search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    கேப்டனாக அதிக ரன்கள்: கங்குலியை முந்தினார் விராட் கோலி

    கேப்டனாக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி 3-வது இடம் பிடித்துள்ளார் விராட் கோலி.
    நியூசிலாந்துக்கு எதிரான நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 51 ரன்கள் எடுத்தார். கேப்டனாக 87 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் விராட் கோலி 21 சதம், 23 அரைசதம் உள்பட 5,123 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டனாக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை (148 ஒருநாள் போட்டியில் 5,082 ரன்கள்) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை தனதாக்கி இருக்கிறார்.

    இந்த வகையில் இந்திய முன்னாள் கேப்டன்கள் டோனி (200 ஒருநாள் போட்டியில் 6,641 ரன்கள்) முதலிடத்திலும், முகமது அசாருதீன் (174 ஒருநாள் போட்டியில் 5,239 ரன்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×