search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி 12ம் தேதி தொடங்குகிறது- 14 நாட்டு வீரர்கள் பங்கேற்பு
    X

    சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி 12ம் தேதி தொடங்குகிறது- 14 நாட்டு வீரர்கள் பங்கேற்பு

    • இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள்.
    • போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் 100 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி வரை சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டி நடக்கிறது.

    14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். முதல் நிலை வீரராக சீன தைபேயை சேர்ந்த சென்சியுன்சின் உள்ளார். அவருக்கு 21 வயது தான் ஆகிறது. பெனிஸ்டன் ரியான் ராயர் (இங்கிலாந்து), ஜேம்ஸ் டக்வொர்த் (ஆஸ்திரேலியா) லுகா நார்டி (இத்தாலி), டிமிடர் குஸ்மனோவ் (பல்கேரியா) செபாஸ்டியன் (ஆஸ்திரியா), மிக்கேல் குஷ்கின் (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள். 3 வைல்டு கார்டு, 6 தகுதி சுற்று வீரர்கள் உள்ளனர்.

    இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு ரூ.14.47 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.8½ லட்சமும் வழங்கப்படும். போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    2019ல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சர் போட்டியில் பிரான்சை சேர்ந்த கோரென்டீன் பட்டம் பெற்றார். அடுத்த சேலஞ்சர் போட்டிகள் பெங்களூரு, புனேயில் நடைபெறும்.

    Next Story
    ×