search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்

    முத்தரப்பு பெண்கள் டி20 கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    மெல்போர்ன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்றைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக ஆடி 57 பந்தில் 93 ரன்கள் எடுத்தார். கேப்டன் மேக் லேன்னிங் 37 ரன்கள் எடுத்தார்.
     
    மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களே அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள்  சேர்த்தது.

    அதன்பின், 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது.

    ஸ்மிருதி மந்தனா 55 ரன்களும், ஷபாலி வர்மா 49 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்னும் அவுட்டாகினர்.

    அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், தீப்தி ஷர்மாவும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், இந்திய அணி 19.4 ஓவரில் 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 2 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 4 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
    Next Story
    ×