search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த இங்கிலாந்து வீராங்கனை நட்டாலி ருத் சீவர்
    X
    அரைசதம் அடித்த இங்கிலாந்து வீராங்கனை நட்டாலி ருத் சீவர்

    முத்தரப்பு பெண்கள் டி20 கிரிக்கெட்: இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியது.
    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். வர்மா 8 ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த ரோட்ரிக்ஸ் 23 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்களும் எடுத்து வெளியேறினர். மந்தனா 45 ரன்கள் சேர்த்தார்.

    மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களே அடிக்க இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள்  சேர்த்தது. பின்னர் 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பெண்கள் அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீராங்கனைகைள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஆனால் 4-வது வீராங்கனையாக களம் இறங்கிய நட்டாலி ருத் சீவர் 38 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கேப்டன் நைட் 18 ரன்களும், வில்சன் ஆட்டமிழக்காமல் 20 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனை கெய்க்வார்டு 3 விக்கெட் வீழ்த்தியும் பயனில்லை.

    இந்தத் தொடரில் ஏற்கனவே இந்தியா முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    இந்தியா மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவும் 2 புள்ளிகள் பெற்றுள்ளது.

    நாளைய போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.
    Next Story
    ×