விக்ரம் பிரபு படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது

விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இறுகப்பற்று'.இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.
விக்ரம் பிரபு படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது
Published on

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இறுகப்பற்று போஸ்டர்

இந்நிலையில், 'இறுகப்பற்று' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com