என் மலர்
விளையாட்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த வருண் சக்ரவர்த்தி காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.
ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு அணியும் டாக்டர்கள், பிசியோ ஸ்டாஃப்கள் வைத்திருப்பார்கள்.
இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும்போது காயம் ஏற்பட்டால் அந்தந்த அணிகள் உடனடியாக பிசிசிஐ-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கும்போது சில நேரங்களில் பிசிசிஐ மேற்கொண்டு விளையாட அனுமதிக்காது. இதனால் வீரர்களின் காயத்தை ஐபிஎல் அணிகள் சில நேரங்களில் மறைத்து விடுகின்றன.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. இதற்கான அணியை பிசிசிஐ தேர்வுக்குழு தேர்வு செய்தது. காயத்தால் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வு செய்யவில்லை. தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவரை தேர்வு செய்யவில்லை என்று பிசிசிஐ தெரிவித்தது.
ஆனால் ரோகித் சர்மா பிளேஆஃப்ஸ் சுற்றில் களம் இறங்கி விளையாடினார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சகா கடைசி லீக் போட்டியின்போது காயம் அடைந்தார். நேற்றைய போட்டியின்போதுதான் வார்னர் அவருக்கு ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி (2-ம் நிலை) எனத் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவார? என்பது சந்தேகம்.
இந்த நிலையில் இந்திய டி20 அணிக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள வருண் சக்ரவர்த்தி, காயத்தோடுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலயில் பிசிசிஐ அவரை தேர்வு செய்துள்ளதாம்.
அவரால் பந்தை த்ரோ செய்ய முடியாது. 30 யார்டு வட்டத்திற்குள் பீல்டிங் நிற்க வைத்தால் காயம் வீரியம் அடையாது என தேர்வுக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
இதனால் வருண் சக்ரவர்த்தியும் காயத்துடன்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ பிசியோ கொடுக்கும் அறிக்கை அடிப்படையில்தான் வருண் சக்ரவர்த்தியை தேர்வு செய்தார்களாம். இதனால் அணித்தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 27-ந்தேதியும, டி20 தொடர் டிசம்பர் 4-ந்தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந்தேதியும் தொடங்குகிறது.
ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி தவான் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
அபுதாபி:
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான் மிகவும் அபாரமாக ஆடினார். அவர் 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் தவான் இந்த சீசனில் 600 ரன்னை தொட்டார். அவர் 16 ஆட்டத்தில் 603 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
அதிகபட்சமாக 106 ரன் எடுத்துள்ளார். அவர் 2 சதமும், 4 அரை சதமும் தவான் அடித்துள்ளார். அவரது சராசரி 46.38 ஆகும். ஸ்டிரைக் ரேட் 145.65 ஆகும்.
அவர் 68 ரன் எடுத்தால் லோகேஷ் ராகுலை முந்தி முதல் இடத்தை பிடிப்பார். இறுதிப்போட்டியில் தவான் அதை சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் தவான் 78 ரன் எடுத்ததன் மூலம் ரோகித் சர்மாவை முந்தினார். ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார். அவர் 174 இன்னிங்சில் 5,182 ரன் எடுத்துள்ளார்.
ரோகித் சர்மா 194 இன்னிங்சில் 5,162 ரன்னுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாய்:
13--வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப்டம்பர் மாதம் 19--ந் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 3--ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8--வது இடங்களை பிடித்து வெளியேறின.
பிளேஆப் சுற்று 5--ந் தேதி தொடங்கியது. ’குவாலிபையர்-1’ ஆட்டத்தில் மும்பை அணி 57 ரன்னில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் டெல்லி அணி 17 ரன்னில் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதி போட்டியில் நுழைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நாளை (10--ந் தேதி) நடக்கிறது. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்--ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி 6--வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றது. 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை அந்த அணி கைப்பற்றியது.
2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. தற்போது மும்பை அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றப் போவது மும்பையா? டெல்லியா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் மும்பை அணி 3 முறை டெல்லியை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். அதே நேரத்தில் டெல்லி அணி மும்பையை பழிதீர்க்க வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் ஆடும்.
இருஅணியிலும் அதிரடியான வீரர்கள் உள்ளனர். இதனால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் குயின்டன் டிகாக், இஷான்கிஷன் (தலா 483 ரன்), சூர்யகுமார் யாதவ் (461), ஹர்த்திக் பாண்ட்யா (278), போல்லார்ட் (259) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், பும்ரா (27 விக்கெட்), போல்ட் (22) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 சதம், 4 அரை சதத்துடன் 603 ரன்கள் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ரன்), ரிஷப் பண்ட் (287), ஹெட்மயர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ரபடா (29 விக்கெட்), நோர்கியா (20) போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். ஆல் ரவுண்டர் வரிசையில் ஸ்டோனிஸ் (352 ரன், 12 விக்கெட்) முத்திரை பதித்து வருகிறார்.
இரு அணிகளும் நாளை மோதுவது 28-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 27 போட்டியில் மும்பை 15-ல் டெல்லி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.
வங்காளதேச அணியின் கேப்டன் மக்முதுல்லாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
டாக்கா:
வங்காளதேச 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மக்முதுல்லா, வருகிற 14-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) பிளே-ஆப் சுற்றில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக பங்கேற்க இருந்தார். பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு முறை நடத்தப்பட்ட கொரோனா மருத்துவ பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். பி.எஸ்.எல். போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், சீக்கிரம் குணமடைய அனைவரும் தனக்காக பிரார்த்திக்கும்படியும் 34 வயதான மக்முதுல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ், மந்தனா அணியுடன் இன்று மோதுகிறது.
சார்ஜா:
3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வெலோசிட்டி, சூப்பர் நோவாஸ், டிரைல் பிளாசர்ஸ் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின. லீக் முடிவில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன. ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ், டிரைல் பிளாசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாசும், ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து 3-வது முறையாக (ஹாட்ரிக்) பட்டம் வெல்ல முனைப்பு காட்டி வரும் சூப்பர் நோவாஸ் அணி பேட்டிங்கில் சமாரி அட்டப்பட்டு, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. ஏற்கனவே லீக்கில் 2 ரன் வித்தியாசத்தில் பிளாசர்சை பதம் பார்த்து இருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.
டிரைல் பிளாசர்ஸ் அணியில் டியாந்த்ரா டோட்டின், கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, உலகின் ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன், வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி நல்ல பார்மில் உள்ளனர். இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் பீட்சை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
பார்சிலோனா:
பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நோவ் ஸ்டேடியத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பார்சிலோனா அணி, ரியல் பீட்சை எதிர்கொண்டது. இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தொடக்கத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியை பயிற்சியாளர் ரொனால்டு கோமேன் வெளியே உட்கார வைத்தார். முதல் பாதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆன நிலையில் பிற்பாதியில் மெஸ்சியை மாற்று ஆட்டக்காரராக பயிற்சியாளர் கோமேன் களம் அனுப்பினார்.
61-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய மெஸ்சி, 81-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் திணித்து அசத்தினார். கிரிஸ்மான், பெட்ரி ஆகியோரும் கோல் போட்டனர். இதற்கிடையே, கோல் பகுதியில் வைத்து பந்தை கையால் தடுத்ததால் ரியல் பீட்ஸ் அணி வீரர் அய்சா மான்டி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணிக்கு கடைசி 30 நிமிடங்களில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழலிலும் ரியல் பீட்ஸ் வீரர் மோரோன் கார்சியா (73-வது நிமிடம்) கோல் அடித்தார்.
முடிவில் பார்சிலோனா 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் பீட்சை தோற்கடித்தது. கடந்த 5 ஆட்டங்களில் பார்சிலோனா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள பார்சிலோனா 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என்று 11 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது.

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
பாரீஸ்:
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) அரைஇறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் டேனில் மெட்விடேவிடம் (ரஷியா) மோதினார். இதில் முதல் செட்டை ஸ்வெரேவ் கைப்பற்ற, அதன் பிறகு சுதாரித்து சரிவில் இருந்து மீண்ட மெட்விடேவ் கடைசி இரு செட்டை வசப்படுத்தினார். 2 மணி 7 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் மெட்விடேவ் 5-7, 6-4, 6-1 என்ற செட்டில் ஸ்வெரேவை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றார். பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை ருசித்த 4-வது ரஷிய வீரர் என்ற பெருமையை பெற்ற 24 வயதான மெட்விடேவுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையுடன், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. 2-வது இடம் பிடித்த ஸ்வெரேவ் ரூ.1¼ கோடி பரிசும், 600 தரவரிசை புள்ளிகளும் பெற்றார்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் 600 ரன்களைக் கடந்துள்ளார்.
அபுதாபி:
அபுதாபியில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடியின் அதிரடி துவக்கத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 38(27) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். களத்தில் அதிரடி காட்டிய ஷிகர் தவான் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசிய ஷிகர் தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதன்பிறகு சந்தீப் சர்மா வீசிய பந்தில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் சேர்த்து கே.எல்.ராகுல் (670), முதல் இடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலம் ஷிகர் தவான் 600 ரன்களைக் கடந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மொத்தம் 192 ஆட்டங்களில் விளையாடி 5,878 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த தவான் இன்றைய ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மாவை (5,162 ரன்கள்) பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு (5,182 ரன்கள்) முன்னேறியுள்ளார்.
அபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
அபுதாபி:
ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஸ்டாய்னிஸ் 38 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னில் வெளியேறினார். தவான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 78 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. ஹெட்மையர் 22 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் 2 ரன்னிலும், பிரியம் கார்க் 17 ரன்னிலும் அவுட்டாகினர். மணீஷ் பாண்டே 21 ரன்னில்
வெளியேறினார். ஹோல்டர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார். அவர் 45 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அப்துல் சமதுடன் ரஷீத் கான் ஜோடி சேர்ந்தார். சமது 15 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19-வது ஓவரை வீசிய ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அணி டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டு, ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதும் இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
பிளேஆஃப்ஸ் அல்லது நாக்அவட் சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த சாதனை வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் இணைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்ட முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3-வது இடம் பிடித்து பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 131 ரன்களே அடித்தது. பின்னர் 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டியது.
ஐதராபாத் அணியின் வெற்றிக்கு கேன் வில்லியம்சன் அரைசதம் முக்கிய காரணமாக இருந்தது. இன்று குவாலிபையர் 2-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 189 ரன்கள் குவித்தது.
190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணிக்கு வார்னர், மணிஷ் பாண்டே ஏமாற்றம் அளித்தனர். கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் பிளேஆஃப்ஸ் அல்லது நாக்அவுட் சுற்றில் இரண்டு அரைசதம் அடித்த வீரர்கள் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் 2013-ல் வெயின் ஸ்மித், 2014-ல் சுரேஷ் ரெய்னா, 2015-ல் லென்டில் சிம்மன்ஸ், 2016-ல் டேவிட் வார்னர், 2019-ல் வாட்சன் ஆகியோர் இரண்டு அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய சகா காயத்தால் அவதிப்படுவதால், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடினார். கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியபோது தொடைப்பகுதியில் (hamstring) காயம் ஏற்பட்டது.
இதனால் எலிமினேட்டர் சுற்றிலும், இன்று நடைபெற்ற குவாலிபையர்-2 போட்டியிலும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய வீரர்கள் நேரடியாக ஆஸ்திரேலியா செல்கிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சகா இடம் பிடித்துள்ளார்.
தற்போது காயத்தால் அவதிப்படும் சகா ஆஸ்திரேலியா செல்லும் அணியுடன் பயணிப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மற்றொரு விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். டிசம்பர் மாதம் 17-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. சகாவிற்கு 2-ம் நிலை காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயத்திற்கு சுமார் 2 மாதம் வரை சிகிச்சை மேற்கொண்டு ஒய்வு பெற வேண்டியது அவசியம்.
தவான், ஸ்டாய்னிஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுக்க, ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஐதராபாத்துக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
டெல்லி 8.2 ஓவரில் 86 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட் இழந்தது. ஸ்டாய்னிஸ் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். தவான் 26 பந்தில் அரைசதம் அடித்தார்.
அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்த வெளிப்படுத்தினார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 200 ரன்னைத் தொடும் வகையில் சென்றது.
ஆனால், 19-வது ஓவரில் தவான் 50 பந்தில் 78 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். கடைசி ஓவரில் நடராஜன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.
ஹெட்மையர் 22 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.