search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yuvaraj"

    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


    இறுகப்பற்று போஸ்டர்

    இந்நிலையில், 'இறுகப்பற்று' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கே.கே’.
    • இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ரெட்டச்சுழி, சாட்டை திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யுவராஜா 'கெளுத்தி' என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து குழந்தைகளின் வாழ்வியலை கதைக்களமாக கொண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார்.


    கே.கே

    கலர் காத்தாடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு 'கே.கே' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் பேபி.சஞ்சனா மற்றும் மிதுன் ஈஸ்வர் குழந்தை நட்சத்திரங்களாய் களமிறங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


    கேகே

    இப்பாடலை இயக்குனர் யுவராஜா எழுத, ஜித்தின் கே ரோஷன் இசையமைப்பில் விஜய் டிவி புகழ் ரிஹானா மற்றும் சர்வேஷ் பாடியுள்ளனர். மேலும், 'கே.கே' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலை 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்து செவகாட்டு சீமையிலே என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் குரு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசு விவசாயிகளுக்கான நகைக்கடனை முறையாக தள்ளுபடி செய்யவில்லை.
    • ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலைப் பணியை விரைவு படுத்த வேண்டும்.

    கடையநல்லூர்:

    தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா கடையநல்லூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசியக்கொடி

    தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கான நகைக்கடனை முறையாக தள்ளுபடி செய்யவில்லை. ஏமாற்றத்தை மட்டுமே மக்களுக்கு கொடுத்து வருகிறது.

    குற்றாலம்

    மதுரையில் நடைபெற்ற சம்பவம் தவறானதுதான். ஆனால் அதே நேரம் அநாகரீக அரசியலுக்கு வித்திட்டது தி.மு.க.தான். குற்றாலத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

    குற்றாலம் மலையின் மேல்பகுதியில் அணை கட்டி வருடம்தோறும் தண்ணீர் விழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளாண் கல்லூரி

    ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலைப் பணியை விரைவு படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை கொண்டு வர வேண்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்வேலி அமைத்து விவசாய நிலங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். செண்பகவல்லி அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்ப–ட்டுள்ளது. காவல்துறைக்கு பணிச்சுமை அதி கரித்துள்ளது. தமிழகத்தில் விளம்பர ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தென்காசி மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் அய்யாத்துரை, மாநில இளைஞரணி துணைத் தலைவர் கார்த்தி, நகர த.மா.கா. தலைவர் மக்தும், இளைஞரணி தலைவர் பூமாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் தனபால் இந்த வழக்கை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #Yuvaraj
    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் தனபால் வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். யுவராஜ் வருகையை முன்னிட்டு நாமக்கல் கோர்ட்டு வளாகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
    ×