெரிய இலக்கு, அதை எட்ட முடிந்தது இனிமையான அனுபவமாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் நாங்கள் விரட்டிப்பிடித்த மிகப்பெரிய ஸ்கோர் இது தான். இதில் எனது பங்களிப்பும் இருந்தது மகிழ்ச்சியே.
கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் 4-வது வரிசையில் ராஸ் டெய்லரின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது. தனது அனுபவத்தின் மூலம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் குவிப்பு மட்டுமல்ல, அவருடன் இணைந்து ஆடும் போது வழங்கும் ஆலோசனையும் பேட்டிங்குக்கு உதவுகிறது. அத்துடன் மைதானத்தின் அளவும் (ஒரு பக்கம் பவுண்டரி தூரம் குறைவு) எங்களுக்கு சாதகமாக இருந்தது.
டாம் லாதம் சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடினார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அவருக்கும் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கினார். கேப்டனாக அவர் அணியை முன்னெடுத்து அமைத்து தந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. சிறிய மைதானமான இங்கு 360 அல்லது 370 ரன்கள் வரை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில், எங்களது பவுலர்கள் இந்திய பேட்மேன்களை கட்டுப்படுத்தியதை பாராட்டியாக வேண்டும். இவ்வாறு நிகோல்ஸ் கூறினார்.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் நாளை (இந்திய நேரப்படி காலை 7.30 மணி) நடக் கிறது.
வதோதராவில் நடைபெற்ற போட்டியில் எம். முகமது சிறப்பாக பந்து வீச, அபினவ் முகுந்த் இரட்டை சதம் அடிக்க தமிழ்நாடு பரோடாவை இன்னிங்ஸ் மற்றும் 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- முதல் இன்னிங்சில் பரோடா 174 ரன்னில் சுருண்டது. எம். முகமது ஏழு விக்கெட்.
- முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 490/7 டிக்ளேர். அபினவ் முகுந்த் இரட்டை சதம்.
- 2-வது இன்னிங்சில் பரோடா 259 ரன்னில் ஆல்அவுட்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் வதோதராவில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதின. பரோடா அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது. எம். முகமது ஏழு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபினவ் முகுந்த் இரட்டை சதம் (206 ரன்கள்) அடித்தார். பின்னர் 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பரோடா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பரோடா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. பரோடா அணி 2-வது இன்னிங்சில் 63.3 ஓவர்களில் 259 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
இதனால் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய குருணால் பாண்ட்யா 74 ரன்னும், அதித் ஷேத் 70 ரன்னும் எடுத்தனர்.
தமிழக அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கே. விக்னேஷ் 5 விக்கெட்டும் முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரட்டை சதம் அடித்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் தமிழக அணி 2 வெற்றி, 2 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
ஆக்லாந்தில் நாளை நடக்கும் 2-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை உயிரோட்டமாக வைக்கும் வகையில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி
- இந்தியா 347 ரன்கள் அடித்தது, நியூசிலாந்து சேஸிங் செய்தது
- ஷ்ரேயாஸ் அய்யர், ராஸ் டெய்லர் ஆகியோர் சதம் அடித்தனர்
இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 348 ரன் இலக்கை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்து நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் (103 ரன்), லோகேஷ் ராகுல் (88), விராட் கோலி (51) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கும் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் வரிசையில் கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளனர்.
பேட்டிங்கில் பலம் வாய்ந்து இருந்தாலும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 347 ரன் குவித்தும் தோல்வி அடைந்ததால் இந்தியா பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டும்.
ஷர்துல் தாகூர் 80 ரன்னும் (9 ஓவர்), குல்தீப் யாதவ் 84 ரன்னும் (10 ஓவர்) விட்டு கொடுத்து இருந்தனர். இதேபோல் முகமது ஷமி, ஜடேஜா பந்து வீச்சும் எடுபடவில்லை. இதனால் பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு உள்ளது.
நாளைய போட்டியில் தோற்றால் இந்தியா தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.
நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ராஸ் டெய்லர் நல்ல நிலையில் உள்ளார். அவர் முதல் ஆட்டத்தில் சதம் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். இதேபோல் ஹென்றி நிகோல்ஸ், டாம் லாதம் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த அணியும் பேட்டிங்கில் வலுவாக உள்ளது.
பந்து வீச்சில் டிம் சவுத்தி, பென்னட், சான்ட்னர், சோதி ஆகியோர் உள்ளனர். நாளை ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது. இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது போட்டியாகும். இதுவரை நடந்த 108 போட்டிகளில் இந்தியா 55 முறையும், நியூசிலாந்து 47 முறையும் வெற்றி பெற்றன. ஒரு போட்டி டை ஆனது. 5 ஆட்டங்களில் முடிவு இல்லை.
நான் டோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரது சாதனைகள் அளப்பரியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார்.
புதுடெல்லி:

ஒரு தேர்வாளர் என்ற முறையில் எங்களது கடமை என்னவெனில், டோனிக்கு அடுத்தபடியாக அடுத்த தலைமுறை வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கிட வேண்டும்’ என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘எங்களை பொறுத்தவரை நாங்கள் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, நீண்ட காலம் விளையாடும் வகையில் அதிக வாய்ப்பு வழங்குகிறோம். டோனியின் எதிர்காலம் குறித்து அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்வு குழு தலைவராக இருந்த வரை எனது பணியை தவிர்த்து பார்த்தால், நான் டோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரது சாதனைகள் அளப்பரியது. அவரது தலைமையில் இந்திய அணி இரண்டு உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது. டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. எனவே டோனியின் தலைமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அவர் தான் முடிவு மேற்கொள்ள வேண்டும்.

ஒரு தேர்வாளர் என்ற முறையில் எங்களது கடமை என்னவெனில், டோனிக்கு அடுத்தபடியாக அடுத்த தலைமுறை வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கிட வேண்டும்’ என்றார்.
மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை சிட்டி எப்.சி. அணி.
மும்பை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பையில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் அகோஸ்டா 7வது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களின் ஆட்டத்துக்கு ஜாம்ஷெட்பூர் அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
மும்பை அணியின் வீரர் அமைன் செர்மேட்டி 60-வது நிமிடத்திலும், பித்யனந்தா சிங் 92வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இறுதியில், மும்பை சிட்டி எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மும்பை சிட்டி அணி தான் ஆடிய 16 ஆட்டங்களில் 7 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி என 26 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்து வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி களமிறங்கியது.
வங்காளதேசம் அணியினரின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
நியூசிலாந்து அணியில் பெக்காம் வீலர் கிரினால் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 75 ரன்னில் அவுட்டானார். நிகோலஸ் லிட்ஸ்டோன் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தனர்.
வங்காளதேசம் அணி சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும், ஷமிம் உசேன், ஹசன் முராத் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் மகமுதுல் ஹசன் ஜோய் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 100 ரன்னில் அவுட்டானார். தவ்ஹித் ஹிரிதோய், ஷஹாதத் உசேன் ஆகியோர் தலா 40 ரன் எடுத்தனர்.
இறுதியில், வங்காளதேசம் அணி 44.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வங்காளதேசம் முதல் முறையாக நுழைந்துள்ளது. இறுதிப்போட்டியில் வலுவான இந்திய அணியை வங்காளதேசம் எதிர்கொள்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் போட்டியில் சதம் அடித்த ராஸ் டெய்லர் 14 வருட நாதன் ஆஸ்லேயின் சாதனையை முறியடித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாதன் ஆஸ்லே இந்தியாவிற்கு எதிராக 29 இன்னிங்சில் 1207 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடைசியாக நாதன் ஆஸ்லே விளையாடினார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் ராஸ் டெய்லர் (109) சதம் அடித்தார். அவர் 32 இன்னிங்சில் 1300 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெற்றுள்ளார்.

347 ரன்கள் எடுத்து தோல்வியடைந்த போதிலும், அடுத்த முறை வீறுகொண்டு எழுவோம் என்று ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யரின் சிறப்பான சதத்தால் இந்தியா 347 ரன்கள் குவித்தது. ஆனால் ராஸ் டெய்லர், டாம் லாதம் ஆகியோரின் அதிரடியால் நியூசிலாந்து ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 347 ரன்கள் எடுத்தும் இந்தியா தோற்றுவிட்டதே என வருத்தப்படுகிறார்கள்.
ஆனால் சதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர், இது ஜஸ்ட் ஒரு தோல்விதான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘சதம் அடித்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ஆனால், அணி வெற்றி பெற்றிருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
முதல் போட்டியில் தோல்வியடைந்தது மிகப்பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் ஜஸ்ட் அது ஒரு தோல்வி. எங்களுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைகளை முன்னதாக சந்தித்து இருக்கிறோம். ஒரு அணியாக எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அடுத்த போட்டியில் மிகப்பெரிய அளவில் வலுவாக திரும்புவோம். கடந்த காலங்களில் இதுபோன்று செய்திருக்கிறோம்.
இந்த போட்டியை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அதில் இருந்து முன்னோக்கி செல்ல வேண்டும். இந்திய ‘ஏ’ அணியில் விளையாடிய அனுபவம் கைக்கொடுத்தது. அங்கு நான் எப்போதும் 4-வது இடத்தில் களம் இறங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்க மாறுபட்ட இடத்தில் களம் இறங்கி விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.
மணிஷ் பாண்டே 4-வது இடத்தில் களம் இறங்குகிறார். நம்முடைய இடம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அவரை நாங்கள் இந்தியா ‘ஏ’ அணியின் லிஜெண்ட் என்று அழைப்போம். 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்குள் களம் இறங்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்வேன். இதனால் அங்கு எனக்கு சிறந்த பயிற்சி கிடைத்தது’’ என்றார்.

பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் மூன்று வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் அனுமதி பெற்று ஏராளமான டி20 லீக்குகள் உலகளவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ், பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரிமீயர் லீக் போன்றவை முக்கியமானது.
பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட கட்டுப்பாடு இருந்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தவிர மூன்று டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்துள்ளது.

ஜாப்ரா ஆர்சரின் முழங்கையில் முறிவு ஏற்பட்டுள்ளதால் இலங்கை தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது ஆர்சரின் வலது கை முழங்கையில் காயம் ஏற்பட்டது.
வலி அதிகமாக இருக்க 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. தொடர்ந்து வலி இருந்ததால் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. மேலும் டி20 தொடரில் இருந்து விலகி சொந்த நாடு திரும்பினார்.
இந்நிலையில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது முழங்கையில் முறிவு மிகப்பெரிய அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இலங்கை தொடர், ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
மேலும், அணி டாக்டர்களுடன் இணைந்து காயம் குணமடைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகுவதற்கான பணியில் ஈடுபடுவார். ஜூன் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகுவார் என்று தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்துள்ளது. அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.