என் மலர்
செய்திகள்

சகா
காயத்தால் அவதிப்படும் சகா: ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவாரா?
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய சகா காயத்தால் அவதிப்படுவதால், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடினார். கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியபோது தொடைப்பகுதியில் (hamstring) காயம் ஏற்பட்டது.
இதனால் எலிமினேட்டர் சுற்றிலும், இன்று நடைபெற்ற குவாலிபையர்-2 போட்டியிலும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய வீரர்கள் நேரடியாக ஆஸ்திரேலியா செல்கிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சகா இடம் பிடித்துள்ளார்.
தற்போது காயத்தால் அவதிப்படும் சகா ஆஸ்திரேலியா செல்லும் அணியுடன் பயணிப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மற்றொரு விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். டிசம்பர் மாதம் 17-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. சகாவிற்கு 2-ம் நிலை காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயத்திற்கு சுமார் 2 மாதம் வரை சிகிச்சை மேற்கொண்டு ஒய்வு பெற வேண்டியது அவசியம்.
Next Story






