என் மலர்
விளையாட்டு
ஜாப்ரா ஆர்சரின் முழங்கையில் முறிவு ஏற்பட்டுள்ளதால் இலங்கை தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது ஆர்சரின் வலது கை முழங்கையில் காயம் ஏற்பட்டது.
வலி அதிகமாக இருக்க 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. தொடர்ந்து வலி இருந்ததால் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. மேலும் டி20 தொடரில் இருந்து விலகி சொந்த நாடு திரும்பினார்.
இந்நிலையில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது முழங்கையில் முறிவு மிகப்பெரிய அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இலங்கை தொடர், ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
மேலும், அணி டாக்டர்களுடன் இணைந்து காயம் குணமடைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகுவதற்கான பணியில் ஈடுபடுவார். ஜூன் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகுவார் என்று தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்துள்ளது. அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

சிட்னி தண்டருக்கு எதிரான சேலஞ்சர் சுற்றில் லர்கின், ஸ்டோய்னிஸ் ஆகியோரின் அதிரடியால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சேலஞ்சர் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேடின்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மேடின்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஸ்டோய்னிஸ் உடன் லர்கின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிட்னி தண்டரின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. ஸ்டோய்னிஸ் 54 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லர்கின் ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் விளாச மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கவாஜா (23), அலெக்ஸ் ஹேல்ஸ் (8), பெர்குசன் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த ரோஸ் 38 பந்தில் 58 ரன்கள் சேர்த்தார். அர்ஜூன் நாயகன் 17 பந்தில் 30 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 16 பந்தில் 21 ரன்களும் சேர்த்த போதிலும் சிட்னி தண்டர் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களே சேர்க்க முடிந்தது. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாளைமறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரணம் திரட்டுவதற்கான ‘புஷ்பையர் கிரிக்கெட் பாஷ்’ காட்சி போட்டி மெல்போர்னுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக புஷ்பையர் காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தியது. குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிகஅளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதற்கு நிவாரணம் ஈட்டுவதற்காக புஷ்பையர் கிரிக்கெட் பாஷ் என்ற பெயரில் காட்சி போட்டியை நடத்த திட்டமிட்டனர்.
ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் இதில் விளையாடுகின்றன. இந்த போட்டி நாளைமறுநாள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி சிட்னியில் இருந்து 9-ந்தேதி மெல்போர்னுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிக் பாஷ் டி20 லீக்கின் இறுதிப் போட்டி சிட்னியில் 8-ந்தேதி நடக்கிறது. இதுவும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்த யூனிஸ்கான், 4 முதல் 6 கோடி வரை கிரிக்கெட் போர்டு தரவேண்டியுள்ளது என்று தெரிவித்தள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யூனிஸ்கான். இவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதம், 33 அரைசதங்களுடன் 10, 099 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சாதனைப் படைத்துள்ள இவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 4 முதல் 6 கோடி ரூபாய் தரவேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யூனிஸ்கான் கூறுகையில் ‘‘பணத்தை பொறுத்தவரைக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எனக்கு நான்கு கோடிகள் முதல் 6 கோடி ரூபாய் வரை தரவேண்டியுள்ளது. ஆனால் அந்த தொகையை பெற நான் ஒருபோதும் கோரிக்கை வைத்தது கிடையாது. பணம் பெரிய விஷயம் அல்ல.
உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என கடவுள் தீர்மானித்திருக்கிறாரோ, அதுதான் கிடைக்கும். பணத்திற்கு பின்னால் ஓடக்கூடாது. நான் ஒருபோதும் பணத்திற்கு பின்னால் ஓடமாட்டேன்.
நான் எப்போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கிறேன். நான் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கான 17 முதல் 18 வருடங்கள் பணியாற்றியுள்ளேன்’’ என்றார்.

முதன்முறையாக நேபாளத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சந்தீப் லாமிச்சேன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதே கனவு என்று தெரிவித்துள்ளார்.
நேபாள கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சேன். நேபாள அணி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடையாத நிலையில், சந்தீப் லாமிச்சேன் ஐபிஎல் உள்பட முக்கியமான டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.
நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமன், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை லீக்- 2 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் ஓபனிடம் நேபாளம் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் விளையாடிய சந்தீப் லாமிச்சேன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதுதான் கனவு எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சந்தீப் லாமிச்சேன் கூறுகையில் ‘‘நேபாளம் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனவு கனவு. என்னுடைய ஒவ்வொரு சிறிய பங்களிப்பும் நேபாளம் அணிக்கு செல்வதாக இருக்கும். எனது கிரிக்கெட் வாழ்க்கை முடியும் கடைசி நாள் வரை, நேபாளம் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று விரும்புவேன்’’ என்றார்.

அறிமுக பிக் பாஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய டாம் பான்டனை மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பிரிஸ்பேன் ஹீட்.
இங்கிலாந்தின் இளம் பேட்ஸ்மேன் டாம் பான்டன். இவர் முதன்முறையாக தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடினார். முதல் தொடரிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏழு போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று அரைசதங்களுடன் 223 ரன்கள் விளாசினார். ஸ்டிரைக் ரேட் 176.98 ஆகும்.
சிறப்பாக விளையாடியதால் டாம் பான்டனின் ஒப்பந்தத்தை மேலும் இரணடு வருடங்களுக்கு நீடித்தது பிரிஸ்பேன் ஹீட். டாம் பான்டனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. அடுத்த மாதம் தொடங்கும் இந்தத் தொடரை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 348 ரன்னை எட்டிப்பிடித்த நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை கையாளும் திறமை அதிகம் என டெய்லர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 0-5 என பறிகொடுத்தது. கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெறும் நிலையில், கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்தது. 3-வது மற்றும் 4-வது ஆட்டம் சமனில் முடிந்தது.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் 348 இலக்கை எட்டி வெற்றி பெற்றது. முதலில் நியூசிலாந்துக்கு சாதகமான வகையில் ஆட்டம் செல்லவில்லை. அதன்பின் ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து பக்கம் ஆட்டம் வென்றது.
டாம் லாதம் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ராஸ் டெய்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக போட்டியை முடித்துக் கொடுத்தார். அவருக்கு துணையாக வந்த சான்ட்னெர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு நெருக்கடியை கையாளும் திறமை அதிகமாக உள்ளது என்று ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஸ் டெய்லர் கூறுகையில் ‘‘டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆன பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது சிறப்பானது. ஒருநாள் போட்டியில் நாங்கள் கடைசியாக உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினோம். நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடிய வீரர்கள் பலர் அதில் விளையாடியவர்கள். டி20 போட்டியை விட அவர்களுக்கு ஒருநாள் போட்டியில் அதிக அனுபவம் உள்ளது. அந்த அனுபவம் வெளிப்பட்டது’’ என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ஆடும் லெவன் அணியில் மாற்றும் செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடரை அடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 348 இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
2-வது போட்டி ஆக்லாந்தில் நாளைமறுநாள் நடக்கிறது. இந்த போடடியில் இந்தியாவுக்கான ஆடும் லெவனை மாற்ற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும். தற்போதுள்ள நியூசிலாந்து அணி எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரையும் எதிர்கொண்டு விளையாடி விடும்.
ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் திணறுவார்கள். மிடில் ஆர்டர் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும். அதனால்தான் நான் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும் என்று பார்க்கிறேன். கேதர் ஜாதவை ஒருவேளை நீக்கினால், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட முடியும்’’ என்றார்.

கேப்டனாக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி 3-வது இடம் பிடித்துள்ளார் விராட் கோலி.
நியூசிலாந்துக்கு எதிரான நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 51 ரன்கள் எடுத்தார். கேப்டனாக 87 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் விராட் கோலி 21 சதம், 23 அரைசதம் உள்பட 5,123 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டனாக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை (148 ஒருநாள் போட்டியில் 5,082 ரன்கள்) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை தனதாக்கி இருக்கிறார்.
இந்த வகையில் இந்திய முன்னாள் கேப்டன்கள் டோனி (200 ஒருநாள் போட்டியில் 6,641 ரன்கள்) முதலிடத்திலும், முகமது அசாருதீன் (174 ஒருநாள் போட்டியில் 5,239 ரன்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராகி உள்ளதால் அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராகியுள்ளார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கங்குலி, போட்டியின்றி ஒருமனதாக பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவரான ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய பதவிக்காலம் 2021 நவம்பர் 6-ந்தேதி வரை இருக்கிறது. அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் 18-வது தலைவராவார். ஜக்மோகன் டால்மியா இரண்டு முறை தலைவராக இருந்துள்ளார்.

வதோதராவில் நடைபெற்று வரும் பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் அபிநவ் முகுந்த் இரட்டை சதம் அடிக்க தமிழ்நாடு 490 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்துள்ளது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 7-வது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற ஆட்டத்தில் பரோடா - தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பரோடா முதலில் பேட்டிங் செய்தது.
தமிழ்நாடு அணியின் எம். முகமது பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பரோடா 174 ரன்னில் சுருண்டது. எம். முகமது 7 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தமிழ்நாடு நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது.
அபிநவ் முகுந்த் 73 ரன்னுடனும், சூர்யபிரகாஷ் 61 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சூர்யபிரகாஷ் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழந்தாலும் மறுமுனையில் அபிநவ் முகுந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 206 ரன்னில் வெளியேறினார்.
தினேஷ் கார்த்திக் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். 7 விக்கெட் வீழ்த்திய எம். முகமது 56 பந்தில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க தமிழ்நாடு 7 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் பரோடா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

ஹாமில்டன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காத இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியசிலாந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின்போது இந்திய அணி ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் நான்கு ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்காத ஒவ்வொரு ஓவருக்கும் அந்த அணியின் வீரர்களுக்கு போட்டிக்கான சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதனடிப்படையில் இந்திய அணி வீரர்களுக்கு தலா 80 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக கடைசி இரண்டு டி20 போட்டிகளிலும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.