search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tennis match"

    • ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
    • பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றினார்.

    அமெரிக்காவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் டஸன் லாஜோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

    மற்ற ஆட்டங்களில் பாகுன்டோ பாக்னிஸ் (அர்ஜென்டினா), பிரன்டன் நகாஷிமா (அமெரிக்கா), எமிலியோ நவா (அமெரிக்கா), குய்டா பெல்லா (அர்ஜென்டினா) உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியன்களான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா)-எம்மா ரடுகானு (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்தினார்கள்.

    2 மணி 33 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் சோபியா கெனின் (அமெரிக்கா), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முசோவா (செக்குடியரசு), ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

    • இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள்.
    • போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் 100 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி வரை சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டி நடக்கிறது.

    14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். முதல் நிலை வீரராக சீன தைபேயை சேர்ந்த சென்சியுன்சின் உள்ளார். அவருக்கு 21 வயது தான் ஆகிறது. பெனிஸ்டன் ரியான் ராயர் (இங்கிலாந்து), ஜேம்ஸ் டக்வொர்த் (ஆஸ்திரேலியா) லுகா நார்டி (இத்தாலி), டிமிடர் குஸ்மனோவ் (பல்கேரியா) செபாஸ்டியன் (ஆஸ்திரியா), மிக்கேல் குஷ்கின் (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள். 3 வைல்டு கார்டு, 6 தகுதி சுற்று வீரர்கள் உள்ளனர்.

    இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு ரூ.14.47 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.8½ லட்சமும் வழங்கப்படும். போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    2019ல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சர் போட்டியில் பிரான்சை சேர்ந்த கோரென்டீன் பட்டம் பெற்றார். அடுத்த சேலஞ்சர் போட்டிகள் பெங்களூரு, புனேயில் நடைபெறும்.

    உப்பளத்தில் டென்னிஸ் போட்டியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் ஓபன் நான் ரேங்கிங் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் புதுவை டென்னிஸ் சங்க தலைவர் பிரதாபன், போத்தீஸ் பொது மேலாளர் அருள்மொழி,குழு உறுப்பினர்கள் சிவகுமார், புகழேந்தி, அமுத கணேசன், கணேஷ், விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 26-ந் தேதி தொடங்கிய இப் போட்டி  முடிவடைகிறது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
    ×