search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் ஸ்டோய்னிஸ்
    X
    மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் ஸ்டோய்னிஸ்

    பிக் பாஷ் டி20 லீக்: சிட்னி தண்டரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்

    சிட்னி தண்டருக்கு எதிரான சேலஞ்சர் சுற்றில் லர்கின், ஸ்டோய்னிஸ் ஆகியோரின் அதிரடியால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சேலஞ்சர் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேடின்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மேடின்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஸ்டோய்னிஸ் உடன் லர்கின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிட்னி தண்டரின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. ஸ்டோய்னிஸ் 54 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லர்கின் ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் விளாச மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

    பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கவாஜா (23), அலெக்ஸ் ஹேல்ஸ் (8), பெர்குசன் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ரோஸ் 38 பந்தில் 58 ரன்கள் சேர்த்தார். அர்ஜூன் நாயகன் 17 பந்தில் 30 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 16 பந்தில் 21 ரன்களும் சேர்த்த போதிலும் சிட்னி தண்டர் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களே சேர்க்க முடிந்தது. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    நாளைமறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×