search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்னிஸ் போட்டி"

    • பிரதீபா ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு பிரதீபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நெல்லை புறநகர் மாவட்டம் மூலக்கரைப்பட்டி பேரூர் அ.தி.மு.க. நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    இவரது மகள் பிரதீபா (வயது 13). இவர் நெல்லை ஜவகர் நகரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்த இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்த உள்ள தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கான தமிழக மாநில அளவிலான தெரிவு போட்டியில் பங்கேற்றார்.

    அதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பிரதீபா, தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவி பிரதீபா, நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் தந்தை காளிமுத்து உடன் இருந்தார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜூன் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    களிமண் தரையில் நடைபெறும் போட்டியான பிரெஞ்சு ஓபனில் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2005ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் அறிமுகமான ரபெல் நடால் 14 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதித்து இருக்கிறார். இதுவரை அந்த போட்டியில் 112 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கும் அவர் 3 ஆட்டங்களில் மட்டுமே தோல்வி கண்டு இருக்கிறார்.

    22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காயம் காரணமாக முதல்முறையாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் இந்த முறை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கனிந்து இருக்கிறது. இதேபோல் முன்னாள் சாம்பியனான ஆன்டி முர்ரேவும் (இங்கிலாந்து) போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.439 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.20¼ கோடியும், 2-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்பவர்களுக்கு ரூ.5¼ கோடி பரிசாக கிட்டும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, 2 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
    • பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றினார்.

    அமெரிக்காவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் டஸன் லாஜோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

    மற்ற ஆட்டங்களில் பாகுன்டோ பாக்னிஸ் (அர்ஜென்டினா), பிரன்டன் நகாஷிமா (அமெரிக்கா), எமிலியோ நவா (அமெரிக்கா), குய்டா பெல்லா (அர்ஜென்டினா) உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியன்களான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா)-எம்மா ரடுகானு (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்தினார்கள்.

    2 மணி 33 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் சோபியா கெனின் (அமெரிக்கா), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முசோவா (செக்குடியரசு), ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

    • இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள்.
    • போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் 100 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி வரை சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டி நடக்கிறது.

    14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். முதல் நிலை வீரராக சீன தைபேயை சேர்ந்த சென்சியுன்சின் உள்ளார். அவருக்கு 21 வயது தான் ஆகிறது. பெனிஸ்டன் ரியான் ராயர் (இங்கிலாந்து), ஜேம்ஸ் டக்வொர்த் (ஆஸ்திரேலியா) லுகா நார்டி (இத்தாலி), டிமிடர் குஸ்மனோவ் (பல்கேரியா) செபாஸ்டியன் (ஆஸ்திரியா), மிக்கேல் குஷ்கின் (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள். 3 வைல்டு கார்டு, 6 தகுதி சுற்று வீரர்கள் உள்ளனர்.

    இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு ரூ.14.47 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.8½ லட்சமும் வழங்கப்படும். போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    2019ல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சர் போட்டியில் பிரான்சை சேர்ந்த கோரென்டீன் பட்டம் பெற்றார். அடுத்த சேலஞ்சர் போட்டிகள் பெங்களூரு, புனேயில் நடைபெறும்.

    • இரண்டு நாள் டென்னிஸ் போட்டி துவங்கியது.
    • 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான இரண்டு நாள் டென்னிஸ் போட்டி துவங்கியது.

    கிருஷ்ணகிரி மாவட்ட டென்னிஸ் அசோசியேசன் சார்பில், இரண்டாவது மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. இதில், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஒற்றையர் பிரிவாக நடக்கும் இப்போட்டிகளை மாவட்ட டென்னிஸ் அசோசியேசன் தலைவர் யுவராஜ், தானம்பட்டி சுகாதார ஆய்வாளர் கலைவேந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் போஜிராஜ்வர்மா கலந்து கொண்டார்.

    இதற்கான இறுதிப் போட்டி இன்று (30ம் தேதி) நடக்கிறது.

    • தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையே டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலு ங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் தலைமை‌ வகித்தனர்.

    போட்டிகளை தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன் , தஞ்சாவூர் மாவட்ட டென்னிஸ் கழகத் தலைவர் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.

    பல போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில்கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி முதல் இடத்தையும், கரூர் டிஎன்பிஎல் பள்ளி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், சாரதா சில்ரன்ஸ அகாடமி ஷ்ரத்தா பள்ளிமுதல் இடத்தையும், சென்னை‌ வேலம்மாள்‌வித்யாலய பள்ளி இரண்டாம் இடத்தையும்,

    19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கரூர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும், சென்னை‌ பவன்ஸ்ரா ஜாஜி வித்யாஷ்ரம் 2ம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்டபெண்கள் பிரிவில் சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம்பள்ளி முதல் இடத்தையும், கோவை சச்சிதானந்தா ஜோதிநிகேதன் இன்டர் நேஷனல் பள்ளி 2ம் இடத்தையும் பெற்று வெற்றிபெற்றனர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார். போட்டிகளைரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் துணை முதல்வர் அம்பேத்கர் நடத்தினர்.

    • இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.
    • இளம் வீராங்கனையான லிண்டா முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தப் போட்டியில் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து)- கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதினார்கள். இதில் லினெட் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கேத்தே காயத்தால் விலகினார். இதனால் மக்டா லினெட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்றொரு அரையிறுதியில் லிண்டா புருவர்தோவா (செக்குடியரசு) 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நாடியா போடோரோவை (அர்ஜென்டினா) கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார்.

    இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.

    3-ம் நிலை வீராங்கனையான மக்டா லினெட் இதுவரை 2 டபிள்யூ. டி.ஏ. பட்டத்தை பெற்றுள்ளார். சென்னை ஓபன் போட்டியில் வெற்றி பெற்று அவர் 3-வது பட்டத்தை வெல்வாரா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    30 வயதான மக்டா தற்போது உலக தரவரிசையில் 66-வது இடத்தில் உள்ளார். 2020-ம் ஆண்டில் அவர் 33-வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். கிராண்ட்சிலாம் போட்டியை பொறுத்தவரை மக்டா லினெட் 3-வது சுற்று வரை நுழைந்ததே சிறப்பாகும்.

    ஒட்டு மொத்த டென்னிஸ் போட்டியில் 403 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 309 போட்டியில் தோற்றுள்ளார்.

    இந்த போட்டியில் 28-வது வரிசையில் உள்ள லிண்டா மிகவும் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். 17 வயதான அவர் உலக தர வரிசையில் 130-வது இடத்தில் உள்ளார். இளம் வீராங்கனையான லிண்டா முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    முன்னதாக நடைபெறும் இரட்டையர் இறுதி போட்டியில் டாப் ரோஸ்கி (கனடா)-ஸ்டெபானி (பிரேசில்) ஜோடியுடன் லின்கோவா (ரஷியா)- ஜலாமிட்ஸ் (ஜார்ஜியா) ஜோடி மோதுகிறது.

    • ெசன்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
    • வரும் 12-ந் தேதி தொடங்குகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தார்சாலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க சுற்றுச்சு வர் மருத்துவமனை ஆய்வகம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வருகிற செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. 150 நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் போட்டியை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசும், தமிழக டென்னிஸ் சங்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

    முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மின்விளக்குக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.1.5 கோடியில் மைதானத்த சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மைதானத்தில் ஓராண்டு காலத்துக்குள் 8 புதிய டென்னிஸ் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் பெரும் அச்சுறுத்தை ஏற்படுத்தி வருவதால் நீர் நிலைகளை மாசுபடுத்தாத வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நீர் நிலையை பாது காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாட்டு மரங்களை தமிழகத்தில் நடுவதற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. அதன்படி வனத்துறை அமைச்சகம் சார்பில் வனங்கள் நிறைந்த பகுதிகளில் வெளிநாட்டு மரங்களை அகற்றுவ தற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விரைவில் நடவடிக்ைக மேற்கொள்ளப்படும்.

    விதிகளைமீறி செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்து தவறு நடந்திருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

    ×