என் மலர்
செய்திகள்

ஐபிஎல் கோப்பை (கோப்புப்படம்)
இந்த முறை ஐபிஎல் சாம்பியன் அணிக்கு இவ்வளவுதான் பரிசுத் தொகையாம்...
2019 சீசனில் ஐபிஎல் சாம்பியன் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கிய நிலையில், இந்த முறை அதற்கு பாதிக அளவுதான் வழங்க இருக்கிறார்களாம்.
சர்வதேச அளவில் மிகவும் பணக்கார டி20 லீக் கிரிக்கெட் என்றால் அது ஐபிஎல்-தான். வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்து ஒவ்வொரு அணிகளும் விளையாடுகிறது. ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். கடந்த சீசனில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 10 கோடி ரூபாய்தான் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிசிசிஐ-க்கு அதிக அளவில் வருமானம் கிடைக்கவில்லை. ஏற்கனவே செலவுகளை குறைத்து வருகிறது. அதன் அடிப்படையில் பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
2-வது இடம் பெறும் அணிக்கு 12.5 கோடி ரூபாய்க்கு பதில் 6.25 கோடி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் ஆரஞ்ச் கோப், பர்பிள் கேப் வெல்லும் வீரர்களுக்கு, எமர்ஜிங் வீரர்களுக்கு கடந்த ஆண்டு பரிசுத் தொகை வழங்கப்பட்டது இந்த முறை வழங்கப்படுவது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
கடந்த முறை 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story






