என் மலர்
விளையாட்டு
நியூசிலாந்து தொடருக்கு முன் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பாபர் அசாமுக்கு அக்ரம் ஆதரவு கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அசாம். திறமையான பேட்டிங்கால் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ளார். இவரது திறமையை பார்த்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக அசார் அலி இருந்தார். ஒரு வருடம்தான் அவரை கேப்டனாக நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. விரைவில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் மற்றும 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக, அதாவது வருகிற 11-ந்தேதிக்கு பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார். பாபர் அசாமை கேப்டனாக நியமிக்கலாம் என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘முன்னாள் வீரராக என்னிடம் கேட்டால், டெஸ்ட் கேப்டனாக பாபர் அசாமை நியமிக்க சொல்வேன். ஏனென்றால் அவர் பாகிஸ்தான் அணியின் எதிர்காலம். அவரால் நீண்ட காலம் விளையாட முடியும்’’ என்றார்.
அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 15-ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ குழந்தை பிறக்க இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3,4-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருக்க விராட் கோலி பிசிசிஐ-யிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘‘இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021-ல் குழந்தை பிறக்கப்போகிறது’’ என குறிப்பிட்டிருந்தார்.
ராவல்பிண்டியில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியால் 134 ரன்களே அடிக்க முடிந்தது. ரியான் பர்ல் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 32 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் ரஃப், உஸ்மான் காதிர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் பஹர் ஜமான் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து கேப்டன் பாபர் அசாம் உடன் ஹைதர் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர்.
பாபர் அசாம் 28 பந்தில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹைதர் அலி ஆட்டமிழக்காமல் 43 பந்தில் 66 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 15.1 ஓவரிலேயே 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தான் 2-0 எனத் தொடரை கைப்பற்ற முன்னிலை வகிக்கிறது.
அபு தாபியில் நடைபெறும் குவாலிபையர் 2-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபு தாபியில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
1. வார்னர், 2. கோஸ்வாமி, 3. மணிஷ் பாண்டே, 4. பிரியம் கார்க், 5, ஜேசன் ஹோல்டர், 6. அப்துல் சமாத், 7. ரஷித் கான், 8. ஷாபாஸ் நதீம், 9. சந்தீப் சர்மா, 10. டி. நடராஜன், 11. கேன் வில்லியம்சன்,
டெல்லி கேப்பிடல்ஸ் அணி:
1. தவான், 2. ஹெட்மையர், 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின், 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10, நோர்ஜே, 11. பிரவீன் டுபே.
இந்திய அணிக்காக விளையாட தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக தொடக்க வீரராக ஐபிஎல்-லில் விளையாடிய தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். பெங்களூர் அணியில் அதிகபட்ச ரன்களை சேர்த்தவர் படிக்கல் மட்டுமே. இந்த ஐபிஎல்லில் 473 ரன்களை எடுத்துள்ளார். இது அந்த அணியின் தூண்களான கோலி, ஏபி டிவில்லியர்ஸைவிட அதிகம்.
ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ‘‘படிக்கல் திறமையான வீரர். டி20 கிரிக்கெட் என்பது அவருடைய முதல்கட்டம்தான். நான் அவர் ஈடன் கார்டனில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி பார்த்திருக்கிறேன். அந்தப் போட்டியில் மேற்கு வங்கமும், கர்நாடகமும் அரையிறுதியில் மோதியது.
அதில் படிக்கல் மிகச்சிறப்பாக விளையாடினார். வேகப்பந்து வீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டு விளாசுகிறார். இன்னும் சில சீசன்கள் போகட்டும் நிச்சயம் அணியில் இடம்பெறுவார். இந்தியாவுக்கும் தொடக்க வீரர்கள் தேவைப்படுகிறார்கள்’’ என்றார்.
மேலும் ‘‘ஐபிஎல் தொடர் பாதுகாப்பு வளையத்திற்குள் நடத்தி வெற்றிப்பெறும் என நினைக்கவே இல்லை. இதற்கு முன்பு இத்தகைய சூழலை எதிர்கொண்டதில்லை. ஆனால் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடர் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நடத்தப்பட்டது எங்களுக்கு பெரிய பாடமாக இருந்தது. முதலில் சிஎஸ்கேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது நாங்கள் பயந்துபோனோம். ஆனால் இப்போது எல்லாமே நல்லபடியாக நடந்து முடிய இருக்கிறது’’ என்றார்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் படத்திற்கு கிறிஸ் கெய்ல் வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர். இவர் விளையாடும்போது ஆர்சிபி அணியில் சாஹலும் இடம்பிடித்திருந்தார். சாஹல் எப்போதுமே ஜாலியாக பேசக்கூடியவர், பழகக் கூடியவர்.
தற்போது பஞ்சாப் அணிக்காக கெய்ல் விளையாடி வருகிறார். பஞ்சாப் அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்டது. ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்திடம் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்த போட்டிக்குப்பின் சூரியன் மறையும் நேரத்தில் கடற்கரையில் இருப்பதுபோன்ற படத்தை சாஹல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு கிறிஸ் கெய்ல், ‘‘தற்போது நீங்கள் வீட்டிற்கு செல்ல முடியும்’’ என வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது போட்டியின்போது தகாத வார்த்தையை பயன்படுத்தியதால் அபராதத்திற்கு உள்ளானார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் உள்ளூர் தொடரான குயைத்-இ-ஆசாம் டிராபி போட்டியில் சிந்து பர்ஸ்ட் லெவன் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
போட்டியின்போது நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து தகாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஆன்-பீல்டு அம்பயர்கள் புகார் ஆளிக்க, போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்டிரல் பஞ்சாப் பேட்ஸ்மேன் உஸ்மான் சலாவதீனுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கோப்பையை வென்றால் புட்டா மொம்மா டான்ஸ் ஆடுவேன் என்று டேவிட் வார்னர் ஐதராபாத் அணி ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இவர் கொரோனா காலத்தில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஆடல், பாடல் என டிக்டாக்கில் கலக்கினார். வார்னர் அவரது மனைவியுடன் சேர்ந்து தெலுங்கின் பிரபல பாடலான ‘புட்டா பொம்மா’ விற்கு ஆட்டம் போட்டிருந்தார். இதில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் உள்ளார். கடைசி நான்கு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இன்று குவாலிபையர் 2-ல் டெல்லியை வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றால் ‘புட்டா பொம்மா’ டான்ஸ் ஆட்டம் உண்டு என வார்னர் ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
இன்றைய போட்டியில் ஜெயிக்கும் அணிக்கு கேன் வில்லியம்சன் அல்லது தவான்தான் முக்கிய பங்களிப்பாக இருப்பார்கள் என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் குவாலிபையர்-2 இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்.
இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. எலிமினேட்டர் சுற்று ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி 131 ரன்கள் அடித்தது. கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியும் லோ ஸ்கோர் போட்டியாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கேன் வில்லியம்சன் அல்லது ஷிகர் தவான் ஆகியோர் முக்கிய பங்களிப்பார்கள் என்ற இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘தவான் மிகப்பெரிய போட்டிக்கான வீரர். அவர் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ்ஷிப்பில் விளையாடியவர். எப்போதெல்லாம் அவருடைய தேவை அணிக்கு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாக விளையாடி உள்ளார். அணிக்கு என்ன தேவை என்பது அவருக்கும் தெரியும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அங்குள்ள வீரர்களுக்கு எதிராக விளையாடியுளு்ளார். ரஷித் கானை எப்படி எதிர்கொள்வது என்பது அவருக்குத் தெரியும். டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றால், தவான் மிகச்சிறந்த வீரராக இருப்பார் என நம்புகிறேன்.
டேவிட் வார்னர் எப்படி ஐதராபாத் அணிக்கு முக்கியமானவரோ, அதேபோன்று கேன் வில்லியம்சனும் முக்கியமானவர். ஆர்சிபி-க்கு எதிராக முக்கிய நெருக்கடி காலங்களில் கேன் வில்லியம்சன் விளையாடியது போன்று மற்றவர்களால் விளையாட முடியாது.
ஆகவே, தொடர்ச்சியாக ஐந்து போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெறும் என்றால், முக்கிய துருப்புச்சீட்டாக கேன் வில்லியம்சன் இருப்பார்’’ என்றார்.
2019 சீசனில் ஐபிஎல் சாம்பியன் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கிய நிலையில், இந்த முறை அதற்கு பாதிக அளவுதான் வழங்க இருக்கிறார்களாம்.
சர்வதேச அளவில் மிகவும் பணக்கார டி20 லீக் கிரிக்கெட் என்றால் அது ஐபிஎல்-தான். வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்து ஒவ்வொரு அணிகளும் விளையாடுகிறது. ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். கடந்த சீசனில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 10 கோடி ரூபாய்தான் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிசிசிஐ-க்கு அதிக அளவில் வருமானம் கிடைக்கவில்லை. ஏற்கனவே செலவுகளை குறைத்து வருகிறது. அதன் அடிப்படையில் பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
2-வது இடம் பெறும் அணிக்கு 12.5 கோடி ரூபாய்க்கு பதில் 6.25 கோடி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் ஆரஞ்ச் கோப், பர்பிள் கேப் வெல்லும் வீரர்களுக்கு, எமர்ஜிங் வீரர்களுக்கு கடந்த ஆண்டு பரிசுத் தொகை வழங்கப்பட்டது இந்த முறை வழங்கப்படுவது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
கடந்த முறை 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி உறுதி அளித்துள்ளார்.
அபுதாபி:
இந்தியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். போட்டி ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சில நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். 2021 சீசனுக்கு போட்டிகள் ஏப்ரல்-மே மாதங்களில் உறுதியாக நடைபெறும். 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆண்டு மட்டுமே அங்கு நடத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா நடத்துகிறது. இதைபோல உள்ளூர் போட்டிகளும் விரைவில் தொடங்கப்படும். கொரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையம் அமைத்து போட்டிகள் நடத்தப்படும்.
இந்திய அணியில் விளையாட படிக்கலுக்கு வாய்ப்பு இருக்கிறது. அவர் ஒரு திறமையான வீரர். 20 ஓவர் போட்டி என்பது அவருக்கு முதல் கட்டம்தான். இன்னும் சில சீசன்கள் போகட்டும். நிச்சயம் அணியில் இடம்பெறுவார். இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க தேவை இல்லை வீரர்களைதான் மாற்ற வேண்டும் என்று காம்பீருக்கு சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
புதுடெல்லி:
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஐ.பி.எல். கனவு இந்த ஆண்டும் தகர்ந்தது. அந்த அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்று வெளியேறியது.
இதை தொடர்ந்து பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் காம்பீர் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது ‘2013-ம் ஆண்டு முதல் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார்.இந்த 8 ஆண்டுகளில் அவரால் ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
8 வருடங்கள் என்பது நீண்டகாலம். தோல்விக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும். பெங்களூர் அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’என்றார். இந்த நிலையில் விராட் கோலிக்கு முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க தேவை இல்லை என்று அவர் காம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஷேவாக் கூறியதாவது:-
கேப்டன் பதவியில் கோலி இந்திய அணிக்கு ஒருநாள் போட்டி, 20 ஓவர் மற்றும் டெஸ்டில் வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இந்திய அணியில் சாதித்த அவரால் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட முடியாதது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும்.
கேப்டனுக்கு ஒரு நல்ல அணி என்பது மிகவும் முக்கியமானது. எனவே பெங்களூர் அணி நிர்வாகம் கேப்டன் பதவியிலிருந்து கோலியை நீக்கக் கூடாது.
அணியை எப்படி மேம்படுத்துவது என்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும். பெங்களூர் அணியில் மாற்றம் தேவை. தகுதி வாய்ந்த வீரர்களை அணிக்கு கொண்டுவர வேண்டும். வீரர்களின் மாற்றம்தான் பெங்களூர் அணிக்கு அவசியம் ஆனது. கேப்டனை நீக்கினால் எந்த தீர்வும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






