என் மலர்

  செய்திகள்

  நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய நசீம் ஷாவை பாராட்டும் சக வீரர்கள்
  X
  நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய நசீம் ஷாவை பாராட்டும் சக வீரர்கள்

  ராவல்பிண்டி டெஸ்ட்: 168 ரன்னில் சுருண்ட வங்காளதேசம்: இன்னிங்ஸ் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராவல்பிண்டி டெஸ்டில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 168 ரன்னில் ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 7-ந்தேதி  தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேசம் அணி 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

  பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

  இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் (100), நட்சத்திர வீரர் பாபர் அசாம் (143) ஆகியோர் சதம் அடிக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 122.5 ஓவரில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்காளம்தேசம் அணி சார்பில் அபு ஜயத், ருபெல் ஹொசைன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

  பின்னர் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த வங்காளதேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 37 ரன்னுடனும், லிட்டோன் தாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

  இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் மொமினுல் ஹக்  41 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோஸ் தாஸ் 29 ரன்கள் சேர்க்க மற்ற இருவரும் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் 168 ரன்னில் சுருண்டது. ஆகவே, பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நசீம் ஷா மற்றும் யாசீர் ஷா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
  Next Story
  ×